பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம். Continue reading “பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்”

DNA வில் ஒரு கணணி வைரஸ்

வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர்.  இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே. Continue reading “DNA வில் ஒரு கணணி வைரஸ்”

உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்

ஆகஸ்ட் 2016 – ஆர்டிக் வட்டப் பிரதேசத்தினுள் இருக்கும் வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஒரு பையன் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறான். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான். அவனைப்போலவே தொன்னூருக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், அதில் ஐம்பதிற்கும் அதிகமானோர் சிறுவர்கள். இந்தப் பையன் இறக்க காரணமாக இருந்ததும், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட காரணமாக இருந்ததும் அந்திராக்ஸ் எனப்படும் ஒரு தொற்றுநோய், இதனை Bacillus anthracis எனும் பக்டீரியா தோற்றுவிக்கிறது. திடிரென வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஆந்திராக்ஸ் தொற்று உருவாகக் காரணமென்ன? Continue reading “உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்”

அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு

The Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம். Continue reading “அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு”

உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி

MIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும். Continue reading “உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி”

உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

முன்னைய பாகங்கள்

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்


அறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை. Continue reading “உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்”

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

இந்தப் பிரபஞ்சத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தும் பலவிடயங்கள் உண்டு. இரவு வானையும், அதில் தெரியும் மின்மினிப் புள்ளிகளையும் போல என்னை மெய்சிலிர்க்க வைத்தவை வேறு ஒன்றும் இல்லை எனலாம். சிறுவயது முதலே இரவு வானில் மின்னும் விண்மீன்கள், பிரகாசிக்கும் கோள்கள், மற்றும் வீரென்று வேகமாகச் செல்லும் செய்மதிகள், உடைந்துவிழும் வான்கற்கள் இப்படி என்னால் பார்க்க முடிந்தவை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு அதனைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டியது! Continue reading “உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்”

உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

இதுவரை பூமியில் ஐந்து உயிரினப் பேரழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது, அண்ணளவாக 540 மில்லியன் வருடங்களுக்கு முன்பு எடியகரன் காலம் (Ediacaran period) முடிவுக்கு வந்த காலமாகும். பல மில்லியன் வருடங்களாக எந்தவொரு அழிவையும் சந்திக்காத முதலாவது பலகல அங்கிகள் பாரிய உயிரினப் பேரழிவை சந்தித்தது.

[பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்]

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள்,  இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.

Continue reading “உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?”

48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் 48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குதிரை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியவிடயம் இந்தக் குதிரை கற்பமாக இருந்துள்ளதுடன், அதன் குட்டியின் திசுக்கள் மற்றும் எலும்புகள் சில அப்படியே பாதுகாப்பாகவும் இருகின்றது.

கடந்த வருடத்தில் முள்ளந்தண்டுள்ள தொல்லுயிரியல் கழகத்தின் கூட்டத்தில் இந்தக் குதிரையின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டாலும், புதிய ஆய்வு முடிவுகள், தாய்க்குதிரையின் கருப்பை சார்ந்த பகுதிகளில் இருக்கும் சிதையாத திசுக்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான உயிரினங்களில் மிகப்பழைய படிமமாகும் எனக் கூறுகின்றது.

Continue reading “48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு”

ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை

எழுதியது: சிறி சரவணா

முதன்முறையாக ஆய்வுகூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். தாயின் வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்த மூளை வெறும் பென்சில் அழிறப்பர் அளவுள்ளது.

ஆனாலும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித உணர்வுகளையும் உணரும் ஆற்றலை இந்த “வளர்த்த” மூளை கொண்டில்லை. அதுமட்டுமல்லாது, இதைவிட பெரிதாக மூளையை வளர்ப்பதற்கு, சிக்கலான இரத்தநாளங்கள் தேவைப்படும், அப்படியான இரத்தநாளங்களை உருவாக்கத் துடிக்கும் இதயமொன்றும் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Continue reading “ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை”

ஆபிரிக்க யானைகள்

எழுதியது: சிறி சரவணா

நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு இந்த ஆபிரிக்க யானைகள். ஆசியாவில் வாழும் யானைகளை விட சற்றுப் பெரிய இந்த யானைகள், பாரிய ஆபிரிக்க கண்டம் போன்ற வடிவில் அமைந்த காதுகளைக் கொண்டு காணப்படும். ஆனால் ஆசிய யானைகள் வட்ட வடிவமான காதுகளைக் கொண்டிருக்கும்.

Continue reading “ஆபிரிக்க யானைகள்”

பச்சைக் கடல் ஆமைகள்

எழுதியது: சிறி சரவணா

கடலில் வாழும் பெரியவொரு ஆமை இனம் இந்த பச்சைக் கடல் ஆமை. பொதுவாக அயனமண்டல (tropical) மற்றும் மித-அயனமண்டல (subtropical) கடற்கரை சார்ந்த பகுதிகளில் காணப்படும் இந்த வகையான ஆமைகள் அகலமான, வழுவழுப்பான ஆமை ஓட்டைக் கொண்டிருக்கும்.

இதனது “பச்சை” என்கிற பெயருக்குக் காரணம், அதன் ஆமை ஓட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பச்சை நிறக் கொழுப்புப் பகுதியாகும். இதனது ஓடு பழுப்பு நிறமானது. இந்த பச்சைக் கடல் ஆமையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அட்லாண்டிக் கடலில் வாழும் பச்சை ஆமைகள், மற்றவை கிழக்கு பசுபிக் கடற்பகுதியில் வாழும் பச்சை ஆமைகள். விஞ்ஞானிகள் இவை இரண்டும் ஒரே இனமா அல்லது வேறு வேறு இனமா என்று இன்றும் தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகின்றனர்.

Continue reading “பச்சைக் கடல் ஆமைகள்”

இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்

எழுதியது: சிறி சரவணா

என்னடா புதுக்கதையா இருக்கு என்று நீங்கள் சிந்திக்கலாம்! நாம் உண்ணும் உணவு நமக்கு சக்தியை தருகிறது. எல்லா உயிரினங்களும் ஏதோவொரு வகையில் சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன, பொதுவாக எல்லாமே உணவுதான், இறுதியில் அது சக்திதான். ஆனால் இங்கு நடைபெறுவது கொஞ்சம் விசித்திரமானது.

இந்த வகை பாக்டீரியாக்கள், சக்தியை அதனது அடிப்படை அமைப்பில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, அதுதான் இலத்திரன்கள் (electrons)! இவை பாறைகளில் இருந்தும் கனிமங்களில் இருந்தும் இலத்திரன்களை பிரித்தெடுத்து உண்கின்றன. ஏற்கனவே இரு வேறுபட்ட பாக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது உயிரியலாளர்கள் பாறைகளுக்கும், சேற்றுக்கும் சிறியளவு மின்சாராத்தை பாச்சுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்களை கவரமுடியும் என கண்டறிந்துள்ளனர்.

Continue reading “இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்”

முடிபோல பனி? இயற்கையின் விந்தை

எழுதியது: சிறி சரவணா

இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது சற்று வித்தியாசமான உயிரினம் போலத் தெரிகிறதா? வயதுபோன தாத்தாவின் சவரம் செய்யப்பட முடி? இல்லை இல்லை! இது வெறும் பனி என்றல் உங்களால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்.

சில காடுகளில் ஈரப்பதம் கூடிய குல்ரிகால இரவுகளில் இப்படியான பனி அமைப்பு இறந்துபோன மரத்துண்டுகளில் உருவாகின்றது. இப்படி இரவில் உருவாகும் இந்த முடி போன்ற பனியால் ஆனா அமைப்பு, காலை சூரியனைக் கண்டதும் உருகிவிடும். மீண்டும் அடுத்த இரவில் உருவாகும்!

Continue reading “முடிபோல பனி? இயற்கையின் விந்தை”

துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்

எழுதியது: சிறி சரவணா

இந்த இயற்கை பல புதிய அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எந்தவித மாறுபாடுகளும் இருக்கமுடியாது. இயற்கையில் இருந்துவரும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்களும் எதோ ஒரு விதத்தில் எமது ஆச்சரியத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. உண்மையில் பார்க்கப்போனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னரும் எமது ஆச்சரியம் குறையவேண்டும் அல்லவா, ஏனென்றால் எமக்குத் தெரிந்த விடயங்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே! ஆனால் இந்த இயற்கை அதற்கும் விதிவிலக்காக இருக்கறது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் எமக்குத் தெரிந்தவற்றைவிடவும் தெரியாத பல விடயங்களைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகிறது, அந்தவகையில் ஒரு புதிய ஆச்சரியமிக்க ஒரு கண்டுபிடிப்பே Erythropsidinium எனப்படும் ஒரு ஒருகல அங்கி. அப்படி என்ன விசேசம் இந்த அங்கியில் இருக்கிறது என்றால், இதன் கண்கள் போன்ற அமைப்பு!

Continue reading “துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்”

உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.

லெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

Continue reading “உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு”

சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்

எழுதியது: சிறி சரவணா

பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும், 5000 புதிய வைரஸ்களையும், 15000 இற்கும் மேற்பட்ட ஒரு கல அங்கிகளையும் இனம்கண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை புதிய, இதற்கு முன்பு இனங்காணப்படாத உயிரினங்களாகும்.

Continue reading “சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்”

புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது

புதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.

இந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Continue reading “புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது”