உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

முன்னைய பாகங்கள்

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்


அறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை. Continue reading “உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்”

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

இந்தப் பிரபஞ்சத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தும் பலவிடயங்கள் உண்டு. இரவு வானையும், அதில் தெரியும் மின்மினிப் புள்ளிகளையும் போல என்னை மெய்சிலிர்க்க வைத்தவை வேறு ஒன்றும் இல்லை எனலாம். சிறுவயது முதலே இரவு வானில் மின்னும் விண்மீன்கள், பிரகாசிக்கும் கோள்கள், மற்றும் வீரென்று வேகமாகச் செல்லும் செய்மதிகள், உடைந்துவிழும் வான்கற்கள் இப்படி என்னால் பார்க்க முடிந்தவை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு அதனைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டியது! Continue reading “உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்”

வெள்ளியின் மின்சாரப் புயல்

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் (2005 இல் வெள்ளிக்கு அனுப்பப்பட்டது) விண்கலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் ஆய்வு முடிவுகள் வெள்ளியில் மின்சாரப் புயல் அடிப்பதாக தெரிவிக்கின்றது. இது வெள்ளியின் வளிமண்டலத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை அகற்றியிருக்கலாம் என்றும், இதனால் வெள்ளியில் இருந்த சமுத்திரங்கள் அழிந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். Continue reading “வெள்ளியின் மின்சாரப் புயல்”

சுப்பர்கணணி யுத்தங்கள்

எப்போதுமே நாடுகளுக்கு இடையில் நீ பெரிதா, நான் பெரிதா என்கிற போட்டி இருக்கும், அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இப்படியான போட்டி அதிகளவு காணப்பட்டது. அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்கும் 1950 களின் பின்னர் தொடங்கிய பனிப்போர் எனப்படும் ‘கோல்ட்வார்’ ‘உன் நாடு பெரிதா இல்லை என் நாடு பெரிதா’ என்கிற காரணத்திற்காக இடம்பெற்றது என்று கூறலாம். அப்போது கத்துக்குட்டியாய் இருந்த பல நாடுகளில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும். Continue reading “சுப்பர்கணணி யுத்தங்கள்”

இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

கருவில் இருந்து குழந்தை ஒன்று வளர ஒன்பது மாதங்கள் எடுக்கின்றது, அதேபோல ஒரு யானைக் குட்டி வளர 22 மாதங்கள் எடுக்கும்… இதைப் போல ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது! Continue reading “இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்”

இன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை

இன்டெர்ஸ்டெல்லார் படம் விளங்க வேண்டும் என்றால், கொஞ்சூண்டு ஆழமான கிளாசிக் மெக்கானிக்ஸ் தெரிந்திருந்தால் இலகுவாக இருக்கும் என்பது அந்தப் படத்தின் ஒரு குறைதான். ஆனாலும் சிறிய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

முதலில் அந்தப் படத்தின் அடிப்படை அம்சமே, ஈர்ப்பு விசை என்பதுதான், அதோடு நேரம் என்கிற வஸ்து எப்படி ஈர்ப்பு விசையோடு சேர்ந்து இந்த இயற்கையை ஆள்கிறது என்பதே படத்தின் அடிப்படை. இதனை விளங்கிக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்

Continue reading “இன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை”

உங்களுக்கு இருளென்றால் பயமா?

எல்லோருக்கும் இருளைப் பார்த்து தங்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் பயம் கொண்டிருப்பார்கள். நடக்கும் போது சப்தம் எழுப்பும் தரை, காற்றில் ஆடும் திரைச்சீலை என்று இரவில் எழுமாறாக இடம்பெறும் நிகழ்வுகள் எம்மை பயம் கொள்ளச்செய்யலாம். ஆனால், எமக்கு இருட்டின் மீது பயம் கிடையாது, மாறாக அந்த இருளில் ஒழிந்திருக்கும் ஒன்றில்தான் பயம். Continue reading “உங்களுக்கு இருளென்றால் பயமா?”

குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

நமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன என்றால், எவ்வளவு பெரியது எமது பால்வீதி என எண்ணிப்பாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம். Continue reading “குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்”