பாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார். Continue reading “தீ மிதிப்பு”
குறிச்சொல்: சம்பவம்
உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.
அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு இந்தியர். அந்தக்காலத்திலேயே BA படித்து விமான ஓட்டியாக வேறு இருந்தவர், எதோ காரணத்துக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு சாமியாராக வந்துவிட்டார். நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டான மனிதர் என்று அப்பா சொல்லுவார். அப்பா அங்கிருக்கும் காலத்தில் மிசனில் மற்ற மாணவர்களையும் மேற்பார்வயிடுபவராக, சாமி பூசை செய்பவராகவும், இந்த சாமியாரின் உதவியாளராகவும் இருந்துள்ளார். Continue reading “சக்திமிக்க வார்த்தைகள்”