பால்வீதி எனப்படும் சுழல் விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு சுழல் கரத்தின் ஒரு பகுதியிலேயே நாம் இருக்கிறோம். விண்மீன் பேரடை (galaxy) என்பது எண்ணிலடங்காத விண்மீன்கள் ஈர்ப்புவிசையால் கட்டுண்டு இருக்கும் ஒரு அமைப்பாகும். நமது பால்வீதி இப்படியான ஒரு மிகப்பெரிய விண்மீன்பேரடையாகும். பால்வீதியின் ஒரு எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு செல்ல ஒளிக்கு 100,000 ஆண்டுகள் எடுக்கிறது! Continue reading “இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி”
மாதம்: செப்ரெம்பர் 2016
பிரபஞ்சம் என்பது விந்தை என்பதனை சற்றே இரவு வானை நிமிர்ந்து பார்த்து, அந்தச் சிறிய புள்ளிகளைப் பற்றி வியந்த யாரும் மறுக்கமுடியாது. ஒளியலையை விடச் சிறிய அணுத்துகள்கள் தொடங்கி, பல மில்லியன் ஒளியாண்டுகள் வரை பரவியிருக்கும் பல்வேறுபட்ட கட்டமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பிரபஞ்சம் ஒரு அதி உன்னதமான இயற்கையின் படைப்பு. Continue reading “பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 1”
குறிப்பாக படிமங்களை ஆய்வு செய்யும் போது விஞ்ஞானிகள் எப்போதும் முதல் தடவையிலேயே சரியான முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். தொல்லுயிரியலளர்கள் (paleontologists – டைனோசர் விஞ்ஞானிகள்) பல்வேறு சந்தர்பங்களில் பல மாபெரும் தவறுகளை அவர்களது ஆய்வில் இழைத்துள்ளனர். Continue reading “தேர்சான் 5 இன் புராணக்கதை”