புதிய பரிமாணம் – parimaanam.net

parimaanam-fb cover

நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்ட்பிரஸ் தளத்தில் இருந்து தனியான தளமாக மாற்றி விட்டேன்.

புதிய தளத்தில் இலகுவாக கட்டுரைகளை வாசிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் பல புதிய பிரிவுகளையும் உங்களால் இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.

இனி parimaanam.net தளத்திலேயே புதிய கட்டுரைகள் அனைத்தும் பிரசுரிக்கப்படும். ஆகவே தயவுசெய்து parinaaman.net தளத்தை பார்த்து, அதனை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி,
சரவணா

கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது. Continue reading “கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்”

Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

வெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். Continue reading “Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?”

சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

சூரியத் தொகுதி என்பது சூரியனையும், எட்டு கோள்களையும் மாத்திரம் கொண்டதல்ல. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் சிறுகோள் பட்டி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதிலே பில்லியன் கணக்காக சிறய சிறுகோள்கள் / விண்கற்கள் காணப்படுகின்றன. அதேபோல புளுட்டோ (முன்னொரு காலத்தில் கோள் – தற்போது அந்த அந்தஸ்த்தை இழந்துவிட்ட குறள்கோள்) சஞ்சரிக்கும் பிரதேசம் கைப்பர் பட்டி எனப்படுகிறது, இங்கே புளுட்டோ போல பல பனிப்பாறையால் உருவான குறள்கோள்கள் காணப்படுகின்றன. அதையும் தாண்டி ஊர்ட் மேகம், இங்கே இருந்து வால்வெள்ளிகள் சூரியனை அவ்வப்போது சந்தித்துவிட்டு மீண்டும் செல்லும். சில வால்வெள்ளிகள் சூரியனில் மோதுவதும் உண்டு. Continue reading “சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி”

புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்

இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் என்று சொன்னாலே அது ஏலியன்ஸ் என்று கருதத் தேவையில்லை – அது நாமாகக் கூட இருக்கலாம்.

இதுவரை எந்தவொரு வேற்றுலகவாசிகளும் பூமிக்கு வந்ததில்லை, அதேவேளை நாமும் இந்தப் பிரபஞ்சத்தில் பயணித்ததில்லை. நாமிருக்கும் சூரியத் தொகுதியைத் தாண்டி விண்வெளியில் ஒரு நாள் நாம் பயணிப்போமா? Continue reading “புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்”

பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம். Continue reading “பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்”

மடிய மறுக்கும் ஒரு விண்மீன்

நாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.

மிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே. Continue reading “மடிய மறுக்கும் ஒரு விண்மீன்”

நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

நம்மில் பலர் விண்வெளியில் எதிர்காலம் என்பது மிதந்து செல்லும் விண்கலங்களும், நிலவில் குவிமாட வடிவில் கட்டப்பட்ட பச்சை வீடுகளும் என்று மனதில் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் பூமிக்கு அப்பால் ஒரு எதிர்கால வாழ்கையை நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும். நிலவில் இருக்கும் நிலத்தடிக் குகைகள் எதிர்கால பணக்காரர்களின் சொகுசு வில்லாக்களாக மாறலாம். Continue reading “நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்”

ஒரு வால்வெள்ளி, இரண்டு சிறுகோள்கள் அல்லது இரண்டுமா?

தங்களது தொலைநோக்கிகளைக் கொண்டு சிலவேளைகளில் விண்ணியலாளர்கள் இரட்டையர்களை விண்ணில் காண்பதும் உண்டு – புதிதாக கண்டறியப்பட்ட ஒரு வால்வெள்ளி வெறும் வால்வெள்ளி அன்று, அது இரண்டு சிறுகோள்களும் கூட! Continue reading “ஒரு வால்வெள்ளி, இரண்டு சிறுகோள்கள் அல்லது இரண்டுமா?”

ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

ஓநாய் மனிதர்கள், இரத்தக்காட்டேரிகள் மற்றும் இரவில் உலாவரும் மிருகங்களுக்கு ஒரு நற்செய்தி – காரிருள் கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது!

