முடிவில்லா இயற்க்கை

சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய் கனவிலும் நினையா வண்ணம் இடை வளைத்து ஆடுகிறாய் கன்னங்கள் குழிவிழ சிரிக்கும் குழந்தைபோல ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்து வரும் அருவிகள் – அதன் கரைகளில் இருக்கும் கற்களில் மோதுண்ட நீர் வில்லைகள் முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன் ஆடைகளைக் களைந்துவிட்டு தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல உற்சாகமாக பல வர்ணங்களில் சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்…

முடிவில்லாப் பயணம் 1 – 8

முன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு  ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா “கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி” பகுதி 1  பெப்ரவரி 14, 1997 “நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை…

ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை அத்தனை உயிர்ப்புடன் நோக்குகிறேன். அன்பு ஒரு பொருட்டல்ல விண் நிறைக்கும் உணர்தல் ஒவ்வொரு தனிமையிலும் வீற்றிருக்கிறது. விண்ணகி மேலும் காத்திரு அகாலம் தன் வினையை எப்பொழுதும் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது. ஒன்றிணைக்கும் அன்பில் மீண்டும் வந்திணை. வளத்தூர் தி. ராஜேஷ் படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது. ஒரு நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால நினைவு தன்னைத் துரத்துகிறது . மீண்டும் அடையாளமிட்ட தன் நினைவை அங்கயே விட்டு வந்தடைந்தேன் மன்னிப்பாயாக. வளத்தூர் தி. ராஜேஷ் படம்: இணையம்

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள் அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த நிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே நட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய் வானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு தெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில் ஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே! சிறி…

ஒளியின் ஊடுருவல்

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம் இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்? அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும் சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே வரைந்தவன் வரைந்துவிட்டான், காலத்தில் அவற்றை பதித்துவிட்டான் பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட வண்டுபோல மயங்கிக் கிறுகிறுக்கும் என அவன் நினைத்தானோ நினைத்தது நிலைத்தது, கதிர்களின் கீற்றுக்கள் மீண்டும் இலைகளில் முகங்களை வரைய நாளையும் வரவேண்டுமே சிறி சரவணா படம்: இணையம்

நிழலுக்கென்று ஒரு நிஜம்

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில் அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது நிழலும் அதன் பாதையில் உண்டு அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது