கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

எழுதியது: சிறி சரவணா

கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின்றன என்று பார்க்கலாம்.

Continue reading “கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?”

GPS – ஏன், எதற்கு, எப்படி!

எழுதியது: சிறி சரவணா

ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை – எங்கே இருக்கிறோம் என்பதும், தொலைந்துவிடாமல் மீண்டும் அவனது குழுவிடம் மீண்டும் வரவேண்டுமே என்பதும் ஆகும்.

பழக்கப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் புது இடங்களில்? ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன்! இன்றும் புதிய இடங்களுக்கு போகும் போது, செல்லும் பாதையை ஒரே தடவையில் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது  முடியாத காரியமாக தான் இருக்கிறது, என்ன செய்ய ??!!

Continue reading “GPS – ஏன், எதற்கு, எப்படி!”

கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நேரம் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? சாதாரண வாழ்வில் எமக்கு நேரம் என்பது தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வஸ்து! என்னதான் நடந்தாலும் நேரம் என்பது அதன் போக்கில் போய்கொண்டே இருக்கும். ஒவ்வொரு செக்கன்களும் கழிந்துகொண்டே இருக்கும். சென்ற நேரத்தை திரும்பி பெற முடியாதில்லையா? Continue reading “கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை”

கருந்துளைகள் 08 – வரலாறு மாறுமோ?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நமது சூரியனை விட 1.4 தொடக்கம் 3 மடங்கு திணிவுள்ள மையப்பகுதியை கொண்ட விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறும் என்று நாம் பார்த்தோம். அப்படியென்றால் ஒரு விண்மீனின் மையப்பகுதியின் திணிவு 3 சூரியத் திணிவைவிட அதிகமாக இருப்பின் என்ன நடக்கும்?

ஒரே வார்த்தையில் அது கருந்துளையாகிவிடும் என்று சொல்லவிடாமல், அது எவ்வாறு நடைபெறுகிறது என்று படிப் படியாக பார்போம். Continue reading “கருந்துளைகள் 08 – வரலாறு மாறுமோ?”

வாசிப்பு முக்கியம்

எழுதியது: சிறி சரவணா

நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும்.

வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால், வாழ்க்கை என்பது நம்மை விட்டு தனிப்பட்ட வஸ்து ஆகிவிடுகிறது அல்லவா? நாம் ரயிலில் பயணிப்பது போல – ரயிலும் நாமும் ஒன்றல்லவே. ஆக நான் வாழ்வை அப்படி பார்க்கவில்லை.

Continue reading “வாசிப்பு முக்கியம்”

முடிவில்லாப் பயணம் 1 – 8

முன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு  ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா


“கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி”

பகுதி 1 

பெப்ரவரி 14, 1997

“நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை பிடிக்கிறே? கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே” குமார், கணேஷை பார்த்தவரே நின்றுகொண்டிருந்தான்.

“நீயுமாடா? உனக்கு தெரியாதா மதுவை பற்றி, சும்மா அவளை சீண்டிப் பார்க்கிறதுதானே..” என்று வடிவேலு காமடி போல பல்லைக் காட்டி சிரித்தான் கணேஷ்.

“ஒரு நாளைக்கு காண்டாகப் போறா, அன்னைக்கு இருக்குடீ உனக்கு…” என்று சொல்லியவாறே அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்த அந்த ஆறு இஞ்சுக்கு ஆறு இன்ச் சதுரவடிவான கல்லை சற்றே உள்ளுக்கு தள்ளினான் குமார். அதுவும் லாவகமாக ஒரு இன்ச் உள்ளே சென்றதும், புஸ் என சிறிய சத்ததுடன் காற்றோடு கலந்த தூசும் அந்த கல் இடுக்கில் இருந்து வெளியே வந்தது!

கணேஷின் கண் விரிய, முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை.. குமாருக்கு சொல்லவே வேண்டாம், “டேய், திறப்புக் கல்லை கண்டுபிடிச்சிடோம்!!” என்றான் குதுகலமாக!!

அதுசரி யாரிந்த குமார், கணேஷ்? அதென்ன கல்? என்ன செய்துகொண்டிருகிரார்கள்? அதை பார்க்க நாம் ஒரு சில மாதங்கள் வரை முன்னோக்கி செல்லவேண்டும். செல்வோமா?

Continue reading “முடிவில்லாப் பயணம் 1 – 8”

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03

எழுதியது: முருகேசு தவராஜா

இந்நாட்டிலே, சாதாரண வகையைச் சேர்ந்த சாராயம் அதிகளவு விற்பனையாகும் பிரதேசத்தில் மட்டக்களப்பும், மன்னாரும் முன்னிலையில் உள்ளன. இது பற்றிய தகவல்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

பஞ்சமா பாதகங்களையுப் பக்குவப்படுத்திய பழச்சாறு போன்று ஆக்கி அனுபவித்த சில அரசிகள், மனித இரத்தத்தில் குளித்துக் களித்ததாயும், இவ் அழகிகள் பாலிலே குளித்து குதூகலித்ததாகவும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அது விரலிற்கு தகுந்த வீக்கமாகவும் கொள்ளப்படுகிறது. இங்கு யதார்த்த வாழ்வின் சில அம்சங்கள் தொட்டுச் செல்லப்பட்டன.

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03”

பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்

 

BBC Future இணையத்தளம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிக குறைந்த வெப்பநிலையில் இருந்து மிக மிக அதிகமான வெப்பநிலைவரை உள்ள பொருட்களையும், அமைப்புக்களையும் விளக்கும் விதமாக அழகான ஒரு விளக்கப்படத்தை பிரசுரித்துள்ளது. எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்கவாறே அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading “பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்”

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02

அடிநிலை மக்களின் கொள்ளளவு தனியொரு குடும்பத்தைப் பொறுத்து மிகச் சிறிதாய் இருப்பினும், உலகலாவிய ரீதியில் அவர்களின் தொகை பெரிய அளவில் இருப்பது தவிர்க முடியாததொன்றாகவே உள்ளது. அண்மையில் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தி வரும் எனக் கருதலாம்.

(வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெற்ற நண்பர் மூலம் கிடைத்த தகவல்)

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02”

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01

மனித வாழ்வே மயக்கமுடையது. அதிலே மதுவும் சேர்ந்துவிட்டால், அது மாபெரும் நரகமேயாகும். மனிதன், ஒரு புறத்தில் கடந்த காலங்களின் சலனங்களையும், எதிர்கால ஏக்கங்களையும் எந்நேரமும் மனதில் சுமந்துகொண்டு பகல்நேரச் சிறையிலே வாழ்கின்றான். மறுபுறத்தில் நிறைவேறா எண்ணங்களின் படிமங்களை நித்திரையில் கனவாகக் கண்டு கற்பனையில் மிதந்து கொண்டு குழம்பிய நிலையில் வாழ்கின்றான். உண்மையிலே இவ்வாறான வாழ்வு வாழ்வல்ல.

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01”

பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி

இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.

Continue reading “பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி”

கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நியூட்ரான் விண்மீன்கள் மிகுந்த காந்தப்புலத்தை கொண்டவை, சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் அதிகூடிய காந்தப்புலத்தை கொண்ட அமைப்பாக இந்த நியூட்ரான் விண்மீன்களே காணப்படுகின்றன. அதிலும் மக்னட்டார் (Magnetar) எனப்படும் நியூட்ரான் விண்மீன்கள் பூமியின் காந்தப்புலத்தைப்போல குவார்ட்ட்ரில்லியன் மடங்கு (குவார்ட்ட்ரில்லியன் என்பது, 1 இற்குப் பின்னால் 15 பூஜியங்கள் வரும் இலக்கம்!) அதிகமான காந்தபுலத்தை கொண்டுள்ளன.

ஏன் இந்த நியூட்ரான் விண்மீன்கள் இப்படி அதிகூடிய காந்தப்புலத்தை கொண்டுள்ளன என்று பார்க்கலாம். Continue reading “கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்”

பூமியைப் போலவே பல கோள்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானவை நமது வியாழனைப் போல மிகப்பெரிய கோள்கள். அனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், பிற விண்மீன்களை சுற்றிவரும் பூமியைப்போல சிறிய கோள்களையும் கண்டறிய வழிவகுத்தன. இன்று நமக்கு பூமியின் அளவில் உள்ள கோள்கள், மற்றும் பூமியை விட சில மடங்குகள் மட்டுமே பெரிய கோள்கள் நூற்றுக்கணக்கில் தெரியும்!

Continue reading “பூமியைப் போலவே பல கோள்கள்”

விபுலாநந்தம் – தெய்வீகம்

காரேறுமூதூர்க் களக்கொழுந்தே, நாம் வாழும் கிழக்குதித்த ஞான சூரியனே உலகிற்கு தமிழ் ஒளி பரப்ப இங்குதித்த உத்தமனே வாழ்க.

குழந்தைப் புலவனாக, ஈழத்தின் முதல் தமிழ் பண்டிதனாக பயிற்றப்பட்ட ஆசிரியனாக, விஞ்ஞான பட்டதாரியாக, பன்மொழி புலவனாக மூவாசையும் துறந்தோனாக, ஆராய்வளனாக, தமிழர் மனதிலெல்லாம் பதிந்த அறிஞர்க்கு அறிஞனாக நமது முதுசமாக தமிழ் முனிவனாக, எவ்வாறு உயர்ந்தான் விபுலாநந்தன் எனும் பேராசான். அது திருவருளே அன்றி வேறில்லை. Continue reading “விபுலாநந்தம் – தெய்வீகம்”

“கண்ணாமூச்சி ரே…… ரே………”

 

“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே பல்கலைக்கழகம் பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி. உழைப்பிற்கேற்ற பலனும் கிடைத்தது. Continue reading ““கண்ணாமூச்சி ரே…… ரே………””

“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. அதாவது நாமும் வாழ்ந்து, நம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைப்போம் என்பதாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது.

Continue reading ““மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….””

கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

இயற்கையின் விநோதங்களில் கருந்துளையைப் போலவே, இன்னொரு முடிவில் தொக்கி நிற்பது இந்த நியூட்ரான் விண்மீன்கள். சூரியனை விட பெரிய விண்மீன்கள், கிட்டத்தட்ட அந்த விண்மீன்களின் மையப்பகுதி, நமது சூரியனைப்போல 1.4 தொடக்கம் 3 மடங்கு திணிவுள்ளதாய் அமையும்போது, அதனது எரிபொருளை முடித்துக்கொண்டு மீயோளிர் விண்மீன் பெருவெடிப்பாக (சூப்பர்நோவா) சிதற, அதன் மையப்பகுதியில் எஞ்சி இருப்பது இந்த நியூட்ரான் விண்மீனாகும். Continue reading “கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்”

மனதை வெல்

ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தினான். மிகத்தொலைவில் இருந்த இலக்கை மிகத்துல்லியமாக குறிவைத்து அடித்தான், அவனது அடுத்த அம்பு, முதல் எய்த அம்பை பிளந்து கொண்டு சென்றது. ஜென் ஆசானை திரும்பிப்பார்த்த வீரன், “இப்போது நீங்கள் இதற்கு சமமாக அம்பு எய்யுங்கள் பார்க்கலாம்” என்று நக்கலாக சொன்னான்.

Continue reading “மனதை வெல்”

ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு.

நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன்.
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது.

விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது.

ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்