பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் முறுகிய பனிப்போர் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவந்தது என்றால் சற்றே முரணான விடையம்தான். பனிப்போர் நடந்திருக்காவிட்டால் மனிதன் நிலவில் கால் வைத்திருப்பானா என்பதே ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கேள்விக்குறி! Continue reading “பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்”

பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

பனி படர்ந்த காலைவேளையில் விடியலுக்கு முன்னர் எழுந்து பார்த்திருக்கிறீர்களா? புகை போன்ற பனி மண்டலம் சூரியனது ஒளி வந்தவுடன் மெல்ல மெல்ல மறைந்துவிடும். சூரியனது வெப்பம் பனியை உருக்கிவிடும். நமது சூரியன் பூமிக்கு இன்னும் அருகில் இருந்தால் இன்னும் வேகமாக பனியை அதனது வெப்பம் உருக்கிவிடும். Continue reading “பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?”

குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

நமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன என்றால், எவ்வளவு பெரியது எமது பால்வீதி என எண்ணிப்பாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம். Continue reading “குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்”

அளவுக்கதிகமாய் பிறந்த விண்மீன்கள்

முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒன்றும் இல்லை. சில சில்லறைத்தனமான கேள்விகள்தான் மகத்தான விடைகளுக்குக் காரணமாக இருந்திருகின்றன. ஒரு உதாரணத்திற்கு, ஏன் விண்வெளி இருளாக இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்க்கலாம். இதற்குப் பதிலளிக்க, விண்மீன்களுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும், ஒளியின் வேகம் என்பனவற்றை நாம் ஆராயவேண்டும். மேலும் இந்தப் பிரபஞ்சம் எப்படி தொடர்ந்து விரிந்துகொண்டு இருக்கிறது என்றும் அறியவேண்டும்.

இதனைபோலவே, விண்ணியலாளர்கள் ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு எளிமையான கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கேள்வி இதுதான்: ஏன் சில விண்மீன் பேரடைகளில் மட்டும் அதிகளவான விண்மீன்கள் உருவாகின்றன? மேலோட்டமாக பார்க்கும்போது இது வெளிப்படையான கேள்வியாகத் தெரியலாம் – பெரிய விண்மீன் பேரடைகள் அதிகளவு வாயுக்களைக் கொண்டிருக்கும். ஆகவே பெரிய விண்மீன் பேரடைகளில், சிறிய விண்மீன் பேரடைகளைவிட அதிகளவான விண்மீன்கள் பிறக்கும். விண்மீன்களின் உருவாக்கத்திற்கான மூலக்கூரே இந்தப் பிரபஞ்ச வாயுக்கள் தானே!

eso0643a
படத்தில், வினைத்திறனாக அதிகளவு விண்மீன்கள் உருவாகிக்கொண்டிருக்கும் விண்மீன் பேரடை. நன்றி: ESO

இது பொதுவான உண்மையாக இருப்பினும், இது உறுதியான சட்டம் இல்லை. ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்த விஞ்ஞானிகள், சம அளவுகொண்ட வாயுக்களை கொண்டுள்ள விண்மீன் பேரடைகளில், தற்போது உருவாகும் விண்மீன்களை விட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதிகளவான விண்மீன்கள் உருவாகியுள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.

நமது சூரியத்தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான பால்வீதியில், தற்போது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விண்மீன் பிறக்கிறது. ஆனால் முன்னொரு காலத்தில், விண்மீன் பேரடைகளில் ஒவ்வொரு வருடமும் சிலநூறு விண்மீன்கள் பிறந்துள்ளன!

இறந்த காலத்தில் ஏன் விண்மீன் பேரடைகள் அதிக வினைத்திறனுடன் விண்மீன்களை உருவாக்கியது என்று இன்னும் விஞ்ஞானிகளால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இதற்குக் காரணம் விண்மீன் பேரடைகள் அதிகளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சம் விரிவடைவதால், தற்போது இருப்பதைவிட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் சிறிதாக இருந்தது, அப்போது விண்மீன் பேரடைகள் ஒன்றுகொன்று நெருக்கமாக இருந்ததனால் அவை அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த மோதலில் இருந்து பல விண்மீன்கள் உருவாகியிருக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கறது.

மேலும் ஒரு தகவல்

பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியது. இது பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி சொற்ப காலமாகும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://unawe.org/kids/unawe1602/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam

விண்மீன்களின் நிறங்கள்

சூரியன் ஆரஞ்சு நிறம் போலத் தெரிகிறது அல்லவா? மதியவேளையில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகத் தெரியும். அதேபோல விண்மீன்கள் பல வண்ணங்களில் இருக்கின்றன. அதற்காக பிங்க், பச்சை, ஊதா என்றெல்லாம் இல்லை. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வெள்ளை மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் சில வேறுபாடுகளுடன் விண்மீன்கள் காணப்படுகின்றன. காணப்படுகின்றன என்பதைவிட இந்த நிறங்களில் நாம் விண்மீன்களைப் பார்க்கலாம் என்பதே சரி. இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கலாம்.

Continue reading “விண்மீன்களின் நிறங்கள்”

ஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்

நாம் இரவு வானை அவதானிக்கும் போது, விண்மீன்கள் எல்லாமே சிறிய புள்ளிகளாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறிய புள்ளிகளில் பாதிக்குப் பாதி, ஒரு விண்மீனில் இருந்துவரும் ஒளி அல்ல, மாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும்.

Continue reading “ஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்”

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு

இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்காத விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு விண்மீன் பேரடையும் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ளது. பிரபஞ்சம் உருவாகி அதன் பின்னர் அது குளிர்வடைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஒன்று சேர்ந்து விண்மீன்கள் உருவாகின.

எப்போதுமே எமக்கு இருக்கும் கேள்வி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி எவ்வளவு காலத்தில் முதலாவது விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்பதுதான்.

Continue reading “பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு”

பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

எமது பிரபஞ்சம் போலவே ஒரு பிரபஞ்சம் செய்ய என்ன சேர்மானங்கள் தேவை? இதோ பின்வருவன:

  • 3 கப் ஹைட்ரோஜன்
  • 1 கப் ஹீலியம்
  • தேவையானளவு லிதியம்
  • கொஞ்சமே கொஞ்சம் பெரிலியம்

இப்போது இவை அனைத்தையும் ஒன்றாக நசுக்கி மிக மிகச் சிறியவொரு பந்தாக ஒன்று திரட்டி பாதுகாப்பான தூரத்தில் வைத்துவிட்டு, இப்போது சற்று தொலைவில் நின்றுகொள்வோம், பெருவெடிப்பிற்காக!

Continue reading “பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு”