சுப்பர்கணணி யுத்தங்கள்

எப்போதுமே நாடுகளுக்கு இடையில் நீ பெரிதா, நான் பெரிதா என்கிற போட்டி இருக்கும், அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இப்படியான போட்டி அதிகளவு காணப்பட்டது. அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்கும் 1950 களின் பின்னர் தொடங்கிய பனிப்போர் எனப்படும் ‘கோல்ட்வார்’ ‘உன் நாடு பெரிதா இல்லை என் நாடு பெரிதா’ என்கிற காரணத்திற்காக இடம்பெற்றது என்று கூறலாம். அப்போது கத்துக்குட்டியாய் இருந்த பல நாடுகளில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும்.

ஊர்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும் போது, “என்கிட்டே பார்த்தியா, நிலவுக்கு போவதற்கு ராக்கெட் இருக்கு!” என்று சொல்ல யார் அழுதா? அப்படி இருந்த நாடுகள் இன்று அமேரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுகின்றன. அப்படியொரு சவால்தான் இந்த சுப்பர் கணனிகள்!

சீனாவின் புதிய சூப்பர் கணணி, Sunway TaihuLight, அமேரிக்கா உட்பட அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளின் சுப்பர்கணணிகளையும் விழுங்கிவிடும் அளவிற்கு சக்திவாந்த்தாக உருவாக்கப்பட்டுள்ளது. லிங்க்பக் (linpack) என்னும் அளவுகோலிற்கு இணங்க இதன் வேகம் 93 பேட்டாப்லோப்ஸ் (petaflops).

sunway-taihulight

1 petaflop எனப்படுவது, ஒரு செக்கனுக்கு ஒரு குவார்ட்ட்ரில்லியன் (quadrillion) தசமப்புள்ளி கணக்கீடுகளை செய்யும் வேகம் ஆகும். ஒரு குவார்ட்ட்ரில்லியன் எனப்படும் இலக்கம் ஒன்றின் பின்னர் 15 பூஜ்யங்கள் வரும் ஒரு இலக்கமாகும். ஆகவே 93 petaflops எனப்படுவது 93,000,000,000,000,000 தசமப் புள்ளி கணக்குகளை ஒரு செக்கனுக்குள் செய்யவல்லது என்று பொருள்.

இதுவரை உருவாக்கப்பட்ட சுப்பர் கணணிகளிலேயே Sunway TaihuLight மிகவும் சக்திவாந்த்து மட்டுமல்லாது, இதற்கு அடுத்ததாக உலகில் இருக்கும் ஐந்து சுப்பர் கணணிகளின் மொத்த வேகத்தையும் சேர்த்தாலும், இதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

மேலும் உலகின் இரண்டாவது அதிவேகமான சுப்பர் கணணியும் சீனாவிலேயே இருக்கிறது என்பதும் ஒரு கூடுதல் தகவல். இது Tianhe-2 என அழைக்கப்படுகிறது. இதன் வேகம் 33 petaflops ஆகும். இதுவும் Sunway TaihuLight உம் சீனாவில் உள்ள வுக்ஸ்ய் எனப்படும் இடத்தில் இருக்கும் தேசிய சுப்பர் கணணியியல் நிலையத்தில் அமைந்துள்ளன.

Tianhe-2 போலல்லாமல், Sunway முழுக்க முழுக்க சீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுப்பர் கணணியாகும்.

இதுவரை அமெரிக்காவிடம் இருந்த ‘சூப்பர் கணணி யாம்பவான்’ என்கிற பட்டம் தற்போது பறிபோய்விட்டது. அமெரிக்காவில் தற்போது 165 சுப்பர் கணனிகள் இருக்கின்றன, ஆனால் சீனாவில் 167! இதுவே பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிடம் வெறும் 28 சுப்பர் கணணிகளே இருந்தன, மேலும் அவை ஒன்றும் முதல் முப்பது அதிவேகமான சுப்பர் கணனிகள் லிஸ்டில் இடம்பெறவே இல்லை. ஆனால் இன்று உலகின் மிகவேகமான, மற்றும் இரண்டாவது வேகமான சுப்பர் கணனிகள் சீனாவிடம்! அதுவும் அதன் சொந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.

மற்றைய நாடுகளை இதனுடன் ஒப்பிடும் போது, ஜப்பானிடம் 29, ஜெர்மனியிடம் 26, பிரான்ஸ் 18 மற்றும் பிருத்தானியா 12 சுப்பர் கணணிகளை கொண்டிருக்கின்றன. வேறு எந்த நாடுகளும் பத்துக்கு மேற்பட்ட சுப்பர் கணணிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கவில்லை!

சீனாவின் Sunway சுப்பர் கணணியின் அதியுயர் வேகம், பலதரப்பட்ட கணனிக் குலாம்களில் இருந்து மொத்தமாக அடையப்பட்டது, இதற்கு பல இணைய, மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கணனிக் குலாம்களை இந்தக் கணிபீட்டிற்கு கொடுத்தன, ஆனாலும் நாளாந்த “அதியுயர் கணணிக் கணிப்பீட்டில்” இந்தக் கணனிக் குலாம்கள் பங்கு கொள்ளாது என்பதால், இதன் பயன்பாட்டு வேகம் எந்தளவு இருக்கும் என்பதில் அமெரிக்கா உட்பட மற்றும் சில நாடுகளும் சந்தேகம் தெரிவித்துள்ளன.

எப்படியோ தற்போது உலகில் உள்ள மொத்த சுப்பர் கணணிகளின் வேகம் 566.7 petaflops ஆக காணப்படுகிறது, அதில் 126.9 petaflops சீன சுப்பர் கணணிகளில் இருந்து பெறப்படுகிறது என்பது முக்கியமான விடயம்தான்.

வேறு ஏதாவது நாடு Sunway TaihuLight இற்கு எதிராக அதனைவிடச் சக்திவாந்த சுப்பர் கணணியை உருவாக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி உருவாக்கினாலும் அதனை வெளியே சொல்லாமல் மூடி மறைப்பதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. காரணம், சுப்பர் கண்ணிகளின் ராணுவப் பயன்பாடு மற்றும் எதிரி நாட்டின் தகவல்களை ஹாக் பண்ணுதல் மற்றும் அதி பாதுகாப்பான குறியாக்கமுறைகளை (encryption) உடைத்தல் என்பவற்றிற்கு சுப்பர் கணனிகள் பயன்படுத்தப்படுவதால், தங்கள் சக்தி என்ன என்று எதிரிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதனாலும் இருக்கலாம்!


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s