மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

முன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.

புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். Continue reading “மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்”

பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

நிறம்மாறும் வால்வெள்ளி

வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம். ஆனால் 67P வால்வெள்ளியை ஆய்வு செய்துகொண்டிருக்கும் ஐரோப்பிய விண்வெளிக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் இந்த வால்வெள்ளி சூரியனைச் சுற்றிவரும் போது அதனது நிறம் மாற்றமடைவதை அவதானித்துள்ளனர். Continue reading “பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை”

மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

முன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.

இந்தப் பகுதியில் கட்புலனாகும் ஒளியைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

மின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது. Continue reading “மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி”

ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா மற்றும் புளுட்டோ ஆகும்.

இந்த ஐந்து குறள்கோள்களில் நான்கு, சூரியத்தொகுதியின் எல்லையில், நெப்டியூன் கோளிற்கு அப்பால் காணப்படுகின்றன.

Continue reading “ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்”