தப்பியோடும் பெரும்திணிவுக் கருந்துளை

சூரியனை விட 160 மில்லியன் மடங்கு திணிவு கொண்டதும், கண்களுக்கு புலப்படாததும், தற்போது ஓடி ஒழிய நினைப்பதும் எது?

புதிதாகக்க் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்திணிவுக் கருந்துளை ஒன்று!

பெரும்திணிவுக் கருந்துளை என்பது அதனது பெயர் சொலவது போலவே மிக மிகத் திணிவுகொண்ட கருந்துளைகளாகும். இவை சூரியனைப் போல பில்லியன் மடங்கு திணிவைக்கூட கொண்டிருக்கும். எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு சக்தியைக் கொண்டிருக்கும் இந்தக் கருந்துளைகள் அருகில் இருப்பவற்றை கபளீகரம் செய்வதிலும் வல்லவை. விண்மீன்கள், கோள்கள் மற்றும் ஒளியைக்கூட இவை விட்டுவைப்பதில்லை.

விண்மீன்களுக்கு இடையில் சாதாரண அளவுகொண்ட கருந்துளைகளை அவதானிக்கக்கூடியவாறு இருப்பினும், பெரும்திணிவுக் கருந்துளைகள் பொதுவாக விண்மீன் பேரடைகளின் மையத்திலேயே காணப்படும். இதனால்த்தான் விண்மீன் பேரடையின் மையத்தைவிட்டு ஓடிச்செல்லும் பெரும்திணிவுக் கருந்துளையை தற்போது கண்டறிந்த விண்ணியலாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Chandra-renegadeBH
படவுதவி: X-ray: NASA/CXC/NRAO/D.-C.Kim; Optical: NASA/STScI; Illustration: NASA/CXC/M.Weiss

இந்த பெரும்திணிவுக் கருந்துளை செல்லும் பாதையை வைத்துக்கொண்டு விண்ணியலாளர்கள் இந்த கருந்துளை விண்மீன் பேரடையை விட்டுச் செல்வதற்காக காரணம் என்ன என்று கண்டறிந்துள்ளனர். மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர், இந்தக் கருந்துளை இருக்கும் விண்மீன் பேரடை அருகில் உள்ள இன்னொரு பேரடையுடன் மோதியுள்ளது.மோதலின் பின்னர் இந்த இரண்டு விண்மீன் பேரடைகளிலும் இருந்த விண்மீன்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய விண்மீன் பேரடையை உருவாக்கியுள்ளது. அவ்வேளையில் இரண்டு விண்மீன் பேரடையிலும் இருந்த இரண்டு பெரும்திணிவுக் கருந்துளைகள் புதிதாக உருவாகிய விண்மீன் பேரடைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு விண்மீன் பேரடை இரண்டு பெரும்திணிவுக் கருந்துளைகளுக்கு போதாது. இரண்டு கருந்துளைகளினதும் அதிவீரியமான ஈர்ப்புசக்தி இரண்டு கருந்துளைகளையும் ஒன்றை ஒன்று நோக்கி கவர்ந்து ஒரு கட்டத்தில் இரண்டும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறிவிட்டது. இந்த மிகச்சக்திவாய்ந்த மோதல் மூலம் உருவான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரவியது.

இந்த ஈர்ப்பு அலைகள் பரவிய திசைகளில் ஒரு பக்கம் மட்டும் வீரியமாக அலைகள் வெளிப்பட்டிருந்தால், இந்தக் கருந்துளைகள் அந்த அலைகள் சென்ற திசைக்கு எதிர்த்திசைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். இது பின்னுதைப்பு (recoil) எனப்படுகிறது. ரொக்கெட் ஒன்று செலுத்தப்படும் போது இதனை நாம் பார்க்கலாம்: ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ள எஞ்சின் துவாரங்களில் இருந்து வெளிவரும் வாயுக்கள் பூமியை நோக்கி தள்ள, ராக்கெட் அதற்கு எதிர்த் திசையில் மேலெழும்பும்.

இதுதான் இந்தப் பெரும்திணிவுக் கருந்துளையையும் அந்த விண்மீன் பேரடையின் மையத்தில் இருந்து விலகிச்செல்ல காரணமாக இருந்திருக்கவேண்டும்!

மேலதிகத் தகவல்

நமது சூரியத் தொகுதி, பால்வீதியின் மையத்தில் இருந்து 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. பால்வீதியின் மையத்தில் Sagittarius A* எனும் பெரும்திணிவுக் கருந்துளை காணப்படுகிறது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1717/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலார் வரை

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் வில்லியம் ஹெரச்சல். 1738 இல் ஜெர்மனியில் உள்ள ஹனோவர் எனுமிடத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டு பல்வேறு இசைக்கருவிகளில் தேர்ச்சிபெற்றார். ஆனாலும் அறிவியலிலும் ஆர்வம் இருந்தது.

