வியாழனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமே ஜூனோ. ஜூலை 5, 2016 இல் இது வெற்றிகரமாக வியாழனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து வியாழனை சுற்றிவரத் தொடங்கிவிட்டது. ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழனைச் சுற்றி வரத்தொடங்கியது விஞ்ஞான மற்றும் பொறியியல் துறையின் மகத்தான வெற்றி என்பது மிகையல்ல. மேலும் நாசா இதுவரை அனுப்பிய விண்வெளித் திட்டங்களில் மிகவும் சிக்கலான திட்டங்களில் இதுவும் ஒன்று! ஆகவே ஜூனோவின் நோக்கம் என்ன? அதனைத் தயாரித்தது தொடங்கி, வியாழனில் அது கண்டறிய முனையும் விடயங்கள் என்ன என்பதனைத் தெளிவாக இங்கே பார்க்கப்போகிறோம். Continue reading “ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?”
குறிச்சொல்: வியாழன்
எழுதியது: சிறி சரவணா
வியாழனே நமது சூரியத் தொகுதியின் நாயகன்! இந்தப் பாரிய கோள், மற்றைய அனைத்துக்கோள்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும், அவற்றின் திணிவைவிட அண்ணளவாக இரண்டரை மடங்கு அதிகமாகவே திணிவைக் கொண்டுள்ளது. இப்படியாக அதிக திணிவைக் கொண்டிருப்பதனால், இந்த வியாழக்கோள் அதிகளவான ஈர்ப்புவிசையையும் கொண்டுள்ளது, இந்த அதிகப்படியான ஈர்ப்புவிசையால், சூரியத்தொகுதியில் மிக முக்கிய ஒரு அங்கத்தவராக இருப்பதுடன், பூமியில் உள்ள உயிர்களையும் பாதுகாக்கிறது.
எழுதியது: சிறி சரவணா
நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.
சூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்!
இதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ! அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்!