மின்காந்த அலைகள் – மின்னூல்

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம்,  உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன? எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் வேறுபட்ட  அலைக்கற்றைகளின் பண்புகளையும் பற்றிய ஒரு சிறிய அறிமுக மின்னூலே இது. Continue reading “மின்காந்த அலைகள் – மின்னூல்”

வேற்றுலக நாகரீகங்கள் : இலவச மின்னூல்

ஏற்கனவே பரிமாணம் தளத்தில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த மின்னூல். வேற்றுலக நாகரீகங்கள் என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக சில மாதங்களுக்கு மும்பு வெளிவந்த கட்டுரைகளை ஒன்றாக்கி அதனை மின்னூல் வடிவில் கொண்டுவருவதன் மூலம் வாசகர்களுக்கு அதனை எதிர்காலத்தில் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்ற நோக்கமே பிரதானம்.

இன்னும் பல்வேறு பட்ட கட்டுரைத்தொகுப்புகளையும் இப்படி மின்னூல் வடிவில் கொண்டுவருவது எனது நோக்கம். தமிழில் அறிவியல் வளர்ப்போம்.

மின்னூலைத் தரவிறக்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.


வேற்றுலக நாகரீகங்கள் – PDF (1.2 MB)


இந்த மின்னூல் உங்களுக்கும் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் பலருக்கும் இதைக் கொண்டுசெல்லலாம். பகிரும் போது, “பரிமாண”த்தின் தளத்தின் முகவரியையும் பகிருவதன் மூலம் பரிமாணத்தை இன்னும் பலரிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்.

நன்றி,
மா. சிறி சரவணா