பூமியின் காந்தப்பட்டையை படமிடல்

ஆபத்தான பிரபஞ்ச கதிர்வீச்சில் இருந்தும், பூமியைத் தாக்கும் துணிக்கைகளிடம் இருந்தும் பூமியை பாதுகாக்க பூமியைச் சுற்றி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கூடு இல்லாவிட்டால் பூமியில் உயிர் என்பது தோன்றியிருக்காது. இந்தக் கூடு கண்களுக்கு புலப்படாத கூடு. இதுதான் பூமியின் காந்தப்புலம். Continue reading “பூமியின் காந்தப்பட்டையை படமிடல்”

வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்

பத்து செக்கனில் எத்தனை விண்வெளிப் பொருட்களை உங்களால் பட்டியலிடமுடியும்?

நீங்கள் பின்வருவனவற்றில் எதாவதை பட்டியலிட்டீர்களா? கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், செய்மதிகள், நெபுலாக்கள், கருந்துளைகள். Continue reading “வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்”

அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்

ஒரு காந்தம் ஒன்றை இரண்டாக உடைத்தால், ஒரு பகுதி ஒரு துருவத்தையும் மறு பகுதி அடுத்த துருவத்தையும் கொண்டிருக்காது. மாறாக உங்களுக்கு கிடைப்பது இரண்டு சிறிய காந்தங்கள். ஆனால் காந்தங்கள் சிறிதாக சிறிதாக அதன் நிலையான தன்மை குறைவடைகிறது. அதாவது துருவங்கள் அடிக்கடி மாறும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது ஒரு அணுவையே நிலையான காந்தமாக விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர். Continue reading “அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்”

சனியின் சூடான வளையங்கள்

மேகங்கள் இல்லாத இரவில் வெளியில் சென்றால், நீங்கள் ஐந்து கோள்கள் வரை தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்கமுடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை வெறும் கண்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கும்.

இந்தக் கோள்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் தொலைநோக்கி கண்டுபிடிக்கும் வரை சனியின் வளையங்களை யாருமே பார்த்திருக்கவில்லை. Continue reading “சனியின் சூடான வளையங்கள்”