கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது. Continue reading “கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்”

நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

ஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே. Continue reading “நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்”

Windows and Line Terminator CR+LF

பசங்களுக்கு ப்ரோக்ராம்மிங் படிப்பிக்கும் போது அடிக்கடி வரும் ஒரு பிரச்சினை, ஸ்ட்ரிங் நியூ லைன் பத்தி பேசும் போது பொதுவா எல்லா ப்ரோக்ராமிங் மொழியும் ஒரே சிங்கிள் “\n” (Linefeed என்கிற எழுத்து – ASCII குறியில் LF, decimal value: 10, Hex value: A  மட்டும்) எழுத்தையே பயன்படுத்துது அதாவது ஒரு பைட், ஆனா விண்டோசில் இந்த line terminator எழுத்தை பார்க்கும் போது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது CR என்கிற Carriage Return எழுத்தது (ASCII decimal value: 13, Hex value: D) இது பசங்களுக்கு பெரிய பிரச்சினை. ஏன் இந்த ரெண்டெழுத்து?நீங்க லினக்ஸ் முறைமையை பயன்படுத்தினால் அதில் LF மட்டுமே  line terminator எழுத்தாக பயன்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு? தெளிவாக பார்க்கலாம். Continue reading “Windows and Line Terminator CR+LF”

அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்

ஒரு காந்தம் ஒன்றை இரண்டாக உடைத்தால், ஒரு பகுதி ஒரு துருவத்தையும் மறு பகுதி அடுத்த துருவத்தையும் கொண்டிருக்காது. மாறாக உங்களுக்கு கிடைப்பது இரண்டு சிறிய காந்தங்கள். ஆனால் காந்தங்கள் சிறிதாக சிறிதாக அதன் நிலையான தன்மை குறைவடைகிறது. அதாவது துருவங்கள் அடிக்கடி மாறும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது ஒரு அணுவையே நிலையான காந்தமாக விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர். Continue reading “அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்”

ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?

இன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன! Continue reading “ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?”

பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.

ஒரு tabஇல் முகப்புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு, அடுத்த tabஇல் செய்தி வாசிக்கலாம், அதே போல இன்னொரு tab இல் ஈமெயில் பார்க்கலம். இப்படி பல tabகளைப் பயன்படுத்துவது உண்மையிலேயே பயனுள்ள விடயம். Continue reading “பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender”

சுப்பர்கணணி யுத்தங்கள்

எப்போதுமே நாடுகளுக்கு இடையில் நீ பெரிதா, நான் பெரிதா என்கிற போட்டி இருக்கும், அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இப்படியான போட்டி அதிகளவு காணப்பட்டது. அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்கும் 1950 களின் பின்னர் தொடங்கிய பனிப்போர் எனப்படும் ‘கோல்ட்வார்’ ‘உன் நாடு பெரிதா இல்லை என் நாடு பெரிதா’ என்கிற காரணத்திற்காக இடம்பெற்றது என்று கூறலாம். அப்போது கத்துக்குட்டியாய் இருந்த பல நாடுகளில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும். Continue reading “சுப்பர்கணணி யுத்தங்கள்”

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB பிளாஷ் டிரைவ்களுக்கு இடம்மாற்றும் போது, சில சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.

Continue reading “பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT”

இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)

நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்பமான இணையம் எப்படி தொழிற்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கம்.

இன்டர்நெட்! இணையம்!! இன்று எங்குபார்த்தாலும் பேஸ்புக், டுவிட்டர் என்று எல்லோருமே தங்கள் ஸ்மார்ட்போனில் ஓடுறது, பாயிறது, பறக்கிறது, பதுங்கிறது என்று எல்லாவற்றையும் ‘ஷேர்’ செய்துகொண்டு இருகின்றனர். பெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்!

