பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தால், அது நிலக்குழியில் போடப்படலாம், அல்லது கடலில் கொட்டப்பட்டு நீரில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மிதந்து திரியலாம். அடுத்த நூறு வருடங்களில் இந்தப் பூமி எப்படியிருக்கும் என்று ஒருவராலும் கூறிவிடமுடியாது, ஆனால் அந்த பிளாஸ்டிக் போத்தல், உக்கலடையாமல் அப்படியே பிளாஸ்டிக் போத்தலாகவே இருக்கும்!

இதனைத் தடுக்க என்ன செய்யலாம்? பிரபஞ்சத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மறுசுழற்சி செய்யலாம்! முன்னொரு காலத்தில், அதாவது நமது சூரியன், பூமி மற்றும் சூரியத்தொகுதி என்பன தோன்றமுதல் இருந்த முதலாவது விண்மீன்கள், ஹைட்ரோஜன் வாயுவை எரித்து ஹீலியமாக மாற்றின. பின்னர் அந்த ஹீலியத்தை எரித்து கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஏனைய இரசாயன மூலக்கூறுகளை உருவாக்கின.

மனிதர்களைப் போலவே, விண்மீன்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன. இவை சூப்பர்நோவா வெடிப்பில் இறக்கும் போது, அவற்றினுள் புதிதாக உருவாகியிருந்த இரசாயன மூலக்கூறுகள் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.

eso1535a
இறால் நெபுலா. நன்றி: ESO

இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது, விண்வெளியில் உள்ள நெபுலா எனப்படும் பிரதேசமாகும். பல மில்லியன் வருடங்களாக இந்த நேபுலாவில் உள்ள வாயுக்களில் இருந்து புதிய விண்மீன்கள் பிறக்கின்றன. அதேபோல பல மில்லியன் வருடங்களாக இந்த விண்மீன்கள் இறந்து அதனில் உருவாகிய வாயுக்களை நேபுலாவிற்கே மீண்டும் கொடுக்கின்றன. அதிலிருந்து புதிய விண்மீன்கள் உருவாகின்றன, இதுவொரு சுழற்சியாக நடைபெறுகிறது.

இப்படியான ஒரு மறுசுழற்சி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாவிட்டால், சூரியன், எமது பூமி மற்றும் சூரியத்தொகுதியே உருவாகியிருக்காது. இதே மறுசுழற்சிதான் பூமியில் உயிரினங்கள் தோன்றவும் காரணமாகும். அதேபோல பூமியில் தொடர்ந்து உயிரினங்கள் வெற்றிகரமாக உயிர்வாழ நாமும், நாளாந்த வாழ்வில் மறுசுழற்சியை ஒரு முக்கியவிடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்!

மறுசுழற்சி என்பது எப்பொழுதும் கடினமான ஒரு வேலையல்ல; சிலவேளைகளில் அது கேளிக்கையான விடயமாகவும்இருக்கும்! பிளாஸ்டிக்  போதல்களைக் கொண்டு இலகுவாக சில கைப்பணிப்பொருட்களை எப்படி செய்யலாம் என்று பின்வரும் லிங்கில் பார்க்கவும்.

http://www.boredpanda.com/plastic-bottle-recycling-ideas/


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1538/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s