மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் புதிய குறள்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புளுட்டோவின் பாதி அளவான இந்தக் குறள்கோள், அண்ணளவாக சூரியனை புளுட்டோவின் சுற்றுப்பாதையைப் போல இரண்டு மடங்கு தொலைவில் சுற்றிவருகிறது. பால்வீதியின் பூரணமான வரைபடத்தை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் குழு ஒன்று, Dark Energy Survey ஐ சேர்ந்த Dark Energy Camera வைக் கொண்டு இந்த புதிய குறள்கோளைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கேமரா வானில் அசையும் பொருட்களை கண்காணிக்கும் கருவியாகும். Continue reading “மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு”

இலகுவாகப் படிப்பதற்கும் தேர்ச்சி பெறுவதற்கும் சில வழிகள்

இன்று பொதுவாக இருக்கும் பிரச்சினை கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரண்டுமே. மாணவரை ஆசிரியர் குறை கூறுவதும், ஆசிரியரை மாணவர் குறை கூறுவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று. நானும் படிக்கிறேன் என்று கிளம்பி, புத்தகத்தை எடுத்து வைத்துகொண்டு அதனை மனப்பாடம் செய்துவிட்டு, அதனைத் தாண்டி குறித்த பகுதியில் வினாக்களை எழுப்பும் போது, அதற்கு பதில் கூற முடியாமல் திண்டாடும் பலரையும் நான் பார்த்துள்ளேன். Continue reading “இலகுவாகப் படிப்பதற்கும் தேர்ச்சி பெறுவதற்கும் சில வழிகள்”

உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன. Continue reading “உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்”