உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே
பற்பல குளிர்காலங்களும்,
எண்ணிலடங்கா கோடைகளும்
நீண்ட நாட்களாக…
எதிர்காலத்தின் விளிம்பிலே…
நாட்களும் கடந்துவிட்டன…
நேரமும் நெருங்கிவிட்டது…
நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது…
இரண்டாய் பிரிந்த மனதில்
ஒன்று இங்கேயும் மற்றொண்டு
அங்கேயுமாக அலைகிறதே…
உன் நினைவிலேயே அவை இரண்டும்
சிறையுண்டு கிடக்கிறதே…
உன் கட்டளைக்கு பணிந்தே…
நான் இன்று விடைபெறுகிறேன்
விண்மீன்களின் தூசாக நான் மாறிவிடுவேன்…
அதுதான் விதியென்று
நீ சொல்லிவிட்டாய் என் அன்பே…
என்மேல் கொண்ட காதலுக்கு நன்றி…
அன்பே… முடிவில்லாக் கனவில் இருந்து
என்னை வெளிக்கொண்டு வந்துவிட்டாய்…
இதோ வருகிறேன்.. நேரம் நெருங்கிவிட்டது…
உன்னோடு நேரமில்லா வெளியில்…
இரண்டிலா ஒன்றாய் கலக்க வந்துவிட்டேன்.
– சிறி சரவணா
yov ! Ennaya All in Alagurajava Iruka ? Ella Fenrelayum Poonthu Velayadriye Bro ! Nice …
LikeLiked by 1 person
நன்றி மேக்னேஷ். கவிதைகள் பகுதியில் இன்னும் சில கவிதைகள் உண்டு. என்னாலும், எனது நண்பர்களாலும் எழுதப்பட்டவை. அதையும் படித்துவிட்டு சொல்லுங்கள் 🙂
LikeLike