பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

பனி படர்ந்த காலைவேளையில் விடியலுக்கு முன்னர் எழுந்து பார்த்திருக்கிறீர்களா? புகை போன்ற பனி மண்டலம் சூரியனது ஒளி வந்தவுடன் மெல்ல மெல்ல மறைந்துவிடும். சூரியனது வெப்பம் பனியை உருக்கிவிடும். நமது சூரியன் பூமிக்கு இன்னும் அருகில் இருந்தால் இன்னும் வேகமாக பனியை அதனது வெப்பம் உருக்கிவிடும். Continue reading “பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?”

வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி

2015 இல் ஒரு விண்மீன் தனது வாழ்வுக் காலத்தை முடித்துக் கொண்டு உக்கிரமான சுப்பர்நோவாவாக வெடித்துச் சிதறியதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதுவரை அவதானித்த சுப்பர்நோவாக்களை விட மிகப்பிரகாசமான வெடிப்பு. நமது பால்வீதியை விட 20 மடங்கு பிரகாசமாக இருந்தது அந்த வெடிப்பு. 100 பில்லியன் விண்மீன்களை விடப் பிரகாசமாக ஒரே தடவையில் வெடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று; சுப்பர்நோவா ஒன்றால் உருவாக்கக் கூடிய சக்தியை விட இது பலமடங்கு அதிகம். Continue reading “வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி”

பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம்

கடந்த 20 ஆண்டுகளில், சூரியத் தொகுதிக்கு வெளியே கோள்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியாத நிலையில் இருந்து, சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் 3500 ‘பிறவிண்மீன் கோள்’களைக் (exo-planets) கண்டறிந்துள்ளோம். Continue reading “பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம்”

விண்மீனின் குடும்பப் புகைப்படம்

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஏலியன் இனம் ஒன்று நமது சிறிய பூமியைக் கண்டறிந்து ஒரு நாள் முழுதும் எம்மை ஆய்வு செய்ய கருவிகளை அனுப்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய ஸ்கேனரைக் கொண்டு மொத்த பூமியையும் அவர்களால் படம்பிடிக்க முடியும். ஒரே நாளில் அவர்களால் பல தகவல்களைத் திரட்டமுடியும். அதில் அதிகமான தகவல்கள் மனிதர்களைப் பற்றியும் அவர்களது நாளாந்த நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருக்கும். Continue reading “விண்மீனின் குடும்பப் புகைப்படம்”