ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?

வியாழனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமே ஜூனோ. ஜூலை 5, 2016 இல் இது வெற்றிகரமாக வியாழனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து வியாழனை சுற்றிவரத் தொடங்கிவிட்டது. ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழனைச் சுற்றி வரத்தொடங்கியது விஞ்ஞான மற்றும் பொறியியல் துறையின் மகத்தான வெற்றி என்பது மிகையல்ல. மேலும் நாசா இதுவரை அனுப்பிய விண்வெளித் திட்டங்களில்  மிகவும் சிக்கலான திட்டங்களில் இதுவும் ஒன்று! ஆகவே ஜூனோவின் நோக்கம் என்ன? அதனைத் தயாரித்தது தொடங்கி, வியாழனில் அது கண்டறிய முனையும் விடயங்கள் என்ன என்பதனைத் தெளிவாக இங்கே பார்க்கப்போகிறோம். Continue reading “ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?”