பேராசை கொண்ட விண்மீன்பேரடைகள்

விண்மீன்பேரடைகள் பல பில்லியன் விண்மீன்களின் தொகுதியாகும். இவை பல அளவுகளில் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? சில விண்மீன்பேரடைகள், அருகில் இருக்கும் சிறிய விண்மீன்பேரடைகளை விழுங்கித் தானே பெரிதாக வளர்ந்துவிடும்!

இப்படியாக சிறிய விண்மீன்பேரடைகளை தன்னோடு இணைத்துக்கொள்ளும் பாரிய விண்மீன்பேரடைகளைப் பற்றி வானியலாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், இதுவரை அவற்றை நிருபிப்பது என்பது மிகக்கடினமாக இருந்தது. பெரிய விண்மீன்பேரடை, சிறிய விண்மீன்பேரடையை தன்னுள் இணைத்துக்கொண்ட பின்பு, சிறிய விண்மீன்பேரடையை அடையாளம் காண்பதென்பது முடியாத காரியம். இது ஒரு நீர்த் தடாகத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்தத் தடாகத்தில் இருக்கும் நீரில், இந்த வாளித் தண்ணீரைத் தேடுவதுபோலாகும்.

Continue reading “பேராசை கொண்ட விண்மீன்பேரடைகள்”

துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்

எழுதியது: சிறி சரவணா

இந்த இயற்கை பல புதிய அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எந்தவித மாறுபாடுகளும் இருக்கமுடியாது. இயற்கையில் இருந்துவரும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்களும் எதோ ஒரு விதத்தில் எமது ஆச்சரியத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. உண்மையில் பார்க்கப்போனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னரும் எமது ஆச்சரியம் குறையவேண்டும் அல்லவா, ஏனென்றால் எமக்குத் தெரிந்த விடயங்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே! ஆனால் இந்த இயற்கை அதற்கும் விதிவிலக்காக இருக்கறது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் எமக்குத் தெரிந்தவற்றைவிடவும் தெரியாத பல விடயங்களைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகிறது, அந்தவகையில் ஒரு புதிய ஆச்சரியமிக்க ஒரு கண்டுபிடிப்பே Erythropsidinium எனப்படும் ஒரு ஒருகல அங்கி. அப்படி என்ன விசேசம் இந்த அங்கியில் இருக்கிறது என்றால், இதன் கண்கள் போன்ற அமைப்பு!

Continue reading “துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்”

வேற்றுலக நாகரீகங்கள் : இலவச மின்னூல்

ஏற்கனவே பரிமாணம் தளத்தில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த மின்னூல். வேற்றுலக நாகரீகங்கள் என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக சில மாதங்களுக்கு மும்பு வெளிவந்த கட்டுரைகளை ஒன்றாக்கி அதனை மின்னூல் வடிவில் கொண்டுவருவதன் மூலம் வாசகர்களுக்கு அதனை எதிர்காலத்தில் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்ற நோக்கமே பிரதானம்.

இன்னும் பல்வேறு பட்ட கட்டுரைத்தொகுப்புகளையும் இப்படி மின்னூல் வடிவில் கொண்டுவருவது எனது நோக்கம். தமிழில் அறிவியல் வளர்ப்போம்.

மின்னூலைத் தரவிறக்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.


வேற்றுலக நாகரீகங்கள் – PDF (1.2 MB)


இந்த மின்னூல் உங்களுக்கும் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் பலருக்கும் இதைக் கொண்டுசெல்லலாம். பகிரும் போது, “பரிமாண”த்தின் தளத்தின் முகவரியையும் பகிருவதன் மூலம் பரிமாணத்தை இன்னும் பலரிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்.

நன்றி,
மா. சிறி சரவணா

மேடுசாவின் அச்சமூட்டும் அழகு

எழுதியது: சிறி சரவணா

கிரேக்க புராணங்களில் ஒரு கதை உண்டு. ஒரு அழகிய பெண், மேடுசா. அழகிய தங்கக்கம்பிகள் போன்ற தலைமுடியுடன், எல்லோரையும் கவரும் வண்ணமாக இருந்தவள் இந்த மேடுசா. ஆனால் மிகுந்த சுயநலமும், தற்பெருமையும் இருந்ததனால் அதேனா என்ற கடவுளின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகினாள். அதேனாவின் சாபம், மேடுசாவின் தலையில் இருந்த அழகான தங்கக்கம்பிகள் போன்ற முடிக்கற்றை ஒவ்வொன்றையும் நஞ்சை உமிழும் பாம்புகள் ஆக்கிற்று. அதேபோல, யாரெலாம் மேடுசாவின் கண்களைப் பார்க்கின்றனரோ, அவரெலாம் உடனே கற்சிலையாகிப் போவர்.

சரி இந்தப் புராணக்கதைக்கும், இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்றால், நாம் பார்க்கப்போகும் ஒரு கோள்விண்மீன்  படலத்திற்கும், வானியலாளர்கள் இந்த அழகியின் பெயரையே வைத்துள்ளனர். மிதுன ராசியில் இருக்கும் Sharpless 2-274  என்ற கோள்விண்மீன் படலமே, மேடுசா நெபுலா (Medusa nebula) எனப்படுகிறது. இது பூமியில் இருந்து 1500 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதுடன், அண்ணளவாக 4 ஒளியாண்டுகள் அகலம் கொண்டது!

Continue reading “மேடுசாவின் அச்சமூட்டும் அழகு”

உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.

லெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

Continue reading “உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு”

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்

எழுதியது: சிறி சரவணா

பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது.

பெருவெடிப்பின் பின்னர், நீண்ட காலத்திற்கு இந்தப் பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது, அங்கே விண்மீன்கள் இல்லை, ஒளியில்லை. அந்த ஆரம்பக்காலப் பிரபஞ்சம், இருண்ட, சத்தமற்ற ஒரு வெறுமையாக இருந்தது. இந்தப் பிரபஞ்சம் தோன்றி அதில் முதல் விண்மீன்கள் உருவாக அண்ணளவாக 100 மில்லியன் வருடங்கள் எடுத்து! அதுவரை பிரபஞ்சத்தில் இருந்ததெல்லாம் வெறும் வாயுக்கள் மட்டுமே.

Continue reading “பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்”

சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்

நண்பர்களே! நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.

சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம்  தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.

Continue reading “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்”

84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்

எழுதியது: சிறி சரவணா

இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு  துல்லியத்தன்மை வாய்ந்தது!

நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன் தரத்தை “மெகாபிக்ஸல்” மூலம் அளப்போம். அதாவது “மெகாபிக்ஸல்” அதிகரிக்க அதிகரிக்க, கமெராவின் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரமும் அதிகரிக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் கமெராக்களின் சராசரி மெகாபிக்ஸல் அளவு அண்ணளவாக 10 மெகாபிக்ஸல்கள். ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் புகைப்படத்தை எடுத்த, அந்தத் தொலைக்காட்டியில் இணைக்கப்பட்டிருந்த கமெராவில் 9000 மெகாபிக்ஸல்கள் இருந்தது! அப்படியென்றால் அது எவ்வளவு துல்லியமாக அந்தப் படத்தை எடுத்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Continue reading “84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்”

கோள்விண்மீன் படலங்கள்

எழுதியது : சிறி சரவணா

சூரியனைப் போன்ற விண்மீன்கள், தங்கள் எரிபொருளான ஹைட்ரோஜனை முடித்துவிட்டால், அதன் பின்னர் அவை தனது அமைப்பைப் பேண முடிவதில்லை, இவை சிவப்பு அரக்கனாக (red giant) மாறி பல நூறு மடங்கு பெரிதாகும், இந்த நிலையில் விண்மீன்கள், தங்கள் வெளிப்புற படலத்தை அப்படியே வெளி நோக்கி வீசி விடும், எஞ்சிய அடர்த்தியான மையப்பகுதி இறுதியில் வெள்ளைக்குள்ளனாக (white dwarf) மாறிவிடும். இதுதான் நமது சூரியனது எதிர்காலமும்.

இப்படி வீசி எறியப்பட்ட வெளிப் படலம், பல்வேறுபட்ட வடிவங்களையும் நிறங்களையும் பெற்றுக்கொள்ளும். மையப்பகுதியில் இருக்கும் அடத்தியான மற்றும் வெப்பமான வெள்ளைக்குள்ளனில் இருந்து வெளிவரும் வேகமான கதிர்வீச்சுப் புயல், இந்த வெளிப் படலத்தை தொடர்ந்து வெளிநோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும்.  இவையே கோள்விண்மீன் படலம் (planetary nebula) எனப்படுகிறது.

Continue reading “கோள்விண்மீன் படலங்கள்”

செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

எழுதியது: சிறி சரவணா

இது ஒரு தொடர்பதிவு, முன்னைய பதிவுகளை வாசித்தபின்னர் இந்தக் கட்டுரையை தொடருங்கள், அது உங்களுக்கு மேலும் சில விடயங்களை தெளிவாக புரியவைக்கும்.

செயற்கை நுண்ணறிவு கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


சரி, கடந்த பதிவில் செயற்கை நுண்ணறிவின் பிரிவுகளைப்பற்றிப் பார்த்தோம், இந்தப் பதிவில், எப்படியாக இந்த AI படிப்படியாக ஆராச்சி ரீதியில் வளர்ந்து வந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

1943 இல் Warren McCulloch மற்றும் Walter Pitts உருவாக்கிய கட்டமைப்பே முதலாவது AI கட்டமைப்பு என பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இவர்கள் மனித மூளையில் இருக்கும் நியுரோன்களை அடிப்படையாகவைத்து இந்தக் கட்டமைப்பை உருவாகினர். இவர்களைது கட்டமைப்பில் செயற்கையான நியுரோன்கள் சுவிச் வேலை செய்வதுபோல, அருகில் இருக்கும் நியுரோன்களின் தூண்டலுக்கு ஏற்ப “on” அல்லது “off” செய்யும். அதாவது உண்மையிலேயே மூளையில் நியுரோன்கள் எவ்வாறு தொழிற்படுமோ, அவ்வாறே இந்த செயற்கை நியுரோன்களும் தொழிற்படும்.

Continue reading “செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்”

சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை

எழுதியது: சிறி சரவணா

விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு பிரகாசம் உண்டு, அது அந்தப் பேரடையில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மற்றும் சக்தியைப் பொறுத்து வேறுபாடும். உதாரணமாக, அதிகளவான விண்மீன்கள் குறித்த பேரடையில் இருந்தால், அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும்.

WISE தொலைக்காட்டியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் தற்போது, இதுவரை நாம் கண்டறிந்த விண்மீன் பேரடைகளிலேயே மிகவும் பிரகாசமான பேரடையைக் கண்டறிந்துள்ளனர். இந்த WISE தொலைக்காட்டி, சாதாரண தொலைக்காட்டிகளைப் போல கட்புலனாகும் ஒளிக்கற்றை வீச்சைப் (visible light) பயன்படுத்தாமல், அகச்சிவப்பு கற்றை வீச்சில் (infrared spectrum) படம்பிடிக்கும் ஒரு தொலைக்காட்டியாகும்.

Continue reading “சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை”