சாதனைகள் பலவிதம்

இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை! அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.

Continue reading “சாதனைகள் பலவிதம்”

கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

விண்மீன்களின் வாழ்க்கை என்பது அதன் இறப்போடு முடிவதில்லை. விண்மீன்கள், தனது எரிபொருளை, அதாவது ஐதரசனை முடிக்கும் வரை முதன்மைத் தொடர் பருவத்திலேயே இருக்கும். பொதுவாக விண்மீனில் இருக்கும் ஐதரசன் அனைத்தும் ஹீலியமாக மாறியவுடன் விண்மீனின் அணுக்கருச் செயற்பாடு முடிவுக்கு வருகிறது, இந்நிலையில் விண்மீனின் அளவை தக்கவைத்திருக்கும் வெளிநோக்கிய அழுத்த சக்தியும் இல்லாமல் போகவே, விண்மீனின் திணிவினால் உருவாகிய ஈர்ப்புசக்தியை வெல்லமுடியாமல் விண்மீனின் மையப்பகுதி சுருங்கத் தொடங்கும். இவ்வாறு சுருங்குவதால் மையப்பகுதியின் வெப்பநிலை மேலும் அதிகரித்து விண்மீனின் மேற்பகுதி வெளிநோக்கி விரிவடையும். இப்படி விரிவடைவதால் இந்த வெளிப்பகுதியின் வெப்பநிலை குறைவடையும். இவ்வாறு விரிவடையும் விண்மீன் சிவப்பரக்கன் (red giant) எனப்படும். Continue reading “கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு”

சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!

டிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன? சூறாவளி ஏன் வருகிறது? அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சாதாரண குடிமகன்களான நமக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதில்லை.

எல்லோருக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் இவற்றைப் புரிய வைக்கவே இந்த கட்டுரை.

Continue reading “சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!”

சுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி

மட்டக்களப்பினை பொறுத்தவரை சுனாமி என்றதும் அடுத்து ஞாபகம் வருவது நாவலடிப் பிரதேசம் தான். இப்போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள்.

படங்கள் : அமர்நாத்

கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று முன்னர் பார்த்தோம். ஆகவே விண்மீன்களின் வாழ்கையைப்பற்றி கொஞ்சம் அலசுவோம். Continue reading “கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு”

இதுவும் யாழ்… இது தான் யாழ்…

நல்லை நகர் நாவலர்
பதிதனை காண நினைத்த நேரம்
விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் …
அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு
கிடைத்து விட்டது அதிட்டம்

தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன்
தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே
அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல
அவர்களின் பாசத்தையும் தான்.

நாட்டுக் கோழியும் நறுக்கப்பட்ட நண்டுக்காலும்
சூப்புவதற்கு ருசியாகத்தான் இருந்தது.
“கள்” குடிக்க வேண்டுமென்ற
கொள்ளை நாள் ஆசையும் தீர்ந்தது
இனி என் கட்டையும் வேகும்.

கோயிலென்றும் குளமென்றும்
தெருவுக்குத் தெரு விடாது மணக்கிறது
இந்துவின் மண் வாசம்.

நெய்தல் நிலத்திலே நிலை கொண்ட
நயினைத் தாயின் அருள்- எங்கள்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது.

மட்டு நகர் மான்மியம் புகழ்
F.X.C நடராச ஐயாவைப் பெற்றெடுத்த
காரை நகர் மண்ணில் என் கால்கள்
பதிந்ததையெண்ணி அடைந்தது
மனது மட்டற்ற மகிழ்ச்சி.
ஈழந்துச் சிதம்பரம் பல அவசியங்களை
ரகசியமாய் கூறி நிற்க…

முறிந்த பனைகள் முடிந்த கதையாகாமலிருக்க
முட்டி மோதி வளர்கின்றன புதிய பனைகள்
காட்சிகளும் மனசாட்சிகளும்
தேடுகின்றன விடியலை..!?

கதிரேசபிள்ளை காண்டீபன்
படம்: இணையம்

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்
உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்
பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு
தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே
வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்
அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே
தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த
நிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே
நட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்
வானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு
தெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்
ஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே!

சிறி சரவணா

படம்: இணையம்

கணிதமேதை சீனீவாச ராமானுஜன்

குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கணித மேதை ராமனுஜன்.

