செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்

எழுதியது: சிறி சரவணா

செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நாசாவின் Mars Reconnaissance Orbiter (MRO) என்ற விண்கலத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை நாசா வெளியிட்டுள்ளது.

Continue reading “செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்”

சனியின் துணைக்கோளில் பாரிய சமுத்திரம்

சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் இல் திரவ நிலையில் நீர் இருப்பதை சென்ற வருடத்தில் கசினி விண்கலம் கண்டறிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  தற்போது கசினி விண்கலம் அனுப்பியுள்ள தகவலைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், என்சிலாடஸ் முழுவதும், மேட்பரபிற்குக் கீழ் பாரிய சமுத்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வாளர்கள் இந்தத் துணைக்கோள் சனியைச் சுற்றிவரும்போது அது அசையும் விதத்தைக் கணக்கிட்டு, என்சிலாடசின் மேற்பரப்பில் உள்ள பனிப்பாறை அதற்குக்கீழே உள்ள நீரில் மிதந்துகொண்டு இருக்கவேண்டும் என்று கண்டறிந்துள்ளனர்.

Continue reading “சனியின் துணைக்கோளில் பாரிய சமுத்திரம்”

மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்

உங்களுக்கு பீனிக்ஸ் பறவையின் கதை தெரியுமா? பண்டைய புராணத்தில் இந்த பீனிக்ஸ் பறவையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன உடலைக் கொண்ட இந்தப் பறவை நூற்றுக்கணக்கான வருடங்கள் வரை உயிர்வாழும். வயதுபோய் உடலெல்லாம் சோர்ந்து இறக்கும் தருவாயில், தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் இளமையாக உயிர்பெற்று வரும். இது ஒரு வாழ்க்கை வட்டமாக தொடரும்.

Continue reading “மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்”

பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1

எழுதியது: சிறி சரவணா

“பூமி வெப்பமாதல்”, அல்லது “குளோபல் வார்மிங்” என்கிற சொற்பதங்களை நீங்கள் கேள்விப்படிருபீர்கள் அடிக்கடி செய்திகளிலும் இணையத்திலும் அடிபடும் சொல்தான் இது. கேள்விப்படாவிடினும் இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு இந்த “பூமி வெப்பமாதல்” பற்றிய ஒரு சிறிய புரிதல் உருவாகும் என நம்புகிறேன்.

இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும். இப்படி கடல் மட்டம் அதிகரிப்பதால் கடல் மட்டத்திற்கு அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் நீரில் மூழ்கும். அங்கு வாழும் மக்கள் வேறு இடம் செல்லவேண்டும் – பிரச்சினை தொடங்கும்!

Continue reading “பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1”

பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தால், அது நிலக்குழியில் போடப்படலாம், அல்லது கடலில் கொட்டப்பட்டு நீரில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மிதந்து திரியலாம். அடுத்த நூறு வருடங்களில் இந்தப் பூமி எப்படியிருக்கும் என்று ஒருவராலும் கூறிவிடமுடியாது, ஆனால் அந்த பிளாஸ்டிக் போத்தல், உக்கலடையாமல் அப்படியே பிளாஸ்டிக் போத்தலாகவே இருக்கும்!

Continue reading “பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்”

புளுட்டோவில் உயிரினம் இருக்குமா?

எழுதியது: சிறி சரவணா

கடந்த மாதத்தில் விஞ்ஞான உலகின் ஒரு சாதனைக்கு எடுத்துக்காட்டாக நியூ ஹொரைசன் விண்கலம் புளுட்டோவிற்கு அருகில் சென்று படம் பிடித்ததுடன் பலவேறு தகவல்களையும் சேகரித்து அனுப்பியது. இன்னமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

இதுவரை கிடைத்த தகவலின் படி, புளுட்டோவின் மேற்பரப்பில் நாமறிந்த உயிரினம் வாழ்வதற்கான எந்தவொரு சூழ்நிலையும் இல்லை. ஆனால் ஒருவேளை, புளுட்டோவின் மேட்பரப்பிற்கு கீழே, அதாவது உறைந்த பனிப் பாறைகளுக்கு கீழே திரவநிலையில் கடல் போன்ற அமைப்பு இருந்தால், நிச்சயம் அங்கு உயிரினம் இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார் பிரபல பிருத்தானிய இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ் (Brain Cox).

Continue reading “புளுட்டோவில் உயிரினம் இருக்குமா?”