இந்தப் புதிய உலகம் ஒரு பிறவிண்மீன் கோளாகும், அதாவது சூரியனுக்கு அப்பாற்பட்டு வேறு ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் இது. இதுவரை நாம் 3,500 இற்கும் அதிகமான புறவிண்மீன் கோள்களைக் கண்டறிந்துள்ளோம், அவற்றில் சில மிகவும் விசித்திரமானவை. Continue reading “ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்”

வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும். Continue reading “வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்”

மறையும் தூமகேதுவின் வால்

ஒரு வருடத்தில் பலமுறை இரவு வானம் நூற்றுக்கணக்கான தீப்பந்துகளால் ஒளிர்கிறது. இவற்றை நாம் “எரி நட்சத்திரம்” என்கிறோம். உண்மையிலேயே இவற்றுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும் சிறு கற்களே இவை. இவற்றை நாம் விண்கற்கள் என்கிறோம். Continue reading “மறையும் தூமகேதுவின் வால்”

எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

பிஜ்ஜெட் ஸ்பின்னர்ஸ்தான் இன்றைய புதிய யோயோ அல்லது ரூபிக்ஸ் கியூப் என்று கூறலாம். படபடப்பான கையை இலகுவாக்கவும் ஒருமுகப்படுத்தவும் உருவான விளையாட்டுக் கருவிகள். இணையத்தில் இந்த விளையாட்டுக் கருவிகள் பற்றிய எண்ணிலடங்கா விடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் “பிஜ்ஜெட் ஸ்பின்னரின் சுழலும் இயற்பியல் தத்துவம்” பற்றிய வீடியோக்களும் அடங்கும். Continue reading “எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?”

DNA வில் ஒரு கணணி வைரஸ்

வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர்.  இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே. Continue reading “DNA வில் ஒரு கணணி வைரஸ்”

பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் முறுகிய பனிப்போர் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவந்தது என்றால் சற்றே முரணான விடையம்தான். பனிப்போர் நடந்திருக்காவிட்டால் மனிதன் நிலவில் கால் வைத்திருப்பானா என்பதே ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கேள்விக்குறி! Continue reading “பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்”

ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

2009 இல் அமெரிக்காவில் ஒரு தாய் எட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து உலகசாதனை படைத்தார்.

விலங்கு இராச்சியத்தில் அதிகூடிய குழந்தைகளை சுமக்கும் உலக சாதனையைக் கொண்டிருப்பவர் கடல் குதிரை. இதனால் ஒரே தடவையில் 2000 வரையான குழந்தைகளை சுமக்க முடியும்! எப்படியிருப்பினும் ஆண்டின் சிறந்த தாய் என்கிற பெருமை நெபுலாக்களையே சாரும். Continue reading “ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்”

நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

ஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே. Continue reading “நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்”

Windows and Line Terminator CR+LF

பசங்களுக்கு ப்ரோக்ராம்மிங் படிப்பிக்கும் போது அடிக்கடி வரும் ஒரு பிரச்சினை, ஸ்ட்ரிங் நியூ லைன் பத்தி பேசும் போது பொதுவா எல்லா ப்ரோக்ராமிங் மொழியும் ஒரே சிங்கிள் “\n” (Linefeed என்கிற எழுத்து – ASCII குறியில் LF, decimal value: 10, Hex value: A  மட்டும்) எழுத்தையே பயன்படுத்துது அதாவது ஒரு பைட், ஆனா விண்டோசில் இந்த line terminator எழுத்தை பார்க்கும் போது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது CR என்கிற Carriage Return எழுத்தது (ASCII decimal value: 13, Hex value: D) இது பசங்களுக்கு பெரிய பிரச்சினை. ஏன் இந்த ரெண்டெழுத்து?நீங்க லினக்ஸ் முறைமையை பயன்படுத்தினால் அதில் LF மட்டுமே  line terminator எழுத்தாக பயன்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு? தெளிவாக பார்க்கலாம். Continue reading “Windows and Line Terminator CR+LF”

பூமியில் உயிருக்கான ஆரம்பம்

இதோ ஒரு அருமையான தகவல்: உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து உருவானவை. – உங்கள் எலும்பில் இருக்கும் கல்சியம், இரத்தத்தில் இருக்கும் இரும்பு, நீங்கள் அணியும் நகைகளில் இருக்கும் தங்கம் உள்ளடங்கலாக எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து வந்தவை. Continue reading “பூமியில் உயிருக்கான ஆரம்பம்”

CLASP: செய்மதிகளின் காவலன்

விண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை. சூரியனின் ஒரு பகுதியை மிக நுண்ணுயமாக 150 மில்லியன் கிமீக்கு அப்பால் இருந்து ஆய்வு செய்வதை நினைத்துப்பாருங்கள் – வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ஆய்வை செய்துமுடித்திடவேண்டும். Continue reading “CLASP: செய்மதிகளின் காவலன்”