Continue reading “இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)”

விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்

விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பு, Threshold 2 என அழைக்கப்பட்ட பதிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பாது. ஏற்கனவே விண்டோஸ் 10 இல் இயங்கும் கணணிகளில், விண்டோஸ் அப்டேட் மூலம் இது தானாகவே நிறுவப்படும். அல்லது ISO கோப்பைத் தரவிறக்கி பூரணமான தனி நிறுவலாகவும் நிறுவிக்கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் முன்னரே தெரிவித்தபடி, விண்டோஸ் 10 என்பதே விண்டோஸ் பதிப்பின் கடைசிப் பதிப்பாகும். அப்படியென்றால், விண்டோஸ் 11 என்று அடுத்த பதிப்பு வெளியிடப்படாமல், விண்டோஸ் 10 என்னும் பெயரிலேயே புதிய அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் விண்டோஸ் இயங்குமுறைமைக்கு விண்டோஸ் அப்டேட் மூலம் கொடுக்கப்படும்.

Continue reading “விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்”

கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension

கூகிளின் புதிய குரோம் இணைய உலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.

தற்போது பீட்டா வெர்சனாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த extension, SSL மற்றும் இன்கோக்னிட்டோ பக்கங்களில் தொழிற்படாது. அதாவது https எனத் தொடங்கும் தளங்களில் இது தொழிற்படாது. உதாரணம் பேஸ்புக், ஜிமெயில் போன்றன.

நன்றி: OMGChrome
நன்றி: OMGChrome

நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் போதும். மேலதிக செட்டிங்குகள் தேவையில்லை. நீங்கள் இணைப் பக்கங்களை பார்க்கும் போது, இது பின்னணியில் அவற்றை சுருக்கி டவுன்லோட் செய்யும் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம் உங்கள் பாண்ட்விட்த் சேமிக்கப்படும்.

Continue reading “கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension”

கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

எழுதியது: சிறி சரவணா

கணணிப் பாவனை தற்போது அதிகரித்துவிட்டது, இரவு பகல் என்று பாராமல் எந்தநேரமும் கணணித் திரையைப் பார்க்கவேண்டிய கட்டாயம் சிலருக்கு வேலை நிமிர்த்தமாக இருக்கலாம், சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் திரையின் அதிகூடிய வெளிச்சம் நம் கண்களைப் பாதிக்கின்றது என்பதுதான்.

Continue reading “கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்”

சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

எழுதியது: சிறி சரவணா

பல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.

Continue reading “சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்”

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3

எழுதியது: சிறி சரவணா

முன்னைய பாகங்களை படிக்க

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2


இந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.

ஹபிள் தொலைநோக்கி காசக்ரைன் எதிரோளிப்பான் (Cassegrain reflector) எனப்படும் வகையைச்சார்ந்த தொலைநோக்கியாகும். ஒளியானது ஹபிளின் முதன்மை ஆடியில் பட்டுத் தெறிப்படைந்து அடுத்த சிறிய ஆடியில் படும். அந்த இரண்டாவது ஆடி, முதன்மை ஆடியின் மையத்தில் இருக்கும் துவாரத்தின் ஊடாக ஒளியை குவித்து அனுப்பும். அந்தத் துவாரத்தின் பின்னால், அந்த ஒளியை உணரும் அறிவியல் கருவிகள் காணப்படும். கீழுள்ள படத்தைப் பாருங்கள் புரியும்.

telescope_essentials_howworks2_lg

ஹபிளின் முதன்மை ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது. பூமியில் உள்ள பாரிய தொலைநோக்கிகளுடன் ஒப்பிட்டால் இது ஒரு சிறிய ஆடிதான். பூமியில் 10 மீட்டார் விட்டம் கொண்ட ஆடிகளைக் கொண்ட தொலைநோக்கிகள் எல்லாம் உண்டு! ஆனால் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் மிக முக்கிய பாயிண்ட் – அதன் அமைவிடம், அது நமது வளிமண்டலத்திற்கு மேலே உள்ளது. முதலாவது பாகத்தில் நாம் விண்வெளித் தொலைநோக்கிகளின் அனுகூலங்களைப் பார்த்தோம்.

வளிமண்டலத்திற்கு மேலே இருப்பதால் ஹபிள் தொலைநோக்கியால் துல்லியமான படங்களை பெற முடிகிறது.

