இலவச மின்னூல்கள்

வேற்றுக்கிரக நாகரீகங்கள்

டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.

பல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.

PDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்

சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.

சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம்  தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.

PDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

 

4 thoughts on “இலவச மின்னூல்கள்

  1. மிக நுணுக்கமான அறிவியல் தரவுகளை எளிய தமிழில் புரியும்படி எழுதுகிறீர்கள். தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.
    முகம் தெரியாத விலாசம் தெரியாத எதோ ஒரு ஊரிலிருந்து ஒரு தமிழன் வாசித்து முகமும் அகமும் மலர்ச்சி அடைய கூடும். பனி சிறக்க வாழ்த்துக்கள்.
    கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.

    Liked by 1 person

    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. யாருக்காவது பயனாகும் எனத்தான் எழுதுகிறேன். உங்களையும் அது சென்றடைந்ததில் மகிழ்ச்சி 🙂

      Like

பின்னூட்டமொன்றை இடுக