சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?

எழுதியது: சிறி சரவணா

ஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப் பார்க்கலாம்.

சூரியகிரகணம் என்பது சூரியனது ஒளியை நமது பூமியின் சந்திரன் மறைக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு என்று இலகுவாக வரையறுக்கலாம். ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய சில பல விடயங்கள் இருக்கின்றன. சூரியன், சந்திரனோடு ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது. சூரியனது ஆரை – 695,800 km, அனால் சந்திரனது ஆரையோ வெறும் 1738 km தான். ஆக சூரியன், சந்திரனைப் போல 400 மடங்கு பெரியது. அதேபோல இன்னொரு விடயம், சூரியனுக்கும் நமது பூமிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைப் போல அண்ணளவாக 400 மடங்கு அருகில் சந்திரன் இருக்கிறது! இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து! Continue reading “சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?”