பொதுவாக நாம் எல்லோரும், தொலைநோக்கியின் திறமை, அது எவ்வளவு தூரம் ஒரு பொருளை உருப்பெருக்கும் என்பதில் தங்கியிருக்கும் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருப்போம். ஆனால் உண்மையிலேயே தொலைநோக்கியின் திறன், அது எவ்வளவு ஒளியைப் பெற்றுக்கொள்கிறது என்பதில் இருக்கிறது. நிறைய ஒளி என்றால் தெளிவான படம்! குறைய ஒளி என்றால் தெளிவு குறைந்த படம். ஆகவேதான் பிரதான ஆடியின் அளவு அதிகரிக்க அதன் திறனும் அதிகரிக்கிறது. பெரிய ஆடி அதிகளவான ஒளியை பெற்றுக்கொள்கிறது.

ஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் அறிவியல் கருவிகள்

அகண்டபுலக் கமேரா 3 (Wide Field Camera 3 – WFC3)

ஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் மிகவும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய கருவி. இதனால் கட்புலனாகும் ஒளியில் படங்களை எடுக்க முடியும். அது மட்டுமல்லாது ஊதா நிறத்திற்கு அருகில் இருக்கும் புறவூதாக் கதிர்கள் (near-ultraviolet) மற்றும் சிவப்பிற்கு மிக அருகில் இருக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் (near-infrared) ஆகியவற்றையும் படம்பிடிக்க முடிகிறது.

அகண்டபுலக் கமேரா தயாரிப்பின் போது நன்றி: விக்கிபீடியா
அகண்டபுலக் கமேரா தயாரிப்பின் போது
நன்றி: விக்கிபீடியா

இந்தக் கமெராவைப் பயன்படுத்தி கரும்சக்தி, கரும்பொருள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும், விண்மீன்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளும், மிக மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

முதன் முதலில் ஹபிள் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட பொது அதில் அகண்ட புலக் கமேரா/கோள் கமேரா (Wide Field/Planetary Camera – WFPC) தான் பொருத்தப்பட்டிருந்தது. 1993 வரை இந்தக் கமேராவை வைத்தே ஹபிள் படங்களை எடுத்தது. ஆனால் ஆடியில் இருந்த குறைபாட்டால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை. (பகுதி 1 இல் அதைப் பற்றிப் பார்த்துள்ளோம். அதனை வாசிக்க கிளிக் செய்யவும்.)

பின்னர் 1993 இல் அதனை திருத்தும் பணிக்கு சென்ற குழு, அகண்டபுலக் கமேரா/கோள் கமேரா 2 (Wide Field/Planetary Camera 2) என்ற கமெராவைப் பொருத்திவிட்டு வந்தது. ஆனாலும் காலப்போக்கில் இந்த கமெராவின் CCD இல் ஏற்பட்ட குறைபாட்டினால், 2009 இல் WFC3 ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. இது முந்தய இரண்டு கமேரக்களை விட மிகுந்த சக்திவாந்த்தாகும்.

பிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி (Cosmic Origins SpectrographCOS)

2009 இல் ஹபிள் திருத்தப் பணிக்கு சென்ற குழு பொருத்திவிட்டு வந்த ஒரு புதிய கருவி. இது மின்காந்த அலைகளில் புறவூதாக்கதிர்களின் அலைகளை மட்டுமே ஆய்வுசெய்கிறது.

நிறமாலை வரைவிகள், அரியம் போல தொழிற்பட்டு வரும் கதிர்களை வேறுபட்ட அலைநீளங்களில் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மால் குறித்த முதலில் (source) இருந்து வந்த கதிர்களை வைத்துக்கொண்டு, அந்த முதலின் வெப்பநிலை, அதன் இரசாயனக் கட்டமைப்பு மற்றும் அடர்த்தி, அதன் இயக்கம் இப்படி பல்வேறுபட்ட விடயங்களை கண்டறியமுடியும்!

பிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி
பிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி

இந்த COS கருவியைப் பொருத்தமுதல் ஹபிள் தொலைநோக்கி பார்த்த புறவூதாக்கதிர்களின் துல்லியத்தன்மையை இது 10 மடங்கு அதிகரித்தது.

