மீரா – அறிவியல் புனைக்கதை

எழுதியது: சிறி சரவணா


 

“நீ ஏன் இங்க இருக்கிறே?”

“இது அமைதியா இருக்கே!”

“தனியாவா வந்தே?”

“இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…”

தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை, அதுவும் இப்படி அதிகாலை வேலையில் தனியா இந்த நதிக்குப் பக்கத்தில் இருகிறதே…

யாரும் இல்லாத இடம் வேறு… சற்றுக் காடான பகுதிதான், அதனால் குழந்தையை தனியாக விட்டுச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை… யாரும் வரும் வரை அவ்விடத்தில் நின்றே தனது உடற்ப்பயிர்சியை செய்துகொண்டிருந்தார்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி, யாரும் அதிகம் வராத இந்த பார்க்கின் ஒதுக்குப் புறமான, கூலாங்கற்கள் நிரம்பிய நதியின் அருகில் காலைவேளையில் ஓடுவது டாக்டர் கோவிந்தனுக்கு பிடித்தமான விடயம். ஆனால் இன்று யாருமற்ற இடத்தில் ஒரு சிறு பெண்குழந்தை!

“பாப்பா உன் பேரென்ன?”

“மீரா…. மீ….ரா….” என ராகமாகச் சொன்னது அந்தக் குழந்தை. அத்தோடு நிற்காமல், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற கையையும் காலையும் சும்மா அசைத்துக் கொண்டு நின்ற கோவிந்தனைப் பார்த்து, தன் அருகில் வந்து அமருமாறு சைகை செய்தது, ஆனால் அதன் பார்வை அந்த நதியில் ஓடும் நீரை விட்டு அகலவில்லை.

யார் இந்தப் பெண் குழந்தை? இதன் செய்கைகளைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்ட மாதரியும் இருக்கிறதே, பேசாமல் போலிசுக்கு போன் பண்ணிரலாமா? என்ற என்னத்தை சற்றே ஒதுக்கி வைத்து, கையில் இருந்த துவாயால் தன் கழுத்தை துடைத்துக் கொண்டே அந்தக் குழந்தைக்கு அருகில் நிலத்திலேயே கூலாங்கற்கள் நிரம்பியிருந்த அந்த நதிக்கரை ஓரமாக அமர்ந்தார்.

Continue reading “மீரா – அறிவியல் புனைக்கதை”

ஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை

எழுதியது: சிறி சரவணா

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டு
உனக்குள்  என்னையே புதைத்துக்கொள்வேன்
உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே

அழகான தென்றல் மெல்லிதாக வீச, அது ஒரு அழகிய காலைப் பொழுதாக விரிந்தது. ஆதவனுக்கு அதிகாலையிலேயே நித்திரையில் இருந்து எழும்பிவிட வேண்டும் என்று ஆசைகள் அடுக்கடுக்காக இருந்தாலும், ஏனோ அவனால் ஐந்து முப்பதுக்கு முன் எழுந்திருக்கவே முடிவதில்லை. இரவில் மனத்துடன் நடக்கும் போராட்டங்களும் சபதங்களும், விடியல் காலை குளிரின் அரவணைப்பில் மறந்தே போகும். நாளை எழும்பிவிடலாம்!

காலை வேளையில் மரங்களினூடே நடப்பது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இயற்கைதான் எவ்வளவு அழகாக தன் இருப்பை இந்த பிரபஞ்சத்தில் நிலைத்துவிட்டது. அன்பின் மிகுதியில் காதலனும் காதலியும் பின்னிப் பினைவதைப்போல என்று அவனுக்குள்ளே நினைத்துக் கொள்வான். இன்னும் நடக்கலாம், காலை வேளையின் பனிபடர்ந்த அந்தப் பொழுதைப் போல ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்களில் வேறு எப்போதும் இந்த இங்கிதம் இருந்ததில்லை. பனிபடர்ந்த அந்தப் பொழுதும், அது மனதுக்குள் ஏற்படுத்தும் அனுபவங்களும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று ஆதவனின் கருத்து.

Continue reading “ஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை”

“கண்ணாமூச்சி ரே…… ரே………”

 

“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே பல்கலைக்கழகம் பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி. உழைப்பிற்கேற்ற பலனும் கிடைத்தது. Continue reading ““கண்ணாமூச்சி ரே…… ரே………””

மனதை வெல்

ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தினான். மிகத்தொலைவில் இருந்த இலக்கை மிகத்துல்லியமாக குறிவைத்து அடித்தான், அவனது அடுத்த அம்பு, முதல் எய்த அம்பை பிளந்து கொண்டு சென்றது. ஜென் ஆசானை திரும்பிப்பார்த்த வீரன், “இப்போது நீங்கள் இதற்கு சமமாக அம்பு எய்யுங்கள் பார்க்கலாம்” என்று நக்கலாக சொன்னான்.

Continue reading “மனதை வெல்”

உச்சக்கட்ட ஞானோதயம்

ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம் சார்ந்தது, மனித மனத்தின் ஆற்றலை மனிதனுக்கு புரியவைக்கக்கூடிய ஒரு நிலை அவ்வளவுதான்.

Continue reading “உச்சக்கட்ட ஞானோதயம்”

புத்திமதி

image

ஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார்.

Continue reading “புத்திமதி”

நண்பன்

நண்பன்மீன்பெட்டியுடன் நண்பன், “எப்படி நலம்” என்றேன். “நெத்தலியும் சூடையும்” என்றான்.
சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன். Continue reading “நண்பன்”

கற்பனை

தேனீ
தேனீ

தோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ! புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது. Continue reading “கற்பனை”