பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

நிறம்மாறும் வால்வெள்ளி

வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம். ஆனால் 67P வால்வெள்ளியை ஆய்வு செய்துகொண்டிருக்கும் ஐரோப்பிய விண்வெளிக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் இந்த வால்வெள்ளி சூரியனைச் சுற்றிவரும் போது அதனது நிறம் மாற்றமடைவதை அவதானித்துள்ளனர்.

ESA_Rosetta_OSIRISwac_20141122-1024x1024.jpg

2014 இல் ESA அனுப்பிய ரோசெட்டா என்கிற விண்கலம் இந்த வால்வெள்ளியைச் சுற்றி வருகிறது. இது முதன்முதலில் 67P ஐ சென்றடைந்த போது, அதன் நிறம் மிகவும் கருமையாக இருந்ததாகவும், அது அதன்மேல் விழும் சூரிய ஒளியில் வெறும் 6% மட்டுமே தெறிப்படையச் செய்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்க்குக் காரணம் அதன் மேற்பரப்பில் இருந்த தூசுகள் ஆகும்.

ஆனால் இந்த வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் வரும் போது, வால்வெள்ளி வெப்பமைடைவதால் அதன் மேற்பரப்பில் உள்ள தூசுகளால் ஆன படை, வால்வெள்ளியின் ‘வால்’ப் பகுதிக்கு செல்கின்றன, இதனால் வால்வெள்ளியின் மைய்யப்பகுதியின் மேற்பரப்பு தெளிவாகிறது. 67P நீலநிற பனியால் ஆக்கப்பட்டுள்ளது. தூசுகள் அகன்ற பின்னர் தெளிவாகத் தெரியும் நீலநிறப் பனி, இந்த வால்வெள்ளியின் பிரகாசத்தை 34% வரை சில பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இந்த வால்வெள்ளிக்கு அனுப்பிய விண்கலம் சூரியத்தொகுதியில் உள்ள வால்வெள்ளிகள் பற்றிய பல புதிய விடயங்களை அறிய உதவுகிறது. இதன் மூலம் சூரியத்சூரியத்தொகுதியின் ஆரம்பம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றி அறியலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

SpaceX இன் வெற்றிகரமான ராக்கெட் தரையிறக்கம்

விண்வெளிப் பயணங்களுக்கும் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்புவதற்கும் மிகப்பெரிய சவால் அதனது செலவு. அதற்குக் காரணம் விண்வெளிக்குச் செலுத்தப்படும் ராக்கெட்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதுதான். ராக்கெட்கள் விமானங்களைப் போல மீண்டும் தரையிறக்கப்படுவதில்லை. பெரும்பாலும் அவை சமுத்திரத்தினுள் வீழ்ந்துவிடும்.

giphy

விண்வெளிக்கு பொருட்களை அனுப்பிவிட்டு மீண்டும் தரையிறங்கும் ராக்கெட்கள் பயணச்செலவைக் குறைக்கும் என்பதனால் SpaceX நிறுவனம் கடந்த சில வருடங்களாக செங்குத்தாகத் தரையிறங்கும் ராக்கெட்களை உருவாக்கி பரிசோதனைகள் செய்தது.

பல தோல்விகளுக்குப் பிறகு, 2015 டிசம்பரில் வெற்றிகரமாக நிலத்தில் செங்குத்தாகத் தரையிறங்கி சாதனை படைத்தது பால்கன் 9 ராக்கெட். தற்போது அதன் அடுத்தகட்டமாக கடலில் மிதக்கும் தெப்பத்தில் பால்கன் 9 ராக்கெட்டை தரையிறக்கி அடுத்தகட்ட சாதனையைச் செய்துள்ளது.

தரையிறக்கப்படும் ராக்கெட்கள் அதிக செலவின்றி மீண்டும் விண்வெளிக்குப் பொருட்களை கொண்டுசெல்ல மீள்தயார் செய்யப்படும் என்பதனால் விண்வெளிப் பயணத்திற்கான செலவு துரிதமாகக் குறையும்.

DNAவில் படங்களை சேமிக்கலாம்

DNA எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான அடிப்படைக் கட்டமைப்பு, இந்த உயிரியல் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிஜிட்டல் படங்களை சேமித்து அதனை மீண்டும் எந்தவித பாதிப்பும் இன்றி ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக்கழக குழு மற்றும் மைக்ரோசாப்ட் ஆய்வாளர்கள் சேர்ந்து, DNA வில் நான்கு டிஜிட்டல் படங்களை வெற்றிகரமாக சேமித்துள்ளனர். டிஜிட்டல் தகவலில் இருக்கும் 0 மற்றும் 1 என்பன DNA வில் இருக்கும் அடிப்படைக் கூறுகளான adenine, guanine, cytosine மற்றும் thymine என்பனவற்றுக்கு உருமாற்றப்பட்டுள்ளது.

இந்த முறையில் தகவல்களைச் சேமிப்பது மிகப்பெரிய நன்மை பயக்கும், உதாரனந்திற்கு ஒரு கால்ப்பந்து மைதானம் அளவுள்ள தகவல்களஞ்சியத்தில் (data center) சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் வெறும் தாயக்கட்டை அளவுள்ள இடத்தில் DNA சேமிப்பகத்தைப் பயன்படுத்தி சேமித்துவிடமுடியும்.

செல்களை ப்ரோக்ராம் செய்ய ஒரு சாப்ட்வேர்

உருயிருள்ள கலங்களை ப்ரோக்ராம் செய்து அதன் செயற்பாட்டை இலகுவாக மற்றும் வண்ணம் ஒரு சாப்ட்வேர் ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். மிக இலகுவான ப்ரோக்ராம் மொழி கொண்டு இந்த ப்ரோக்ராம் வேலையை செய்யமுடியும்!

1973 தொடக்கம் நாம் பக்டீரியாகளை ப்ரோக்ராம் செய்து அதனது செயற்பாட்டை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்துள்ளனர். சர்க்கரை வியாதிக்குக் கொடுக்கப்படும் இன்சுலின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் அல்லது ஈ.கோலி என்கிற பாக்டீரியாவில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது.

ஆனால் இதனைச் செய்வது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல, ஆகவே அதனைச் சுலபமாக்கவே இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. Cello எனப்படும் இந்த சாப்ட்வேர், கணணிகளை ப்ரோக்ராம் செய்வதைப் போலவே செல்களையும் ப்ரோக்ராம் செய்ய உதவும்!

படம் சொல்லும் கதை

aurorakaunispaa280316_casado600h


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :-https://facebook.com/parimaanam

One thought on “பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s