விண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை. எப்படியிருப்பினும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் எமது நாகரீகத்தைப் பற்றியும் நாம் அறிந்தவரையில் இப்படியான வேற்றுலக நாகரீகங்கள் எப்படியிருக்கலாம் என்று எம்மால் யூகிக்க முடியும்.
குறிச்சொல்: விண்ணியல்
எழுதியது: சிறி சரவணா
விண்ணியல் என்று வந்தாலே வானை அண்ணார்ந்து பார்த்து அதில் இருக்கும் விண்மீன்களை முதலில் வியந்து, பின்னர் அவற்றின் இயக்கத்தைப் பற்றிப் படித்து, விண்மீன் தொகுதிகளை எமது மனதின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவாக்கி படிப்படியாக இந்தப் பூமியைத் தவிரவும் சுவாரசியமான விடயங்கள் விண்ணில் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டதன் மூலம் விண்ணியல் என்ற துறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று சொல்லலாம். தவறில்லை.
அதற்கு அடுத்தகட்டம் என்ன? விண்ணில் இருக்கும் எல்லாமே மிக மிகத் தொலைவில் இருப்பதால் ஆதிகால மனிதனால் விண்மீன்களோ, கோள்களோ அவற்றை புள்ளிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவன் அறிந்திருந்ததெல்லாம் அவற்றின் இயக்கங்களைப் பற்றி மட்டுமே.
Continue reading “ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1”
ஐன்ஸ்டீன் தனது பொதுச்சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததிலிருந்து சக்தியும் (energy), பருப்பொருளும் (matter) ஒரே விடயத்தின் இரு மாறுபட்ட கருத்துக்கள் என்று நமக்கு புலப்பட்டது. சாதாரண மொழியில் சொல்லவேண்டுமென்றால் மிகச் செறிவுபடுத்தப்பட்ட சக்தியே பொருள்/பருப்பொருள் ஆகும். அதனால்த்தான் அமேரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டில் வெறும் 750 மில்லிகிராம் அளவுள்ள பருப்பொருளினால் 16 கிலோடன் TNT யின் சக்திக்கீடான சக்தியை வெளிவிட முடிந்தது. சரி விடயத்திற்கு வருவோம்.
Continue reading “கரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்”