புதிய பரிமாணம் – parimaanam.net

parimaanam-fb cover

நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்ட்பிரஸ் தளத்தில் இருந்து தனியான தளமாக மாற்றி விட்டேன்.

புதிய தளத்தில் இலகுவாக கட்டுரைகளை வாசிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் பல புதிய பிரிவுகளையும் உங்களால் இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.

இனி parimaanam.net தளத்திலேயே புதிய கட்டுரைகள் அனைத்தும் பிரசுரிக்கப்படும். ஆகவே தயவுசெய்து parinaaman.net தளத்தை பார்த்து, அதனை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி,
சரவணா

நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு

இன்னைக்கு பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயர் பத்தி கேள்வி வந்துட்டுது. John Bardeen – யாருயா இவரு எண்டு நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்தப் பெயர் அவ்வளவு ஞாபகம் இல்லை, சரி தேடித் பாப்போம் எண்டு பார்த்தா… ஆசாமிதான் இலத்திரனியல் புரட்சிக்கு வழிவகுத்த டிரான்சிஸ்டரைக் கண்டுபிடிச்சவர்களில் ஒருவர். இதுல முக்கியமான விடையம், இதுக்கு இவருக்கு 1956 இல் நோபல் பரிசு கிடைச்சிருக்கு. ஆனா ஆசாமி அதோட நிருத்தியிருக்கணும், ஆனா எதோ அல்வா கடைக்கு போய் அல்வா வாங்கிட்டு வார மாதிரி, திரும்பவும் 1972 இல் இவருக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காரு – எதுக்கு? மீயுயர்கடத்தி, அதாவது superconductivity க்காக. மனிசன் பிச்சு பிச்சு… வைச்சு வைச்சு… உலகத்திலேயே இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வாங்கிய ஒரே ஆசாமி மிஸ்டர் ப்ரடீன் மட்டும்தான். Continue reading “நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு”

மீரா – அறிவியல் புனைக்கதை

எழுதியது: சிறி சரவணா


 

“நீ ஏன் இங்க இருக்கிறே?”

“இது அமைதியா இருக்கே!”

“தனியாவா வந்தே?”

“இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…”

தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை, அதுவும் இப்படி அதிகாலை வேலையில் தனியா இந்த நதிக்குப் பக்கத்தில் இருகிறதே…

யாரும் இல்லாத இடம் வேறு… சற்றுக் காடான பகுதிதான், அதனால் குழந்தையை தனியாக விட்டுச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை… யாரும் வரும் வரை அவ்விடத்தில் நின்றே தனது உடற்ப்பயிர்சியை செய்துகொண்டிருந்தார்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி, யாரும் அதிகம் வராத இந்த பார்க்கின் ஒதுக்குப் புறமான, கூலாங்கற்கள் நிரம்பிய நதியின் அருகில் காலைவேளையில் ஓடுவது டாக்டர் கோவிந்தனுக்கு பிடித்தமான விடயம். ஆனால் இன்று யாருமற்ற இடத்தில் ஒரு சிறு பெண்குழந்தை!

“பாப்பா உன் பேரென்ன?”

“மீரா…. மீ….ரா….” என ராகமாகச் சொன்னது அந்தக் குழந்தை. அத்தோடு நிற்காமல், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற கையையும் காலையும் சும்மா அசைத்துக் கொண்டு நின்ற கோவிந்தனைப் பார்த்து, தன் அருகில் வந்து அமருமாறு சைகை செய்தது, ஆனால் அதன் பார்வை அந்த நதியில் ஓடும் நீரை விட்டு அகலவில்லை.

யார் இந்தப் பெண் குழந்தை? இதன் செய்கைகளைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்ட மாதரியும் இருக்கிறதே, பேசாமல் போலிசுக்கு போன் பண்ணிரலாமா? என்ற என்னத்தை சற்றே ஒதுக்கி வைத்து, கையில் இருந்த துவாயால் தன் கழுத்தை துடைத்துக் கொண்டே அந்தக் குழந்தைக்கு அருகில் நிலத்திலேயே கூலாங்கற்கள் நிரம்பியிருந்த அந்த நதிக்கரை ஓரமாக அமர்ந்தார்.

Continue reading “மீரா – அறிவியல் புனைக்கதை”

கணிதமேதை சீனீவாச ராமானுஜன்

குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கணித மேதை ராமனுஜன்.

Continue reading “கணிதமேதை சீனீவாச ராமானுஜன்”

தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

தொழிற்கல்வி
தொழிற்கல்வி

இன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

Continue reading “தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்”

மல்லிகை

மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை
எவரையும்  கவரும் மணம்
அவள் தலையில் ஒரு அணை போல்
குழந்தையிடம் வளரும் கலை போல்
தினம் தினம் மலரும்
மல்லிகை

மரங்களை ஏன் நடுதல் வேண்டும்

இயற்கை மரங்கள்
இயற்கை மரங்கள்

நாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே. Continue reading “மரங்களை ஏன் நடுதல் வேண்டும்”

முதல் பதிவு

முதல் பதிவு

பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எங்கள் நோக்கமும், ஒரு புதிய முயற்சி, ஏனைய இணைய இதழ்களைப் போலலாமல், தமிழில் எழுத ஒரு முயற்சி.

பல்வேறு பட்ட நண்பர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் ஒரு மாறுபட்ட வாய்ப்புகளை வழங்ககூடிய தளமாக இது இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். தரமான படைப்புக்கள், கவிதைகள், கதைகள், சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் மேலும் பல இந்த பரிமாணத்தில் இணைந்துகொள்ளும்.

இதை தொடங்கிய நானோ, அல்லது நண்பர் அமர்நாத்தோ முழுநேர எழுத்தாளர்களோ அல்லது தொழில்ரீதியாக எழுத்துத்துறையில் இருப்பவர்களோ அல்ல. இருந்தும் எழுத்தில் உள்ள ஆர்வம் எம்மை தூண்டிவிட்டது. தரமான எழுத்துக்கு ஒரு ஊடகமாக கிழக்கிலங்கையில் இருந்து ஒரு முயற்சி.

முடிந்த மட்டும் இலக்கணப்பிழை இன்றி எழுத, எழுதியவற்றை சரிபார்க்க முனைகிறோம், அப்படி இருந்தும் மேலதிகமாக எதாவது எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால், அவற்றை சுட்டிக்காட்டவும் நீங்கள் தயங்க வேண்டாம்.

தரமான எழுத்துக்கும் படைப்பிற்கும் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புதிய பயணம் தொடங்குகிறது.

நன்றி

சிறி சரவணா மற்றும் அமர்நாத்