சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு

சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும்  பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.

இப்படியாகத் சிதறடிக்கப்படும் ஏற்றமடைந்த துணிக்கைகள் பூமியை வந்தடையும் போது, அவை பூமியின் துருவங்களுக்கு அண்மையில் உள்ள வளிமண்டலத்தில் அழகான அரோராக்களை உருவாக்குகின்றன. இவை துருவ ஒளி என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஏற்றமுள்ள துணிக்கைகள், பூமியின் ரேடியோ தொடர்பாடல் மற்றும் மின்சார ஆலைகள் மற்றும் செய்மதிகளை பாதிப்படையச் செய்யக்கூடியது.

பொதுவாக சிறிய குள்ள விண்மீன்களில் உருவாகும் கிளரொளி நமது சூரியனைப் போன்ற பெரிய விண்மீனில் உருவாகும் கிளரொளியை விடச் சக்தி குறைவானதாக இருக்கலாம் என நீங்கள் கருதலாம், ஆனால் ALMA தொலைநோக்கி, மிக மிகச் சக்திவாந்த கிளரொளியை சூரியனை விட 10 மடங்கு திணிவு குறைந்த சிவப்புக் குள்ளன் வகை விண்மீனில் உருவாவதை கண்டறிந்துள்ளது.

TVLM 513-46546 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிவப்புக் குள்ளன், சூரியனை விட சில நூறு மடங்கு அதிகளவான காந்தப் புலத்தைக் கொண்டுள்ளது. இதற்கான காரணம் இதுவரை சரியாகத் தெரியாவிட்டாலும், இதற்குக் காரணம் இந்த சிவப்புக் குள்ளன் மிக வேகமாகச் சுழல்வதாக இருக்கலாம் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சிவப்புக் குள்ளன் இரண்டு மணித்தியாலங்களில் தனது அச்சில் ஒரு முறை சுழல்கிறது. நமது சூரியன் தனது அச்சில் ஒரு முறை சுழல, அண்ணளவாக 25 நாட்கள் எடுக்கின்றது.

151119-banner
நன்றி: ALMA

இந்தச் சிவப்புக்  குள்ளனில் கிளரொளி உருவாகும் போது அதிலிருந்து வெளிவரும் ரேடியோக் கதிர்வீச்சு, நமது சூரியனில் இருந்து வெளிப்படும் ரேடியோக் கதிர்வீச்சை விட 10,000 மடங்கு சக்திவாந்த்தாக இருக்கின்றது.

ரேடியோக் கதிர்வீச்சு, மிக மிகவேகமாகப் பயணிக்கும் துணிக்கைகள் காந்தப்புலத்தைக் கடக்கும் போது உருவாகின்றது. ஆகவே இந்தச் சிறிய சிவப்புக் குள்ளன் அதிகளவு சக்திவாந்த ரேடியோக் கதிர்வீச்சை வெளியிடவேண்டும் என்றால், மிக மிகச் சக்திவாந்த கிளரொளி தொடர்ந்து அந்தச் சிவப்புக் குள்ளனில் இருந்து வெளிப்படவேண்டும்.!

பல சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த விண்மீன்களைச் சுற்றி கோள்கள் இருக்கின்றன. ஆனால் இந்தச் சிவப்புக் குள்ளனைச் சுற்றி எந்தவொரு கோள்களும் இருக்கக்கூடாது என்று நம்புவோம்! காரணம் அந்தக் கோள்களில் இருக்கும் உயிரினங்கள், அதிகளவான ஆபத்து மிகுந்த கதிர்வீச்சால் மிக வேகமாக அழிந்துவிடக்கூடும்!

மேலதிகத் தகவல்

சிவப்புக் குள்ளன்கள் சிவப்பாக இருக்கக் காரணம் அவை மற்றைய விண்மீன்களைப் போல அவ்வளவு வெப்பமானது இல்லை. வாயு அடுப்பில் இருந்துவரும் தீச்சுவாலையை சிந்தித்துப் பாருங்கள்: சுவாலையின் மேற்பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால் அது சிவப்பாகவும், எரிவாயு வரும் துவாரத்திற்கு அண்மைய பகுதி நீல நிறத்திலும் காணப்படும்.

நன்றி: ALMA


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1609/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s