மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

முன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.

இந்தப் பகுதியில் அகச்சிவப்புக் கதிர்களைப் (infrared waves) பற்றிப் பார்க்கப்போகிறோம்.

அகச்சிவப்புக் கதிர்கள் நுண்ணலைகளை விட அலைநீளம் குறைந்த அலைகளாகும். மனிதக் கண்களால் பார்க்க முடியாத இந்த அலைகள் கண்டறியப்பட்ட விதமே சற்று விசித்திரமானது. இந்த அலைகளுக்கு “அகச்சிவப்பு” என பெயர் வரக்காரணம், இந்த அலைகள், கட்புலனாகும் அலைகளின் சிவப்பு நிற அலைகளுக்கு அப்பால் இருப்பதாலாகும். Continue reading “மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்”

சனியின் வளையங்கள் புதியது

சூரியத்தொகுதியில் இருக்கும் மிகவும் விசித்திரமான மற்றும் பிரமிக்கத்தக்க கோள் எது என்று கேட்டால், அது சனியாகத்தான் இருக்கும்! காரணம் அதனைச் சுற்றியிருக்கும் வளையங்கள்.

தற்போது விஞ்ஞானிகள் இந்த வளையம் எப்போது உருவாகியிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். பூமியில் டைனோசர்கள் உலாவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த வளையங்கள் சனியைச் சுற்றி உருவாகியிருக்கவேண்டும் என்பது இவர்கள் முடிவு – டைனோசர்களிடம் பாரிய தொலைக்காட்டிகள் இருந்திருந்தால், இந்த அழகிய பிரமாண்ட நிகழ்வை அவர்கள் பார்த்திருக்கலாம்! Continue reading “சனியின் வளையங்கள் புதியது”

அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் மிகபெரிய உயிரினப் பேரழிவுக்கு வித்தாகலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. Continue reading “அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு”

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

பூமி உருவாகி முதன் முதலில் சமுத்திரங்கள் தோன்றி இருந்த காலப்பகுதியில் சமுத்திரங்கள் மிக அதிகமான வெப்பநிலையில் காணப்பட்டன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு முடிவு வேறுவிதமாகக் கூறுகின்றது. அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது. Continue reading “3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்”