இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம். Continue reading “காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்”
மாதம்: ஒக்ரோபர் 2016
The Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம். Continue reading “அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு”
மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் புதிய குறள்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புளுட்டோவின் பாதி அளவான இந்தக் குறள்கோள், அண்ணளவாக சூரியனை புளுட்டோவின் சுற்றுப்பாதையைப் போல இரண்டு மடங்கு தொலைவில் சுற்றிவருகிறது. பால்வீதியின் பூரணமான வரைபடத்தை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் குழு ஒன்று, Dark Energy Survey ஐ சேர்ந்த Dark Energy Camera வைக் கொண்டு இந்த புதிய குறள்கோளைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கேமரா வானில் அசையும் பொருட்களை கண்காணிக்கும் கருவியாகும். Continue reading “மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு”
MIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும். Continue reading “உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி”
எக்ஸ் கதிர்கள், எம்மால் சாதரணமாக பார்க்கமுடிந்த ஒளியின் சக்தி கூடிய வடிவமாகும். எக்ஸ் கதிர்களால் சாதாரண ஒளியால் பயணிக்க முடியாத ஊடகங்களுக்குள்ளும் பயணிக்க முடியும், உதாரணமாக மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினூடாக. காரணம் எக்ஸ் கதிர் கூடியளவு சக்தியைக் கொண்டிருப்பதனால் ஆகும். Continue reading “எக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்”
சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன. Continue reading “சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்”
காமிக்ஸ்புக் உலகமான மார்வல் யுனிவெர்ஸ்ஸில் வரும் ஒரு சிறந்த கதாப்பாத்திரம் J.A.R.V.I.S ஆகும். ஜானி ஸ்டார்க்கின் (அயர்ன் மேன்) வீட்டு சுப்பர் கணணி இந்த ஜார்விஸ். J.A.R.V.I.S ஸ்டார்க் வீட்டின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது முதல், அயர்ன் மேனின் பறக்கும் கவசத்தை கட்டுப்படுத்துவது வரை இவரின் வேலைதான். Continue reading “அசூர பல்சாரின் மர்மம்”