இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி

பால்வீதி எனப்படும் சுழல் விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு சுழல் கரத்தின் ஒரு  பகுதியிலேயே நாம் இருக்கிறோம். விண்மீன் பேரடை (galaxy) என்பது எண்ணிலடங்காத விண்மீன்கள் ஈர்ப்புவிசையால் கட்டுண்டு இருக்கும் ஒரு அமைப்பாகும். நமது பால்வீதி இப்படியான ஒரு மிகப்பெரிய விண்மீன்பேரடையாகும். பால்வீதியின் ஒரு எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு செல்ல ஒளிக்கு 100,000 ஆண்டுகள் எடுக்கிறது! Continue reading “இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி”

தேர்சான் 5 இன் புராணக்கதை

குறிப்பாக படிமங்களை ஆய்வு செய்யும் போது விஞ்ஞானிகள் எப்போதும் முதல் தடவையிலேயே சரியான முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். தொல்லுயிரியலளர்கள் (paleontologists – டைனோசர் விஞ்ஞானிகள்) பல்வேறு சந்தர்பங்களில் பல மாபெரும் தவறுகளை அவர்களது ஆய்வில் இழைத்துள்ளனர். Continue reading “தேர்சான் 5 இன் புராணக்கதை”

அளவுக்கதிகமாய் பிறந்த விண்மீன்கள்

முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒன்றும் இல்லை. சில சில்லறைத்தனமான கேள்விகள்தான் மகத்தான விடைகளுக்குக் காரணமாக இருந்திருகின்றன. ஒரு உதாரணத்திற்கு, ஏன் விண்வெளி இருளாக இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்க்கலாம். இதற்குப் பதிலளிக்க, விண்மீன்களுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும், ஒளியின் வேகம் என்பனவற்றை நாம் ஆராயவேண்டும். மேலும் இந்தப் பிரபஞ்சம் எப்படி தொடர்ந்து விரிந்துகொண்டு இருக்கிறது என்றும் அறியவேண்டும்.

இதனைபோலவே, விண்ணியலாளர்கள் ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு எளிமையான கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கேள்வி இதுதான்: ஏன் சில விண்மீன் பேரடைகளில் மட்டும் அதிகளவான விண்மீன்கள் உருவாகின்றன? மேலோட்டமாக பார்க்கும்போது இது வெளிப்படையான கேள்வியாகத் தெரியலாம் – பெரிய விண்மீன் பேரடைகள் அதிகளவு வாயுக்களைக் கொண்டிருக்கும். ஆகவே பெரிய விண்மீன் பேரடைகளில், சிறிய விண்மீன் பேரடைகளைவிட அதிகளவான விண்மீன்கள் பிறக்கும். விண்மீன்களின் உருவாக்கத்திற்கான மூலக்கூரே இந்தப் பிரபஞ்ச வாயுக்கள் தானே!

eso0643a
படத்தில், வினைத்திறனாக அதிகளவு விண்மீன்கள் உருவாகிக்கொண்டிருக்கும் விண்மீன் பேரடை. நன்றி: ESO

இது பொதுவான உண்மையாக இருப்பினும், இது உறுதியான சட்டம் இல்லை. ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்த விஞ்ஞானிகள், சம அளவுகொண்ட வாயுக்களை கொண்டுள்ள விண்மீன் பேரடைகளில், தற்போது உருவாகும் விண்மீன்களை விட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதிகளவான விண்மீன்கள் உருவாகியுள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.

நமது சூரியத்தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான பால்வீதியில், தற்போது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விண்மீன் பிறக்கிறது. ஆனால் முன்னொரு காலத்தில், விண்மீன் பேரடைகளில் ஒவ்வொரு வருடமும் சிலநூறு விண்மீன்கள் பிறந்துள்ளன!

இறந்த காலத்தில் ஏன் விண்மீன் பேரடைகள் அதிக வினைத்திறனுடன் விண்மீன்களை உருவாக்கியது என்று இன்னும் விஞ்ஞானிகளால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இதற்குக் காரணம் விண்மீன் பேரடைகள் அதிகளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சம் விரிவடைவதால், தற்போது இருப்பதைவிட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் சிறிதாக இருந்தது, அப்போது விண்மீன் பேரடைகள் ஒன்றுகொன்று நெருக்கமாக இருந்ததனால் அவை அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த மோதலில் இருந்து பல விண்மீன்கள் உருவாகியிருக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கறது.

மேலும் ஒரு தகவல்

பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியது. இது பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி சொற்ப காலமாகும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://unawe.org/kids/unawe1602/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam

மத்தியில் இளமையான நமது பால்வீதி

நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்த அமைப்பை “galaxias kyklos” என அழைத்தனர். அப்படியென்றால், பால் போன்ற வட்டம் என்று பொருள். இதிலிருந்துதான் நாம் தற்போது விண்மீன் பேரடைகளை அழைக்கும் ஆங்கிலச் சொல்லான, “galaxy” என்கிற சொல்லும், எமது விண்மீன் பேரடையை அழைக்கும் “பால்வீதி” என்கிற சொற்பதமும் வந்தது.

Continue reading “மத்தியில் இளமையான நமது பால்வீதி”

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு

இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்காத விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு விண்மீன் பேரடையும் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ளது. பிரபஞ்சம் உருவாகி அதன் பின்னர் அது குளிர்வடைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஒன்று சேர்ந்து விண்மீன்கள் உருவாகின.

எப்போதுமே எமக்கு இருக்கும் கேள்வி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி எவ்வளவு காலத்தில் முதலாவது விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்பதுதான்.

Continue reading “பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு”