பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வரும் போது வழமைக்கு மாறாக நிலவின் அளவு பெரிதாகவும் அதன் காரணமாக பிரகாசமாகவும் இருக்கும். இதுவே சுப்பர் நிலவு / பெருமுழுநிலவு (Supermoon) என அழைக்கப்படுகிறது. அதேபோல பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது வழமைக்கு மாறாக சிறிதாக இருக்கும் நிலவு மைக்ரோ நிலவு எனப்படுகிறது. Continue reading “பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்”