மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!

இந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ! ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல்! Continue reading “மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!”

ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்?

LIGO ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஈர்ப்பு அலைகளை கண்டறிந்துவிட்டதாக நேற்று உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டனர். ஐன்ஸ்டீன் கூறிய பொதுச்சார்புக் கோட்பாட்டின் ஒரு அடிப்படை அம்சமான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இதுவரை கண்டறியப்படாமலே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்!

Continue reading “ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்?”

சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்

உங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

Continue reading “சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்”