கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.

2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.

எப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் வேகமாக அழிந்துவரும் இனத்தில் இந்த கண்டல் தாவரங்களும் அடங்கும்.  ஆகவே அவற்றைப் பாதுகாப்பது இலங்கை அரசினதும், மக்களினதும் மிக முக்கியகடமையாகும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதுவரை எந்த உலக நாடுகளுமே தனிப்பட்ட முறையில் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இலங்கை இதற்கு முன்னோடியாக விளங்கும்.

புதிய சட்டங்கள் மற்றும் புதிய கண்டல் காடுகள் உருவாக்கம் என்பன மூலம் புதிய முறையில் கண்டல் காடுகள் இலங்கையில் பாதுகாக்கப்படும்.

கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவை குறைப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவரஇனமாகும் ஆகவே இவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்றி அதிகரிக்கவும் வேண்டும் என சீகோலோஜி நிறுவன தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கண்டல் காடுகள் பல்வேறு வழிகளில் மக்களுக்கும் இயற்கைக்கும் உதவுகிறது. கண்டல் காடுகளை அண்டிய பகுதிகளில் அதிகளவான மீனினங்கள் மற்றும் நண்டு, இறால் போன்றவையும் அதிகம் வாழ்கின்றன. இவை அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதுடன் இந்த கண்டல் தாவரங்களை அண்டி வாழும் மீனினங்கள் பவளப்பாறைகளை உருவாகும் செயற்பாட்டிலும் ஈடுபடுவதால் இந்த கண்டல் காடுகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய ஒரு நன்மையாகவே விளங்குகிறது.

இலங்கை அண்ணளவாக 3.4 அமெரிக்க டொலர் செலவிட்டு ஏற்கனவே உள்ள 8800 ஹெக்டயர் அளவுள்ள கண்டல் காடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வரும் ஐந்து வருடங்களுக்கு செயன்முறைப்படுத்தும், அதுமட்டுமல்லாது, மேலும் 3900 ஹெக்க்டையர் அழிந்துவிட்ட கண்டல் காடுகளையும் மீண்டும் உருவாகும்.

இது இலங்கை அரசின் ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

மூலம்: BBC

2 thoughts on “கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s