வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும்.

Advertisements

மறையும் தூமகேதுவின் வால்

ஒரு வருடத்தில் பலமுறை இரவு வானம் நூற்றுக்கணக்கான தீப்பந்துகளால் ஒளிர்கிறது. இவற்றை நாம் “எரி நட்சத்திரம்” என்கிறோம். உண்மையிலேயே இவற்றுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும் சிறு கற்களே இவை. இவற்றை நாம் விண்கற்கள் என்கிறோம்.

எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

விண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும் போது அதனைச் சுற்றி சுழல்கிறது.

பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

1967 இல் வேலா 3 மற்றும் வேலா 4 ஆகிய செய்மதிகள் விண்வெளியில் அதி சக்திகொண்ட காமா வெடிப்புகளை அவதானிக்கின்றன. இந்த காமா கதிர்வீச்சு இதுவரை எந்தவொரு அணுவாயுதப் பரிசோதனையிலும் அவதானிக்கப்படாத வித்தியாசமான கதிர்வீச்சாக இருக்கிறது.

ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

நெபுலாக்கள் விண்வெளியில் காணப்படும் தூசு மற்றும் வாயுக்களால் உருவானவை. இவற்றில் இருந்து பில்லியன் கணக்கான விண்மீன்கள் பிறக்கும். கடல் குதிரையைப் போலவே, விண்மீன்களும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் பிறக்கின்றன. இவை அனைத்துமே ஒரே வாயுத் திரளில் ஒரே நேரத்தில் பிறந்தவை.

பூமியில் உயிருக்கான ஆரம்பம்

உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து உருவானவை. – உங்கள் எலும்பில் இருக்கும் கல்சியம், இரத்தத்தில் இருக்கும் இரும்பு, நீங்கள் அணியும் நகைகளில் இருக்கும் தங்கம் உள்ளடங்கலாக எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து வந்தவை.

CLASP: செய்மதிகளின் காவலன்

விண்ணுக்கு ஏவப்பட்டவுடன், ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது.