சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியன் ஒரு உடு. உடுக்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் ஆனா ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் 1% ஐதரசன், 7.8% ஹீலியம் காணப்படுகிறது.

  2. சூரியத்தொகுதியின் மையத்தில் இருக்கும் சூரியனில், சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99.8% ஆன திணிவைக் கொண்டுள்ளது.

  3. சூரியன் ஒரு வீட்டின் வாசல்க் கதவின் அளவிருந்தால், பூமி ஒரு பைசா நாணய அளவிருக்கும்.

  4. சூரியனுக்கு திடமான திண்ம உடல் இல்லாததால், சூரியனின் வேறு பகுதிகள், வேறு வேகத்தில் சுழல்கின்றான். சூரியன் தன்னைத் தானே சுற்ற, மத்தியில் 25 பூமி நாட்களும், துருவங்களில் 36 பூமி நாட்களும் எடுக்கின்றது.

  5. சூரியனது “வளிமண்டலத்திலேயே”, சூரியப் புள்ளிகள் (sun spots) மற்றும் சூரிய நடுக்கம் (solar flares) என்பன ஏற்படுகின்றன. சூரியனது வெளி வளிமண்டலமானது, ப்ளுட்டோவின் சுற்றுப் பாதைக்கும் வெளியில் செல்லும் அளவிற்கு பெரியது.

  6. சூரியனைச் சுற்றி, 8 கோள்களும் (planets), குறைந்தது 5 குறுங்கோள்களும் (dwarf planets), ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் (asteroids), லட்சக்கணக்கான வால்வெள்ளிகளும் சுற்றி வருகின்றன.

  7. சூரியனுக்கு எந்தவித வளையங்களும் (சனிக்கு இருப்பதைப் போல) கிடையாது.
  8. சூரியனது சக்தி இல்லாவிட்டால், பூமியில் உயிர் தோன்றி இருக்கவோ, அல்லது வாழவோ முடியாது.

  9. சூரியனது மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 5500 பாகை செல்சியஸ்.

  10. சூரியனது மையப் பகுதியில் வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்சியஸ்.

மூலம்: நாசாவின் சூரியத்தொகுதிக்கான பக்கம்

Advertisement

2 thoughts on “சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

  1. #சூரியத்தொகுதியைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.ரியத்தொகுதியைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.#

    Point 2 ??
    Jst for a clarification bro… 🙂 🙂

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s