அசல்போலி

எழுதியது – க.காண்டீபன்

உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று
விரட்டி, நோட்டையே புரட்டி
சீ…. போ…நாயே என்றவர்கள்.
செத்துவிடவே சிவலோகம் அனுப்ப,
கலர் கலர் மாலைகளும், அலங்காரங்களும்.
கூடவே!

சொந்தங்கள் என்று சொல்லி
நோட்டிசுகளும் பறந்து வந்தன.
மிகநொந்து போன மருமகள்மார்களோ!
அயன் குழையாத பஞ்சாப்பியுடன்,
மாமியின் தலைமாட்டில்.
பெயர் தெரியாத பேரப்பிள்ளைகளோ!
பாசத்தீயை பந்தமாக பிடித்து,
புலம்பியபடி…..

அன்னியமாகி விட்ட ஆன்மாவோ!
இக் கூத்துக்களைப் பார்த்து
அத்தனையும் அசல்போலி தான் என்றது
முருங்கையிலிருந்த படி…!

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03

எழுதியது: முருகேசு தவராஜா

இந்நாட்டிலே, சாதாரண வகையைச் சேர்ந்த சாராயம் அதிகளவு விற்பனையாகும் பிரதேசத்தில் மட்டக்களப்பும், மன்னாரும் முன்னிலையில் உள்ளன. இது பற்றிய தகவல்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

பஞ்சமா பாதகங்களையுப் பக்குவப்படுத்திய பழச்சாறு போன்று ஆக்கி அனுபவித்த சில அரசிகள், மனித இரத்தத்தில் குளித்துக் களித்ததாயும், இவ் அழகிகள் பாலிலே குளித்து குதூகலித்ததாகவும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அது விரலிற்கு தகுந்த வீக்கமாகவும் கொள்ளப்படுகிறது. இங்கு யதார்த்த வாழ்வின் சில அம்சங்கள் தொட்டுச் செல்லப்பட்டன.

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03”

பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்

 

BBC Future இணையத்தளம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிக குறைந்த வெப்பநிலையில் இருந்து மிக மிக அதிகமான வெப்பநிலைவரை உள்ள பொருட்களையும், அமைப்புக்களையும் விளக்கும் விதமாக அழகான ஒரு விளக்கப்படத்தை பிரசுரித்துள்ளது. எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்கவாறே அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading “பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்”

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02

அடிநிலை மக்களின் கொள்ளளவு தனியொரு குடும்பத்தைப் பொறுத்து மிகச் சிறிதாய் இருப்பினும், உலகலாவிய ரீதியில் அவர்களின் தொகை பெரிய அளவில் இருப்பது தவிர்க முடியாததொன்றாகவே உள்ளது. அண்மையில் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தி வரும் எனக் கருதலாம்.

(வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெற்ற நண்பர் மூலம் கிடைத்த தகவல்)

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02”

யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01

மனித வாழ்வே மயக்கமுடையது. அதிலே மதுவும் சேர்ந்துவிட்டால், அது மாபெரும் நரகமேயாகும். மனிதன், ஒரு புறத்தில் கடந்த காலங்களின் சலனங்களையும், எதிர்கால ஏக்கங்களையும் எந்நேரமும் மனதில் சுமந்துகொண்டு பகல்நேரச் சிறையிலே வாழ்கின்றான். மறுபுறத்தில் நிறைவேறா எண்ணங்களின் படிமங்களை நித்திரையில் கனவாகக் கண்டு கற்பனையில் மிதந்து கொண்டு குழம்பிய நிலையில் வாழ்கின்றான். உண்மையிலே இவ்வாறான வாழ்வு வாழ்வல்ல.

Continue reading “யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01”

விபுலாநந்தம் – தெய்வீகம்

காரேறுமூதூர்க் களக்கொழுந்தே, நாம் வாழும் கிழக்குதித்த ஞான சூரியனே உலகிற்கு தமிழ் ஒளி பரப்ப இங்குதித்த உத்தமனே வாழ்க.

குழந்தைப் புலவனாக, ஈழத்தின் முதல் தமிழ் பண்டிதனாக பயிற்றப்பட்ட ஆசிரியனாக, விஞ்ஞான பட்டதாரியாக, பன்மொழி புலவனாக மூவாசையும் துறந்தோனாக, ஆராய்வளனாக, தமிழர் மனதிலெல்லாம் பதிந்த அறிஞர்க்கு அறிஞனாக நமது முதுசமாக தமிழ் முனிவனாக, எவ்வாறு உயர்ந்தான் விபுலாநந்தன் எனும் பேராசான். அது திருவருளே அன்றி வேறில்லை. Continue reading “விபுலாநந்தம் – தெய்வீகம்”

“கண்ணாமூச்சி ரே…… ரே………”

 

“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே பல்கலைக்கழகம் பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி. உழைப்பிற்கேற்ற பலனும் கிடைத்தது. Continue reading ““கண்ணாமூச்சி ரே…… ரே………””

“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. அதாவது நாமும் வாழ்ந்து, நம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைப்போம் என்பதாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது.

Continue reading ““மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….””

ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு.

நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன்.
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது.

விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது.

ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

1935 நத்தார்

பேடன்வெய்லருக்கு மீண்டும் வந்து, முன்னர் நான் ஈடுபட்டிருந்த கருமங்களைத் தொடர்ந்தேன். நத்தார் அணுகிக் கொண்டிருந்த வேளையில் கமலாவின் நிலையில் வீழ்ச்சி தொடங்கியது. மீண்டும் நெருக்கடி. அவளுடைய வாழ்வினை உண்மையிலேயே பயம் ஊசலாடியது. 1935ன் அந்தக் கடைசி நாட்களிலே வெண்பனி படந்திருந்த காலத்திலே என்ன செய்வதென்று தெரியாமலும், எத்தனை நாட்கள் அவள் உயிருடன் இருப்பாள் என்று தெரியாமலும் தவித்துக் கொண்டிருந்தேன்.

Continue reading “1935 நத்தார்”

சாதனைகள் பலவிதம்

இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை! அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.

Continue reading “சாதனைகள் பலவிதம்”

கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

விண்மீன்களின் வாழ்க்கை என்பது அதன் இறப்போடு முடிவதில்லை. விண்மீன்கள், தனது எரிபொருளை, அதாவது ஐதரசனை முடிக்கும் வரை முதன்மைத் தொடர் பருவத்திலேயே இருக்கும். பொதுவாக விண்மீனில் இருக்கும் ஐதரசன் அனைத்தும் ஹீலியமாக மாறியவுடன் விண்மீனின் அணுக்கருச் செயற்பாடு முடிவுக்கு வருகிறது, இந்நிலையில் விண்மீனின் அளவை தக்கவைத்திருக்கும் வெளிநோக்கிய அழுத்த சக்தியும் இல்லாமல் போகவே, விண்மீனின் திணிவினால் உருவாகிய ஈர்ப்புசக்தியை வெல்லமுடியாமல் விண்மீனின் மையப்பகுதி சுருங்கத் தொடங்கும். இவ்வாறு சுருங்குவதால் மையப்பகுதியின் வெப்பநிலை மேலும் அதிகரித்து விண்மீனின் மேற்பகுதி வெளிநோக்கி விரிவடையும். இப்படி விரிவடைவதால் இந்த வெளிப்பகுதியின் வெப்பநிலை குறைவடையும். இவ்வாறு விரிவடையும் விண்மீன் சிவப்பரக்கன் (red giant) எனப்படும். Continue reading “கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு”

சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!

டிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன? சூறாவளி ஏன் வருகிறது? அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சாதாரண குடிமகன்களான நமக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதில்லை.

எல்லோருக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் இவற்றைப் புரிய வைக்கவே இந்த கட்டுரை.

Continue reading “சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!”

சுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி

மட்டக்களப்பினை பொறுத்தவரை சுனாமி என்றதும் அடுத்து ஞாபகம் வருவது நாவலடிப் பிரதேசம் தான். இப்போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள்.

படங்கள் : அமர்நாத்

கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று முன்னர் பார்த்தோம். ஆகவே விண்மீன்களின் வாழ்கையைப்பற்றி கொஞ்சம் அலசுவோம். Continue reading “கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு”

இதுவும் யாழ்… இது தான் யாழ்…

நல்லை நகர் நாவலர்
பதிதனை காண நினைத்த நேரம்
விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் …
அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு
கிடைத்து விட்டது அதிட்டம்

தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன்
தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே
அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல
அவர்களின் பாசத்தையும் தான்.

நாட்டுக் கோழியும் நறுக்கப்பட்ட நண்டுக்காலும்
சூப்புவதற்கு ருசியாகத்தான் இருந்தது.
“கள்” குடிக்க வேண்டுமென்ற
கொள்ளை நாள் ஆசையும் தீர்ந்தது
இனி என் கட்டையும் வேகும்.

கோயிலென்றும் குளமென்றும்
தெருவுக்குத் தெரு விடாது மணக்கிறது
இந்துவின் மண் வாசம்.

நெய்தல் நிலத்திலே நிலை கொண்ட
நயினைத் தாயின் அருள்- எங்கள்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது.

மட்டு நகர் மான்மியம் புகழ்
F.X.C நடராச ஐயாவைப் பெற்றெடுத்த
காரை நகர் மண்ணில் என் கால்கள்
பதிந்ததையெண்ணி அடைந்தது
மனது மட்டற்ற மகிழ்ச்சி.
ஈழந்துச் சிதம்பரம் பல அவசியங்களை
ரகசியமாய் கூறி நிற்க…

முறிந்த பனைகள் முடிந்த கதையாகாமலிருக்க
முட்டி மோதி வளர்கின்றன புதிய பனைகள்
காட்சிகளும் மனசாட்சிகளும்
தேடுகின்றன விடியலை..!?

கதிரேசபிள்ளை காண்டீபன்
படம்: இணையம்

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்
உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்
பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு
தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே
வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்
அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே
தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த
நிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே
நட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்
வானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு
தெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்
ஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே!

சிறி சரவணா

படம்: இணையம்

கணிதமேதை சீனீவாச ராமானுஜன்

குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கணித மேதை ராமனுஜன்.

Continue reading “கணிதமேதை சீனீவாச ராமானுஜன்”

கவிஞன் சஞ்சிகை

ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து தனது 22 இதழ்களை உதிர்த்துள்ளது.

Continue reading “கவிஞன் சஞ்சிகை”