உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்

இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.

இதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே!

இந்த சிப்பை காட்டினுள் வீசி எறிந்தாலும், பாங்க்ஸ் போன்ற நுண்ணுயிர்கள் இவற்றை உண்டுவிடும் என இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த சிப்கள் பசளைபோல உருமாறிவிடுமாம்.

இந்த சிப்பின் முக்கிய பகுதி, அதாவது கட்டமைப்பை பேணும் பகுதி, பிளாஸ்டிக்கில் செய்யப்படாமல், உக்கலடையக்கூடிய செல்லுலோஸ் நானோபாப்ரில் (cellulose nanofabril – CNF) எனப்படும் நெகிழ்ச்சியடையக் கூடிய வஸ்துவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த CNF மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும்.

biochip

அண்ணளவாக இந்த ஆய்வுக்குழு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது, இவர்கள் பலதரப்பட்ட மாற்றீடுகளை பயன்படுத்திப் பார்த்துள்ளனர். பெற்றோலியப் போலிமர்களைக்கூட பயன்படுத்திப் பார்த்துள்ளனர், ஆனால், வெப்பத்தை தாங்கவும் சீராக கடத்தவும் இந்த CNF சிறந்தது என அவர்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மரக்கட்டிகளை பொறுத்தவரை, நீரை உறுஞ்சி அவை அளவில் பெருக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்கும், இவர்களைது CNF இற்கும் இதே சிக்கல் இருக்கிறது, இது வளியில் உள்ள நீர்த் துணிக்கைகளை உறிஞ்சி அளவில் பெருத்துவிடும், இது சிப்களின் கட்டமைப்பை சீரழித்துவிடும். இதை தடுக்க, ஆய்வாளர்கள் CNF கட்டமைப்புக்கு மேலாக மெல்லிய நீர் எதிர்ப்பு படலம் ஒன்றை பெயிண்ட் செய்வதமூலம் நிவர்த்திசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் அடுத்தகட்டப் பணி, இந்த சிப்கள், வழமையான சிப்கள் போல வினைத்திறனாக தொழிற்படும் என நிரூபிப்பதே. அதுமட்டுமல்லாது, இந்த சிப்களை தயாரிப்பதும் மிக மலிவான விடயம் என்பதால், எதிர்காலத்தில் சிப் தயாரிக்கும் கம்பனிகள், இந்த முறையைப் பயன்படுத்த முன்வரலாம் என ஆய்வாளர்களை ஆவலாக காத்திருகின்றனர்.

மூலம்: science alert

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s