வெப்பம் என்றால் என்ன?

ஒரு இலகுவான கேள்வி அல்லவா? அன்றாட வாழ்வில் வெப்பம் என்னும் சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. குளிர்,வெப்பம், காலநிலை, வெயில், சூடு இப்படி பல வழிகளில் நாம் அன்றாடம் வெப்பத்தோடு இணைந்தே இருக்கிறோம். ஆனால் எத்தனை பேருக்குஉண்மையில் இந்த வெப்பம் என்றால் என்ன என்று தெரியும்? வெப்பத்திற்கு இலகுவாக வரைவிலக்கணம் ஒன்றை சொல்லிவிடமுடியுமா? வெப்பத்திற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Continue reading “வெப்பம் என்றால் என்ன?”

பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வரும் போது வழமைக்கு மாறாக நிலவின் அளவு பெரிதாகவும் அதன் காரணமாக பிரகாசமாகவும் இருக்கும். இதுவே சுப்பர் நிலவு / பெருமுழுநிலவு (Supermoon) என அழைக்கப்படுகிறது. அதேபோல பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது வழமைக்கு மாறாக சிறிதாக இருக்கும் நிலவு மைக்ரோ நிலவு எனப்படுகிறது. Continue reading “பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்”

15000 விண்கற்களுக்கும் மேல்

ஒவ்வொரு நாளும் பூமியில் 100 தொன் எடையுள்ள சிறிய மணல் துணிக்கையளவு உள்ள விண்கற்கள் விழுகின்றன. அண்ணளவாக இது 14 யானைகளின் நிறைக்குச் சமம்.

வருடத்திற்கு ஒரு முறை, கார் அளவுள்ள விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையை அடையும் முன்னரே பாரிய தீப்பிழம்பாக வானில் எரிந்து சாம்பலாகிவிடும். Continue reading “15000 விண்கற்களுக்கும் மேல்”

பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2

பாகம் ஒன்றை வாசித்த பின்னர் இதனைத் தொடரவும். சில விடயங்கள் பற்றிய விளக்கங்கள் முன்னைய பாகத்தில் இருக்கலாம்.

பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 1

ஹீலியம் அணுக்கரு / Helium nucleus (3×10-15 meters)

ஆவர்த்தன அட்டவணையில்(periodic table) இருக்கும் மூலகங்களில் மிகச் சிறியது ஹைட்ரோஜன். ஒரு புரோத்திரன் மற்றும் இலத்திரன் சேர்ந்தால் ஹைட்ரோஜன் அணு உருவாகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட புரோத்திரன்கள் சேர்ந்து அணுக்கருவை உருவாக்கும் உடன்பாட்டில் முதலாவது சிறிய கட்டமைப்பு ஹைட்ரோஜனுக்கு அடுத்ததாக ஆவர்த்தன அட்டவணையில் இருக்கும் மூலகத்தில் இருக்கிறது.
Continue reading “பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2”

நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு

இன்னைக்கு பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயர் பத்தி கேள்வி வந்துட்டுது. John Bardeen – யாருயா இவரு எண்டு நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்தப் பெயர் அவ்வளவு ஞாபகம் இல்லை, சரி தேடித் பாப்போம் எண்டு பார்த்தா… ஆசாமிதான் இலத்திரனியல் புரட்சிக்கு வழிவகுத்த டிரான்சிஸ்டரைக் கண்டுபிடிச்சவர்களில் ஒருவர். இதுல முக்கியமான விடையம், இதுக்கு இவருக்கு 1956 இல் நோபல் பரிசு கிடைச்சிருக்கு. ஆனா ஆசாமி அதோட நிருத்தியிருக்கணும், ஆனா எதோ அல்வா கடைக்கு போய் அல்வா வாங்கிட்டு வார மாதிரி, திரும்பவும் 1972 இல் இவருக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காரு – எதுக்கு? மீயுயர்கடத்தி, அதாவது superconductivity க்காக. மனிசன் பிச்சு பிச்சு… வைச்சு வைச்சு… உலகத்திலேயே இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வாங்கிய ஒரே ஆசாமி மிஸ்டர் ப்ரடீன் மட்டும்தான். Continue reading “நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு”

மறைந்திருக்கும் பிசாசுகள்

கடந்த வாரம் ஹாலோவீன் வாரம், வீதி முழுக்க கோரமான ஆவிகள் தொடக்கம் இரத்தம் குடிக்கும் வம்பயார்கள் வரை அச்சுறுத்தும் உருவங்கள் நிரம்பியிருக்கும் காலம். ஆனால் எமக்குத் தெரியும், இவையெல்லாம் எமது நண்பர்களும், சுற்றத்தவர்களும் என்று. பேய்கள் அல்லது அரக்கர்கள் என்பது உண்மையிலேயே இல்லாத ஒன்று… அல்லது உண்மையாக இருக்குமோ? Continue reading “மறைந்திருக்கும் பிசாசுகள்”

ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?

இன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன! Continue reading “ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?”