ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் (2005 இல் வெள்ளிக்கு அனுப்பப்பட்டது) விண்கலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் ஆய்வு முடிவுகள் வெள்ளியில் மின்சாரப் புயல் அடிப்பதாக தெரிவிக்கின்றது. இது வெள்ளியின் வளிமண்டலத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை அகற்றியிருக்கலாம் என்றும், இதனால் வெள்ளியில் இருந்த சமுத்திரங்கள் அழிந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். Continue reading “வெள்ளியின் மின்சாரப் புயல்”
குறிச்சொல்: வளிமண்டலம்
வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் மிகபெரிய உயிரினப் பேரழிவுக்கு வித்தாகலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. Continue reading “அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு”
நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது. அதன் வளிமண்டலத்திற்கும், முழுக்கோளின் மேற்பரப்புக் கட்டமைப்பிற்கும் என்ன நடந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.
Continue reading “செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?”