கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

இன்று கணணியைப் பாவிப்பதில் நமது அளவு அதிகரித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கேற்ப கணனியில் நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களின் அளவும் அதிகரித்துள்ளது. நான் முதன் முதலில் கணணியைப் பார்த்தது 1995 இக்கு பிறகுதான், அண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட கணனியில் இருந்த ஹர்ட்டிஸ்க்கின் கொள்ளளவு வெறும் 350MB தான். பிறகு அது பழுதாகவும், புதிதாக வாங்கிய ஹர்ட்டிஸ்க் 2.5GB! அது அந்தக் காலம்.

இன்று நாம் பயன்படுத்தும் ஹர்ட்டிஸ்க்களின் அளவு டெர்ராபைட் அளவுகளில் அதாவது ஆயிரக்கணக்கான Gigabyte அளவுகளில் கிடைகிறது. இருந்தும் நம் தேவை அதையும் தாண்டி இருக்கிறது.

இனைய வளர்ச்சியில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களில் இந்த கிளவுட் சேமிப்பும் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டது. அதாவது நமது கணனியில் தகவல்களை சேமித்து வைப்பதைப் போல, நாம் வேறொரு இடத்தில் அந்த தகவல்களை சேமித்து வைத்து, இணையத்தின் மூலம் அதனை பயன்படுத்திக்கொள்ளும் முறை இந்த கிளவுட் சேமிப்பு. இதில் பல நன்மைகளும் உண்டு அதேபோல சில பல தீமைகளும் உண்டு.

Continue reading “கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை”