செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.
இந்த அளவு நீர் இருந்ததை எப்படி இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது தான் கொஞ்சம் வியக்க வைக்கும் விடயம். இவர்கள் செவ்வாயில் ஊர்ந்து திரியும் தளவுளவிகளையோ அல்லது செவ்வாயை சுற்றி ரவுண்டு அடிக்கும் விண்கலங்களையோ பயன்படுத்தி செவ்வாயில் இருந்த கடலை கண்டுபிடிக்கவில்லை. மாறாக இங்கு நாசாவிற்கு சொந்தமான ஹவாயில் இருக்கும் Infrared Telescope Facility மற்றும் ESO விற்கு சொந்தமான சில்லியில் இருக்கும் VRT தொலைக்காட்டி மூலம் தான் இதை கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி அந்தளவுக்கு இருக்கிறது.
செவ்வாயில் இருந்த இந்தக் கடல் கிட்டத்தட்ட பூமியில் இருக்கும் ஆர்டிக் சமுத்திரத்தின் அளவுக்கு இருக்குமாம். 20 மில்லியன் கணக்கிலோமீட்டர்கள் அளவு நீர் இருந்திருக்கவேண்டும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.
இன்று செவ்வாயில் இரண்டுவிதமான நீர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நமக்கு பரிட்சியமான நீர், அதான் H2O. இரண்டு ஹைட்ரோஜன் அணுக்களும் ஒரு அக்சிஜன் அணுவாலும் ஆக்கப்பட்ட நீர் மூலக்கூறு. மற்றது HDO, இதக் குறைக் கனநீர் என்று அழைகின்றனர். இது ஒரு ஹைட்ரோஜன் ஒரு தியுற்றியம் மற்றும் ஒரு அக்சிஜன் அணுவால் ஆக்கப்பட்டது. டியுற்றியம் ஹைட்ரோஜனின் ஒரு சமதானி.
பூமியிலும் இந்த HDO காணப்படுகிறது. இங்கு இருக்கும் சமுத்திரங்களில் இருக்கும் 3200 H2O மூலக்கூறுகளுக்கு ஒரு HDO மூலக்கூறு என்ற விகிதத்தில் உண்டு. ஆனால் செவ்வாயில் கொஞ்சம் கூட காணப்படுகிறது. இதற்கு காரணம் H2O வை விட HDO கொஞ்சம் அடர்த்தியானது, ஆக HDO ஆவியாகிவிடுவதைக் காட்டிலும் வேகமாக H2O ஆவியாகிவிடும். எனவேதான் பூமியில் H2O விற்கும் HDO விற்கும் இருக்கும் விகிதாசாரத்தைவிட செவ்வாயில் அதிகமாக காணப்படுகிறது.
அடுத்த விடயம், இந்த கடல் இருந்த காலத்தில் செவ்வாயில் சிறிய காலநிலை மாற்றம் கூட இருந்ததாம். ஆக உயிர்வாழத் தேவையான காரணிகள் அப்போது இருந்திருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது ஒரு இறந்த பாலைவனக் கோள். ஆனாலும் செவ்வாயின் மேட்பரபுக்கு கீழாக இன்னும் நீர் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இன்னும் நிறைய ஆய்வு செய்யவேண்டி உள்ளது மட்டும் உறுதி. கீழே இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய நாசாவின் வீடியோ. (ஆங்கிலத்தில்)
செவ்வாயில் இருந்த சில கற்கள் எகிப்தில் அலக்சான்ட்ரோவில் கிடைத்துள்ளதாமே ? மேலும் அந்த கற்களில் சில நுண்ணியிரிகளின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறுகிறார்கள் . இதெல்லாம் உண்மையா சகோ . அப்படி இருக்கும் பட்சத்தில் செவ்வாயில் இன்றும் நுண்ணுயிரிகள் வாழக்கூடுமல்லவா ?
செவ்வாயில் இருந்த கடல் வற்றியதற்கு காரணம் , ஒரு எரிகல்லின் தாக்கம் என்று கூறுகிறார்கள் . அதானல் அது விண்வெளிக்கு வெப்பத்தினாலும் ஆவியாகிச்சென்றிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் .
LikeLiked by 1 person
செவ்வாயில் நீர் காணாமல் போனதற்கு அந்த காரணம் தான் தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் செவ்வாயில் இருந்த கல் பூமியில் கிடைத்ததாக கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நாம் நிலாவில் இருந்து கற்களை எடுத்து வந்துள்ளோம், ஆனால் செவ்வாயில் இருந்து அப்படி ஒன்றும் இங்கு கொண்டுவரவில்லை, அப்படியிருக்க அது செவ்வாய்க் கற்கள் என்று கருதுவது கொஞ்சம் முரண்பாடானது. மற்றும் நாம் இன்னும் செவ்வாயில் உயிர் இருந்ததற்கான தடயங்களை பார்க்கவில்லை. நீர் இருந்தால் அங்கு உயிர் இருப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு, ஆனால் தடயம் வேண்டும். செவ்வாயில் இருந்து கற்களை கொண்டு வந்துதான் ஒப்பிடவேண்டும் என்று இல்லை, வேறு பல வழிகளும் உண்டு, ஆனால் உயிரினம் இருந்ததற்கான அறிகுறி இருந்தது என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதைகளே. வேண்டும் என்றால் செவ்வாய் கோளில் பெரிய விண்கல் மோதுண்ட களத்தில் அதனில் இருந்து சிறு துண்டுகள் பெயர்ந்து வந்து பூமியில் விழுந்து இருக்கலாம். அப்படி சில கற்கள் விழுந்து இருக்கின்றன. ஆனால் உயிர் இருந்த அடையாளம் எல்லாம் இல்லை.
LikeLike
விக்கிபீடியாவில் இதப் பற்றி ஒரு கட்டுரை உண்டு. https://en.wikipedia.org/wiki/Martian_meteorite
வாசித்துப் பாருங்கள். ஆனால் உயிரினம் பற்றி கூறிவிடமுடியாது, அது இன்னமும் நாம் கண்டறியாத விடயம்.
LikeLike
செவ்வாயில் இருந்து கற்களை கொண்டு வந்துதான் ஒப்பிடவேண்டும் என்று இல்லை, வேறு பல வழிகளும் உண்டு, ஆனால் உயிரினம் இருந்ததற்கான அறிகுறி இருந்தது என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதைகளே. வேண்டும் என்றால் செவ்வாய் கோளில் பெரிய விண்கல் மோதுண்ட களத்தில் அதனில் இருந்து சிறு துண்டுகள் பெயர்ந்து வந்து பூமியில் விழுந்து இருக்கலாம். அப்படி சில கற்கள் விழுந்து இருக்கின்றன. ஆனால் உயிர் இருந்த அடையாளம் எல்லாம் இல்லை.
LikeLike
எப்போதோ கடல் இருந்த கோள் , இன்று ஒரு இறந்த பாலைவான கோள் ஆனது நினைத்தால் , சற்றே ஆச்சரியமாக தான் இருக்கிறது! ஒரு வேளை அங்கே நம் பூமியை போல் ஒரு காலத்தில் ஜீவராசிகள் வாழ்ந்திருக்கலாம்! ஏதேனும் பேரழிவுகளால் ஒட்டு மொத்தமாய் அழிந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது!
LikeLiked by 1 person
நீர் இருந்ததினால் நிச்சயம் உயிரினம் உருவாக்கி இருக்கவேண்டும் என்று ஒரு காட்டாயம் இல்லை, ஆனால், நீர் தரைவ நிலையில் இருப்பது உயிரினம் தோன்ற நிறைய வாய்ப்புக்களை வழங்குகிறது. செவ்வாயில் கடல் அழிந்ததற்கு காரணம் அதனில் முட்டிய ஒரு பெரிய விண்கல் என்றும் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சிலவேளை, அதுவே காரணமாகவும் இருக்கலாம். நாம் சென்று அங்கே சில பல குழிகளை தோண்டிப்பார்த்தால் அங்கு சில படிமங்களும் கிடைக்ககூடும்.
LikeLiked by 1 person