Continue reading “கணிதமேதை சீனீவாச ராமானுஜன்”

கவிஞன் சஞ்சிகை

ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து தனது 22 இதழ்களை உதிர்த்துள்ளது.

Continue reading “கவிஞன் சஞ்சிகை”

சினிமாவும் சமுதாயமும்!

இன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருகின்றோம். வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கை ஒரு பக்கம் என்றாலும், வாழ்வியல் நிகழ்வுகளில் எமது பங்களிப்பின் வீதம் மிகச்சரியாக குறைந்துகொண்டே செல்கிறது. எதிலும் ஒரு பொறுப்பற்ற தன்மையை காணக்கூடியதாக இருகின்றது, ஒரே ஒரு விடயத்தை தவிர, அதான் சினிமா.

Continue reading “சினிமாவும் சமுதாயமும்!”

வாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்

வாகனேரிக்குச் சென்றிருந்த வேளை அங்கே இருந்த கைப்பணிப் பொருட்களை படமெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பாடசாலை ஞாபகங்களை மீட்டித் தந்தது.

Continue reading “வாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்”

மட்டக்களப்பு வாவியின் அழகு

மட்டக்களப்பின் வாவி ஒரு அழகியல் பொக்கிஷம், சூரிய உதயத்தின்போதும், சூரியன் மறையும்போதும் எடுத்த சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.

படத்தை கிளிக் செய்வதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.

படங்கள்: சிறி சரவணா

காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே
வானவில் ஒன்று அழகாக வரலாம்
தொலைத்த சொல்லை அது தேடி வரலாம்
காற்றின் தூதுவனாய் மழைத்துளியும் சேர
உதய சூரியனின் கீற்றொண்டு பட்டு
சொல் விழுந்த இடத்தை தடம் போட்டுக்காட்ட
விழுந்த சொல்லை நான் பற்றிக்கொண்டேன்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று வேண்டும்
இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டாம்
விழுந்த சொல்லை கோர்வையில் இணைத்து
இதயத்தின் படபடப்பை அமர்முடுகி வைத்து
காற்றோடு கதை பேச தயாராகிவிட்டேன்

சிறி சரவணா

படம்: இணையம்

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்
கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்  அவர்களைப் பற்றி

கவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக்கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன். Continue reading “கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்”

கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற்பியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சூப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ நமக்கு சொல்கிறது. Continue reading “கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?”

தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

தொழிற்கல்வி
தொழிற்கல்வி

இன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

Continue reading “தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்”

ஒளியின் ஊடுருவல்

W.O._2008.0012

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம்
இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த
நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்?
அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும்
சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை
வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே
வரைந்தவன் வரைந்துவிட்டான்,
காலத்தில் அவற்றை பதித்துவிட்டான்
பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட வண்டுபோல
மயங்கிக் கிறுகிறுக்கும் என அவன் நினைத்தானோ
நினைத்தது நிலைத்தது, கதிர்களின் கீற்றுக்கள்
மீண்டும் இலைகளில் முகங்களை வரைய
நாளையும் வரவேண்டுமே

சிறி சரவணா

படம்: இணையம்

கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

ஐன்ஸ்டீன் 1915 இல் பொதுச்சார்புக் கோட்பாட்டை வெளியிட்டு சிலமாதங்களில், கணிதவியலாளரான கார்ல் சுவார்சைல்ட், ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் சமன்பாடுகளை தீர்க்கும்போது, “கருப்பு விண்மீன்” போன்றதொன்றின் பண்புகளைக்கொண்ட ஒரு பொருள் இருக்கவேண்டு மென பொதுச்சார்புக் கோட்பாடு வெளிப்படுத்தியதை கண்டறிந்தார். ஆனால் 1930கள் வரை விஞ்ஞானிகள் கருந்துளைகள் பற்றி பெரிய ஈடுபாடு காட்டவில்லை. Continue reading “கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்”

மல்லிகை

மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை
எவரையும்  கவரும் மணம்
அவள் தலையில் ஒரு அணை போல்
குழந்தையிடம் வளரும் கலை போல்
தினம் தினம் மலரும்
மல்லிகை

உச்சக்கட்ட ஞானோதயம்

ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம் சார்ந்தது, மனித மனத்தின் ஆற்றலை மனிதனுக்கு புரியவைக்கக்கூடிய ஒரு நிலை அவ்வளவுதான்.

Continue reading “உச்சக்கட்ட ஞானோதயம்”