முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து ஆய்வுப்பயணத்தை சிலர் மேற்கொண்ட போது, பெரும்பாலானவர்கள் பூமி தட்டையானது என்றே கருதினர். மேலும் மேற்கு நோக்கி பயணப்படுபவர்கள், மிகவும் தொலைவு சென்றால், பூமியில் இருந்து வெறுமைக்குள் விழுந்துவிடுவர் என்றும் கருதினர். Continue reading “ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?”
குறிச்சொல்: உயிரினம்
முன்னைய பாகங்கள்
உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்
அறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை. Continue reading “உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்”
இந்தப் பிரபஞ்சத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தும் பலவிடயங்கள் உண்டு. இரவு வானையும், அதில் தெரியும் மின்மினிப் புள்ளிகளையும் போல என்னை மெய்சிலிர்க்க வைத்தவை வேறு ஒன்றும் இல்லை எனலாம். சிறுவயது முதலே இரவு வானில் மின்னும் விண்மீன்கள், பிரகாசிக்கும் கோள்கள், மற்றும் வீரென்று வேகமாகச் செல்லும் செய்மதிகள், உடைந்துவிழும் வான்கற்கள் இப்படி என்னால் பார்க்க முடிந்தவை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு அதனைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டியது! Continue reading “உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்”
எழுதியது: சிறி சரவணா
சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி இந்த மாற்றங்கள், அந்தக் கோள்களின் பௌதீக அமைப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் அறியலாம்.
நாசாவின் விண்வெளிவீரர் ஜான் க்ரன்ஸ்பில்ட், இந்த என்சிலாடஸ் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
“என்சிலாடசில், கசினி கண்டறிந்த நீர் சார்ந்த செயற்பாடு, இந்தக் கோளின் மேற்பரப்புக்குக் கீழ் பெரிய கடல் இருப்பதற்கும், அங்குப் புவியியல் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும், அதுமட்டுமல்லாது அங்கு உயிரினம் உருவாகத் தேவையான காரணிகளும் இருக்கலாம். இந்தச் சூரியத் தொகுதியில், உயிர் வாழவே முடியாது என்று கருதும் இடங்களில், இப்படியான செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருப்பது, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாகவா இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை அளிப்பதற்கான சந்தர்பத்தை உருவாகுகிறது”.
Continue reading “சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்”