நமது பிரபஞ்சம் தோன்றிய காலகட்டத்தை ஆய்வுசெய்யவும். பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகளைப் பற்றிய ஆய்வுக்கும் இந்த COS பயன்படும்.

COS ஐ பயன்படுத்தி நாம் அறிந்துகொள்ள விளையும் விடயங்கள் இதோ,

  1. பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகள் என்ன?
  2. பிரபஞ்சத்தில் எப்படி விண்மீன் பேரடைகள் முதன் முதலில் உருவாகியது?
  3. விண்மீன்கள் பிறந்துகொண்டிருக்கும் விண்மீன் பேரடைகளைச் சுற்றி எப்படியான பிரபைகள் (halos) காணப்படுகின்றன?
  4. பாரிய விண்மீன்கள், விண்மீன் பெருவெடிப்புகள் என்பவற்றில் தோன்றும் உயிர் உருவாவதற்கு தேவையான மூலகங்கள் என்ன?
  5. விண்மீன்கள், கோள் தொகுதிகள் எப்படி தோன்றுகின்றன?

ஆய்வுக்கான மேம்பட்ட கமேரா (Advanced Camera for Surveys – ACS)

கட்புலனாகும் ஒளி அலைவீச்சில் தொழிற்படும் இந்த கமேரா, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகளை ஆய்வுசெய்ய பயன்படுகிறது. புறவிண்மீன் கோள்களை கண்டறியவும், விண்மீன்பேரடைத் தொகுதிகளின் பரிணாமத்தை ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

ஆய்வுக்கான மேம்பட்ட கமேரா
ஆய்வுக்கான மேம்பட்ட கமேரா

2002 இல் பொருத்தப்பட்ட இந்தக் கருவி, 2007 இல் செயலிழந்தது. மின்சாரக் குறுஞ்சுற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் இந்தக் கருவி பயன்படுத்தமுடியாத நிலைக்குச் சென்றது. ஆனால் 2009 இல் ஹபிள் தொலைநோக்கியை திருத்தச் சென்றகுழு இதனை மீண்டும் திருத்தி அமைத்தது.

விண்வெளித் தொலைநோக்கியின் படமாக்கல் நிறமாலைப் வரைவி (Space Telescope Imaging SpectrographSTIS)

இந்தக் கருவி COS போலவே புறவூதாக்கதிர்களில் தொழிற்படுகிறது. மற்றும் இதனால் கட்புலனாகும் ஒளி மற்றும் சிவப்பிற்கு அருகில் இருக்கும் அகச்சிவப்புக்கதிர்களையும் பார்க்க முடியும். COS மிகத் தொலைவில் இருக்கும் சிறிய புள்ளிகளாக தெரியும் விண்மீன்களையும் குவாசார் போன்ற அமைப்புக்களையும் ஆய்வு செய்யும், ஆனால் இந்த STIS பாரிய கட்டமைப்புகளான விண்மீன் பேரடைகளை அவதானிக்கிறது.

சனிக்கோளில் தோன்றும் அரோராவைப் படம் பிடித்த STIS
சனிக்கோளில் தோன்றும் அரோராவைப் படம் பிடித்த STIS

அதோடு STIS இனால் கருந்துளைகளைக் கண்டறியமுடியும் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு.

இது 1997 இல் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. அன்றிலிருந்து 2004 வரை தொழிற்பட்ட இது, 2004 இல் மின்சாரத்தடை காரணமாக செயலிழந்தது. மீண்டும் 2009 இல் திருத்தப் பணிக்கு சென்ற குழு இதனையும் சரிசெய்துவிட்டு வந்தது.

அகச்சிவப்புக் கதிர் கமேரா மற்றும் பல்பொருள் நிறமாலை வரைவி (Near Infrared Camera and Multi-Object Spectrometer)

ஹபிள் தொலைநோக்கியின் வெப்ப அளவீட்டுக்கருவி இது. சூரியனிலிருந்து வரும் வெப்பம் அகச்சிவப்புக் கதிர்வீச்சாகத்தான் வருகிறது. இந்தக் கருவியில் இருக்கும் பெரிய அனுகூலம், விண்வெளித் தூசுகளால் மறைக்கப்பட்ட பொருட்களையும் இதனால் பார்க்க முடியும்.

இவை போல இன்னும் பல சிறிய கருவிகள் ஹபிள் தொலைநோக்கியில் இருக்கின்றன. நாம் முக்கிய கருவிகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஹபிள் வெறும் சாதாரண தொலைநோக்கி அல்ல! பல்வேறுபட்ட அறிவியல் கருவிகள் அதில் உண்டு, அவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தின் வேறுபட்ட பகுதிகளை ஆய்வு செய்கின்றன.

ஹபிளுக்கு அடுத்து என்ன?

ஹபிள் தொலைநோக்கி 25 வருடங்களுக்கு மேலாக விண்வெளியில் தொழிற்பட்டு வருகிறது. பல முறை திருத்தப் பணிகள் மேட்கொன்டாலும், ஹபிளிற்கு அடுத்த வழித்தோன்றலை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது – ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி!

2018 இல் விண்வெளிக்கு அனுப்பத் தயாரிக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஹபிள் தொலைநோக்கியைவிட சக்திவாய்ந்தது. இது 6.5 மீட்டார் விட்டம் கொண்ட முதன்மை ஆடியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (ஹபிளின் ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது). அதோடு இது பூமியில் இருந்து 1,500,000 கிமீ தொலைவில் இயங்கும்.

800px-JWST-HST-primary-mirrors.svg
மனிதன், ஹபிளின் பிரதான ஆடி, ஜேம்ஸ் வெப்பின் பிரதான ஆடி – அளவு ஒப்பீடு.

ஹபிள் தொலைநோக்கியைப் போல கட்புலனாகும் ஒளி வீச்சில் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இயங்காது, மாறாக இது அகச்சிவப்பு அலைவரிசையில் தொழிற்படும்.

ஹபிள் தொலைநோக்கி எப்படி விண்ணியல் சார்ந்த அறிவியல் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கியதோ, அதேபோல ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடுத்த சகாப்தத்தை தொடங்கிவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பற்றி நாம் விரிவாக தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.

முற்றும்.


உபரித்தகவல்

ஹபிள் தொலைநோக்கி ஒவ்வொரு 97 நிமிடத்திற்கு ஒரு தடவை பூமியைச் சுற்றிவருகிறது. அதாவது அதன் வேகம் அண்ணளவாக செக்கனுக்கு 8 கிமீ.

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2

எழுதியது: சிறி சரவணா

இந்தப் பகுதியில் ஹபிள் தொலைநோக்கியின் சாதனைகள் மற்றும் அதுமூலம் நாம் கண்டறிந்த பிரபஞ்சஉண்மைகள் பற்றிப் பார்க்கலாம்.

பாகம் 1 ஐ படிக்க: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1

ஹபிள் தொலைநோக்கியின் சாதனைகள்

விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹபிள் தொலைநோக்கி மூலம் நாம் இந்தப் பிரபஞ்சம் தொழிற்படும் பல்வேறுபட்ட முறைகளை அறிந்துள்ளோம், பல்வேறுபட்ட வியப்புக்கள், ஆச்சர்யங்கள் மற்றும் எதிர்பாரா முடிவுகள் பல இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் மொத்த மனித குலத்திற்கும் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஏற்கனவே வெறும் கோட்பாடுகளாக மட்டுமே இருந்த பல்வேறுபட்ட அறிவியல், விண்ணியல் முடிவுகள், இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் வாய்ப்புப் பார்க்கப்பட்டுள்ளது. எதிர்கால விண்ணியலுக்கான அடிப்படைத் தளமாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி செயற்பட்டுள்ளது என்றும் நாம் கூறலாம்.

Continue reading “ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2”

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் என்று வந்தாலே வானை அண்ணார்ந்து பார்த்து அதில் இருக்கும் விண்மீன்களை முதலில் வியந்து, பின்னர் அவற்றின் இயக்கத்தைப் பற்றிப் படித்து, விண்மீன் தொகுதிகளை எமது மனதின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவாக்கி படிப்படியாக இந்தப் பூமியைத் தவிரவும் சுவாரசியமான விடயங்கள் விண்ணில் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டதன் மூலம் விண்ணியல் என்ற துறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று சொல்லலாம். தவறில்லை.

அதற்கு அடுத்தகட்டம் என்ன? விண்ணில் இருக்கும் எல்லாமே மிக மிகத் தொலைவில் இருப்பதால் ஆதிகால மனிதனால் விண்மீன்களோ, கோள்களோ அவற்றை புள்ளிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவன் அறிந்திருந்ததெல்லாம் அவற்றின் இயக்கங்களைப் பற்றி மட்டுமே.

Continue reading “ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1”

விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை

எழுதியது: சிறி சரவணா

ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது.

விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கி இருப்பது ஒரு விடயமென்றால், முந்தய பதிப்பான விண்டோஸ் 8 இல் விட்ட பல பிழைகளையும் இந்தப் பதிப்பில் திருத்தி இருப்பது ஒரு மிக முக்கியமான விடயம்.

விண்டோஸ் 8 இல் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி, அதனது மிக முக்கிய அம்சமான ஸ்டார் மெனுவை நீக்கியது. விண்டோஸ் 7 ஐ விட விண்டோஸ் 8 மிக வினைத்திறனாகச் செயற்பட்டாலும் சாதாரண பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் பாவனைவிடயங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது விண்டோஸ் 8 இன் தோல்விக்கு வழிவகுத்து எனலாம்.

Continue reading “விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை”

செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

எழுதியது: சிறி சரவணா

இது ஒரு தொடர்பதிவு, முன்னைய பதிவுகளை வாசித்தபின்னர் இந்தக் கட்டுரையை தொடருங்கள், அது உங்களுக்கு மேலும் சில விடயங்களை தெளிவாக புரியவைக்கும்.

செயற்கை நுண்ணறிவு கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


சரி, கடந்த பதிவில் செயற்கை நுண்ணறிவின் பிரிவுகளைப்பற்றிப் பார்த்தோம், இந்தப் பதிவில், எப்படியாக இந்த AI படிப்படியாக ஆராச்சி ரீதியில் வளர்ந்து வந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

1943 இல் Warren McCulloch மற்றும் Walter Pitts உருவாக்கிய கட்டமைப்பே முதலாவது AI கட்டமைப்பு என பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இவர்கள் மனித மூளையில் இருக்கும் நியுரோன்களை அடிப்படையாகவைத்து இந்தக் கட்டமைப்பை உருவாகினர். இவர்களைது கட்டமைப்பில் செயற்கையான நியுரோன்கள் சுவிச் வேலை செய்வதுபோல, அருகில் இருக்கும் நியுரோன்களின் தூண்டலுக்கு ஏற்ப “on” அல்லது “off” செய்யும். அதாவது உண்மையிலேயே மூளையில் நியுரோன்கள் எவ்வாறு தொழிற்படுமோ, அவ்வாறே இந்த செயற்கை நியுரோன்களும் தொழிற்படும்.

Continue reading “செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்”

உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்

இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.

இதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே!

Continue reading “உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்”

தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு அதிகரித்த பின்னர், எல்லாத் தமிழ் தளங்களும் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்த தொடங்கியவுடனும், இயங்கு முறைமைகளும், தமிழ் ஒருங்குறியை இயல்பாக ஆதரித்ததாலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

வாசிக்க முடிந்தாலும், என்னைப் போன்றவர்களுக்குத் தமிழில் எழுதுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கில விசைப்பலகையில், தமிழில் எழுதுவதற்கு நிச்சயம் பயிற்சி வேண்டும். ஒரு அளவு வேகமாக ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப் பழகியபின்னர், மீண்டும் தமிழில் ஸ்லோவாகத் தட்டச்சுச் செய்யப் பழகுவது என்பது மிகச் சிரமமான காரியம்! நான் அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டேன்!

Continue reading “தமிழிலும் எழுதலாம் வாங்கோ!”