மின்காந்த அலைகள் – மின்னூல்

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்

மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.

மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்

பொதுவாக இதனது அலைநீளம் மிக மிகச் சிறியதாக இருப்பதால் எக்ஸ் கதிர்வீச்சை அதன் அலைநீளத்தில் அளக்காமல், அது கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் அளக்கின்றனர். இதற்குக் காரணம், எக்ஸ் கதிரின் அலைநீளம் 0.03 நனோ மீட்டார் தொடக்கம் 3 நனோ மீட்டர்கள் வரை இருப்பதே! இந்த அலைநீளம் பல மூலகங்களின் அணுக்களை விடச் சிறியதாகும்.

மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

மின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது.

மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

நுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

எழுதியது: சிறி சரவணா சென்ற பாகத்தில் மின்காந்தஅலைகள் என்றால் என்ன? மற்றும் அவற்றின் பிரிவுகள் என்பன பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மின்காந்தஅலைகளின் பண்புகளைப் பற்றிப் பார்க்கலாம். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்தஅலைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம் இல்லையா? நுண்ணலை, ரேடியோஅலை, அகச்சிவப்புக்கதிர், ஒளி, புறவூதாக்கதிர், எக்ஸ்கதிர் மற்றும் காமாக்கதிர்… இப்படி பலவகை இருந்தாலும், இவை எல்லாமே ஒரே வகையில்த்தான் நடத்தைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒளியை எடுத்துக்கொண்டால் அது ஒளித்தெறிப்பு, ஒளிமுறிவு,…

மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம்,  உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன? எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும்…