விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி

எழுதியது: சிறி சரவணா

நாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.

இந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

EM Drive என்னும் இயந்திரம் இயக்கக்காப்பு விதியை மீறுவதாக பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது ஒரு பொருளானது முன்னோக்கிச் செலுத்தப்பட வேண்டும் என்றால், எதாவது ஒன்று அந்தப் பொருளை அந்தப் பொருள் செல்வதற்கு எதிர்ச்திசையில் தள்ளவேண்டும். ஆனால் இந்த EM Drive இப்படியான எந்தவொரு எதிர் விசையையும் உருவாக்கவில்லை, மாறாக மின்காந்த அலைகளின்மூலமே EM Drive தொழிற்படுகிறது. இதனால்தால் பல விஞ்ஞானிகள் EM Drive ஒரு சாத்தியமான இயந்திரம் அல்ல என கருதினர்.

NASA_truncated_cone_Magnetic_Field_TM212_

ஆனாலும், EM Drive இன் கண்டுபிடிப்பாளரான Roger Shawyer, இந்த இயந்திரம் எந்தவொரு இயற்பியல் விதிகளையும் மீறவில்லை எனக் கூறுகின்றார். இந்த இயந்திரதில் உள்ள ஒரு அறையில், மின்சக்தியானது, நுண்ணலைகளாக (microwave) மாற்றப்படுகின்றது. இந்த நுண்ணலைகள், அந்த அறையின் ஒரு புறத்தைநோக்கி செலுத்தப்படும் போது, அதற்கு எதிர் திசையில் இந்த EM Drive செல்லும் என Roger கூறுகின்றார்.

நாசா பொறியியலாளர்கள், கடந்த பல மாதங்களாக இந்த EM Drive உண்மையிலேயே தொழிற்படுமா என ஆராய்ந்து வந்துள்ளனர். இந்த இயந்திரம் வெற்றிடத்தில் தொழிற்பட முடியாது என்று நிருபிக்க போதுமானளவு சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் இதுவரை செய்த ஆய்வுகள் வரை, இந்த EM Drive நிச்சயமாக விண்வெளியில் தொழிற்படும்.

ஆனாலும் ஆய்வுகளின் முடிவை உறுதிசெய்ய, நாசாவை தவிர வேறு ஆய்வுக்குழுக்களும் EM Drive ஐ வெற்றிடத்தில் சுயாதீனமாக பரீட்சிக்க வேண்டும். அப்போதும் EM Drive இற்கு சாதகமாக விடைகள் வந்தால், நிச்சயமாக இது விண்வெளிப்பயணத்திற்கான அடுத்த கட்டமாக இருக்கும்!

இந்த ஆய்வுக்கான குழுத் தலைவர், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, 2மெகாவாட் மின்னணுச்சக்திகொண்ட விண்கலம் ஒன்று, கிலோவாட் ஒன்றுக்கு 0.4 நியுட்டன் விசையை உருவாக்ககூடிய EM Drive ஐ கொண்டு வெறும் 70 நாட்களில் செவ்வாயை சென்றடைந்துவிடலாம் என கூறுகின்றார்.

இன்னும் மேலதிகமாக, நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான அல்பா சென்டுரி (Alpha Centauri) க்கு 92 வருடங்களில் சென்றுவிடமுடியுமாம்!

ஆனாலும் விண்வெளிப் பயணங்களை விடவும், வேறு ஒரு முக்கிய அம்சத்திற்கும் இந்த EM Drive பயன்படும் என அதன் கண்டுபிடிப்பாளர் Roger கூறுகின்றார். அதாவது, இந்த EM Drive களைப்பயன்படுத்தி, செலவு குறைந்த முறையில் சூரிய சக்தியை மின்சக்தியாக்கும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பமுடியும் எனவும், அவை அங்கு சேகரித்த மின்சக்தியை பூமிக்கு அனுப்பிவைக்கும் எனவும் அவர் கருதுகின்றார்.

இன்னும் சில வருடங்களில் EM Drive பயன்பாட்டுக்கு வருமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மூலம்: sciencealert

2 thoughts on “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s