புளுட்டோவில் உயிரினம் இருக்குமா?

எழுதியது: சிறி சரவணா

கடந்த மாதத்தில் விஞ்ஞான உலகின் ஒரு சாதனைக்கு எடுத்துக்காட்டாக நியூ ஹொரைசன் விண்கலம் புளுட்டோவிற்கு அருகில் சென்று படம் பிடித்ததுடன் பலவேறு தகவல்களையும் சேகரித்து அனுப்பியது. இன்னமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

இதுவரை கிடைத்த தகவலின் படி, புளுட்டோவின் மேற்பரப்பில் நாமறிந்த உயிரினம் வாழ்வதற்கான எந்தவொரு சூழ்நிலையும் இல்லை. ஆனால் ஒருவேளை, புளுட்டோவின் மேட்பரப்பிற்கு கீழே, அதாவது உறைந்த பனிப் பாறைகளுக்கு கீழே திரவநிலையில் கடல் போன்ற அமைப்பு இருந்தால், நிச்சயம் அங்கு உயிரினம் இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார் பிரபல பிருத்தானிய இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ் (Brain Cox).

இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ்
இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ்

இதற்குக் காரணம், நியூ ஹொரைசன் விண்கலம் அனுப்பிய தகவல்கள். ஆய்வாளர்கள் எதிர்பார்க்காத பல்வேறுபட்ட நிலஅமைப்புக்கள் புளுட்டோவில் கண்டறியப்பட்டுள்ளது. 3500 மீட்டார் உயரமான பனிமலை மற்றும் பனிச் சரிவுகள் என்பன அவற்றுள் அடங்கும்.

இதனைப் பற்றி நியூ ஹொரைசன் ஆய்வாளர் அலன் ஸ்டேர்ன், இவை H20 பனி என்கிறார். அதாவது பூமியில் இருப்பது போன்ற நீரால் ஆன பனி. மற்றும் புளுட்டோவில் நீர்ப் பனி இருப்பதை தற்போதுதான் முதன் முதலில் ஆய்வாளர்கள் அவதானிகின்றனர். அங்கு அதிகளவில் நீர்ப் பனி இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.

150714084003-01-pluto-horizon-0714-super-169
புளுட்டோ

ஆனாலும் அங்கு மேட்பரபிற்கு கீழே நீர் இருக்கலாமா இல்லையா என்று தெரிய நியூ ஹொரைசன் விண்கலத்தில் இருந்து மேலும் தகவல்கள் எமக்கு வரவேண்டும். இதுவரை நியூ ஹொரைசன் விண்கலம் வெறும் 5% தகவல்களைத்தான் அனுப்பியுள்ளது. அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு அது சேகரித்த தகவல்களை நமக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

புளுட்டோவில் உயிரினம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தாலும், நாம் அங்கு பெரிய மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களை எதிர்பார்க்க முடியாது. அனேகமாக ஒருகல அங்கிகள் காணப்படலாம் என்கிறார் இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ்.

நியூ ஹொரைசன் அனுப்பும் தகவல்களுக்காக பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

https://www.facebook.com/parimaanam


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s