19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார். மே 1773 இல் இருந்து தனது தங்கை கரோலினுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து இரவுவானை தினமும் அவதானிப்பது தொடங்கிற்று.

800px-William_Herschel01

விண்ணில் தெரியும் பல புள்ளிகள் உண்மையில் ஒரு விண்மீன் அல்ல மாறாக அவை இரண்டு விண்மீன்கள் மிக மிக அருகில் இருப்பதால் வெறும் கண்களுக்கு ஒரு போல தெரிகிறது என்று தனது தொலைநோக்கி ஆய்வுகளில் கண்டறிந்தார்.

மார்ச் 13, 1781 இரவில் அவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்து வானை அவதானிக்கும் போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. முதலில் அது ஒரு நெபுலா அல்லது வால்வெள்ளி என்றே ஹெரச்சல் கருதினார், ஆனால் நீண்ட அவதானிப்புகளுக்கு பிறகும், வேறு பலரின் அளவீடுகளுக்கு பின்னரும் அது ஒரு பெரிய கோள் என்று முடிவானது. அதுதான் இன்று நாமறியும் யுறேனஸ் கோள்.

தனது வாழ்நாளில் நூற்றிற்கும் மேற்பட்ட இருமைவிண்மீன்கள், ஆயிரக்கணக்கான நெபுலாக்கள் என்பவற்றை அட்டவனைப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, கட்புலனாக ஒளியின் அலைநீளத்தில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்வீச்சைக் கண்டறிந்தவரும் இவரே. இதன் மூலம்சூரியனில் இருந்து பட்புலனாகும் ஒளி மட்டுமல்ல, கண்களுக்கு புலப்படாத வேறுபல கதிர்வீச்சுக்களும் வருகின்றன என்று முதன்முதலில் முடிவெடுத்தவர் இவரே.

எவ்வளவு புகழ் வந்தாலும், இறுதிவரை ஒரு சாதாரண விஞ்ஞானியாகவே, இயற்கயின் அற்புதங்களை கண்டறிய ஆவல் கொண்ட சிறுவனாகவே தன்னை அவர் நினைத்துக்கொண்டார். விஞ்ஞானத்தின் வரலாற்றில் மிகச் மிகச்சிறந்த கதைகள், இயற்கை மீது கொண்ட காதலால் உருவானது என்பதனை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு

2008 இல் இருந்து ஆர்டிக் வட்டப்பகுதியில் இருக்கும் Svalbard என்கிற தீவுக்கூட்டத்தில் உலக விதைக்கிடங்கு இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய பேரழிவில் இருந்து உருவாகக்கூடிய உணவுத்தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஆகியவற்றில் பாதுகாக்க மில்லியன் கணக்கான பயிர்களின் விதைகள் இங்கே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. Continue reading “வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு”

டீடீ என்னும் தூரத்து குறள்கோள்

புளுட்டோவை உங்களுக்கு நினைவிருக்கலாம், இப்போது அது கோளில்லை. அதனை நாம் “குறள்கோள்” என்று அழைக்கிறோம். புளுட்டோவைப் போலவே மனது சூரியத்தொகுதியில் இன்னும் நான்கு குறள்கோள்கள் இருக்கின்றன. அவையாவன சீரீஸ், ஹாவ்மீயா, மாக்கேமாக்கே, மற்றும் ஏரிஸ். இவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு குறள்கோள் இந்த லிஸ்டில் சேரப்போகிறது, இதுதான் “டீடீ” (DeeDee). Continue reading “டீடீ என்னும் தூரத்து குறள்கோள்”

நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்

400 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு புறவிண்மீன் கோளொன்றின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் அண்ணளவாக நமது நெப்டியூன் அளவாகும், மற்றும் அதனது தாய் விண்மீனை மிக அருகில் சுற்றிவருகிறது. Continue reading “நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்”

உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்

ஆகஸ்ட் 2016 – ஆர்டிக் வட்டப் பிரதேசத்தினுள் இருக்கும் வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஒரு பையன் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறான். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான். அவனைப்போலவே தொன்னூருக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், அதில் ஐம்பதிற்கும் அதிகமானோர் சிறுவர்கள். இந்தப் பையன் இறக்க காரணமாக இருந்ததும், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட காரணமாக இருந்ததும் அந்திராக்ஸ் எனப்படும் ஒரு தொற்றுநோய், இதனை Bacillus anthracis எனும் பக்டீரியா தோற்றுவிக்கிறது. திடிரென வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஆந்திராக்ஸ் தொற்று உருவாகக் காரணமென்ன? Continue reading “உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்”

வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே?

ஆயிரக்கணக்கான செய்மதிகள் பூமியைச் சுற்றி வலம்வருகின்றன. ஆனால் அவை நிரந்தரமாக பூமியை சுற்றிவருவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளும், விண்வெளியின் கடினமான நிலைமைகளும் செய்மதிகளின் வாழ்வுக்காலத்தை பாதிக்கின்றன. Continue reading “வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே?”

காசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம்

அண்ணளவாக 13 வருடங்களாக சனியை சுற்றிவந்த காசினி-ஹுய்ஜென்ஸ் திட்டம் நிறைவுக்கு வருகிறது.

காசினி விண்கலம் 1997 இல் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. ஏழு வருடங்களாக சூரியத் தொகுதியில் பயணித்து சனியை அடைந்தது காசினி.

அதன் பிறகு சிலமாதங்களின் பின்னர் காசினி “தாய் விண்கலம்”, ஹுய்ஜென்ஸ் (Huygens) எனும் ஆய்வுக்கலத்தை சனியின் மர்மம் நிறைந்த துணைக்கோளான டைட்டானை நோக்கி ஏவியது. வெளிப்புற சூரியத்தொகுதியில் முதன்முதல் தரையிறக்கப்பட்ட நிகழ்வு இதுவாகும்!

டைட்டான் துணைக்கோளை ஆய்வுசெய்த ஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலம் பூமிக்கும் டைட்டானுக்கும் நிறைய விடயங்களில் ஒற்றுமை இருப்பத்தை கண்டறிந்தது. அதற்கு அடர்த்தியான வளிமண்டலம் உண்டு, மேலும் காலநிலை (டைட்டானில் மீதேன் எனும் இரசாயனமே மழையாக பொழிகிறது) மற்றும் ஏரிகளும் (மீதேனால் ஆக்கப்பட்ட) அங்கு காணப்படுகின்றன. ஆனாலும், டைட்டான் பூமியைவிட மிகவும் குளிரானது. அதனது மேற்பரப்பு வெப்பநிலையான -180 பாகை செல்சியஸ் பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குளிரானது.

Cassini_between_Saturn_and_the_rings
ஓவியரின் கற்பனையில் – காசினி விண்கலம் சனியின் மேற்பரப்பிற்கும் வளையங்களுக்கும் இடையில் பயணிக்கும் போது. படம்: NASA/JPL-Caltech

ஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலத்தை டைட்டானில் இறக்கியபின்னர் காசினி விண்கலம் சனியைப் பற்றியும், அதனது வளையங்கள் மற்றும் ஏனைய துணைக்கோள் குடும்பத்தையும் ஆய்வுசெய்தது. காசினி சனியின் இன்னொரு துணைக்கோளின் மேற்பரப்பில் இருந்து நீர் பீச்சியடிப்பதை அவதானித்தது, மேலும் அந்தக் கோளின் மேற்பரப்பிற்கு கீழே ஏலியன் உயிரினம் வாழக்கூடிய காலநிலையைக்கொண்ட சமுத்திரம் ஒன்று ஒழிந்திருப்பதையும் இது கண்டறிந்தது.

பலவருட கடினஉழைப்பிற்குப் பின்னர் காசினி விண்கலத்தின் எரிபொருள் முடியப்போகிறது. விஞ்ஞானிகள் கசினி விண்கலத்தை செப்டெம்பர் 15 இல் சனியுடன் மோதி இறுதியாக இந்தத்திட்டத்தை முடிக்க எண்ணியுள்ளனர். இதற்குக் காரணம் காசினி விண்கலம் எதிர்காலத்தில் தவறுதலாக சனியின் துணைக்கோள்கள் ஏதாவது ஒன்றுடன் மோதுவதை தவிர்க்கவே.

அதுவரை காசினி விண்கலம் தனது கடைசி மாதங்களில் சனிக்கும் அதனது வளையங்களுக்கும் இடையில் பலமுறை சுற்றிவரும், இந்தப்பிரதேசம் இதுவரை ஆராயப்படாத பிரதேசமாகும்.

சனிக்கும் அதன் முகில்களுக்கும் மிக அருகில் இருக்கும் வளையங்களை துல்லியமாக காசினி படம்பிடிக்கும். மேலும் சனியின் ஈர்புவிசையையும் அளக்கும், இதன் மூலம் விஞ்ஞானிகளால் சனியின் உட்புறக்கட்டமைப்பு எப்படியிருக்கும் என்று கண்டறியமுடியும்.

ஆக, காசினியின் இறுதிக்காலத்திலும் சனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவுகிறது.

மேலதிக தகவல்

சனி ஒரு வாயு அரக்கன் வகை கோள், அதாவது சனிக்கு திண்மமான மேற்பரப்பு இல்லை. காசினி சனியின் வளிமண்டலத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாக புதையும். புதையும் அளவு அதிகரிக்க காசினி அதிகளவு வெப்பம் மற்றும் அழுத்தத்தை உணரும், அப்படியே ஒரு கட்டத்தில் நொறுக்கப்பட்டு எரிந்து சாம்பலாகிவிடும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1715/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam